Skip to main content

Posts

Showing posts from March, 2022

இரவுக்கு ஆயிரம் கண்கள்

  வெகு நாட்களுக்கு முன்பு அந்தக் கவிதையைப் படித்தேன்.  The night has a thousand eyes, And the day but one; Yet the light of the bright world dies WIth the dying sun. The mind has a thousand eyes, And the heart but one; Yet the light of the whole life dies When love is done. இந்தக் கவிதையை எழுதியவர் போர்டில்லான் என்பவர். உதகமண்டலத்துக்கு ஒரு முறை சென்ற போது ஒரு குடிலில் தங்க வாய்த்தது. அது மிகப் பழமையானது. கிறித்துவத் தேவாலயத்தோடு இணைந்தது. அந்தக் குடிலில் ஒரு கணப்பு இருந்தது.  ஆனால் நெருப்பு இல்லை. பல நாட்களாக உபயோகத்தில் இல்லை. கணப்பின் அருகில் புத்தக அலமாரி இருந்தது. அதில் சில புத்தகங்கள் இருந்தன. ஆனால் படிப்பவர் இல்லை. தூசி படர்ந்து அடர்ந்திருந்தது. அத்தனையும் ஆங்கிலக் கவிதைப் புத்தகங்கள். அதில் ஒரு புத்தகம் An Anthology of Modern Verse என்று. நீள வாக்கில் கோடுகள் போட்ட நீல நிற கெட்டி மேலட்டையுடன் பைண்டு செய்யப்பட்டு இருந்தது.  பதிப்பகத்தின் பெயர் Methuen & Co. Ltd  36 Essex Street W.C. London என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தாமஸ் ஹார்டிக்கு இந்தப் புத்தகம...

பற்றிலாத பாவனை

  யாவையும் யவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்      சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால்       ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில்,        அவனையும் கூட லாமே. இது நம்மாழ்வார் திருவாய்மொழி சிறியேனால் இதனைப் பொருள் கொள்ள முடியுமா?  பிரித்து பொருள்  அறிய முயலலாம். பிழை கண்டால் பெரியோர் பொறுத்து அருள்க. அவன் எல்லாமாக இருக்கிறான். அவன் எல்லோரும் ஆக இருக்கிறான். இந்த எல்லோருக்கும் அவரவர் விதி வழி துன்பம் நேரிடுகிறது. இன்பம் வருகிறது. அவன் அதாவது பெருமான் அவற்றுள் தோய்வது இல்லை.  புலன்களுக்கு அவன் அகப்படுவதில்லை.  உடலுக்கு உள்ளே ஆன்மா உறைகின்றது. உடலுக்கு இளமை முதுமை உண்டு. ஆன்மாவுக்கு அது எல்லாம் இல்லை. ஆனால் உடலோடு இயன்ற தொடர்பின் பயனாக இன்ப துன்பங்களில் ஆன்மா பங்கேற்கிறது.  இதிலே தளைப் படாமல் எந்த ஒரு பற்றும் இல்லாத ஒரு பாவனையை அடையக் கூடுமானால் பெருமானை அடையலாம். நம்மாழ்வார் திருத்தாலாட்டு என்று ஒரு புத்தகம். ச...