Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை

தபாலில் இடாத கடிதம்

            தபாலில் இடாத கடிதம் சிறுகதை                                         தி சந்தானம் வெகு நாட்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இருக்கும் இடம் தெரியாது. இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேருமா? உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எண்ணம் கொண்டு போகும் வேகத்தில் எழுதிப் போகிறேன். என்னுடைய கையெழுத்து மாறியிருப்பதாக நீங்கள் கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நெல்லின் மணியைப் பொறுக்கி எடுத்துச் சாய்த்து சாய்த்து வைத்தது போல நீண்டு சிறிதான உங்கள் கையெழுத்து ஞாபகம் வருகிறது. கண்ணீர் வருகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. காரணம் தெரியவில்லை. நட்பும் ஆன்மீகம் போலத்தானோ? உங்களுடைய சிரிப்பு, மென்மையான பேச்சு எல்லாம் எனது மனதில் ஒரு ஆன்மீகத்தையே விதைக்கிறது. நான் மேன்மேலும் நம்பிக்கை பெறுகிறேன். எப்போதும் உங்களைச் சார்ந்து இருக்கவே விரும்புகிறேன். உங்களால் நிராகரிக்கப்படவில்லை என்பதிலிருந்தே ஆறுதல் பெறுகிறேன். உங்களுடைய இங்கிதம் ஒ...

குள்ளச்சாமியும் நானும்

        குள்ளச்சாமியும் நானும்                          சிறுகதை                                                   தி சந்தானம் எங்கள் பகுதிக்கு ஓரு சாமியார் வந்தார். கட்டை குட்டையான உருவம். இளந்தொந்தி. வெண்பற்கள். நீண்டு வளர்ந்த தாடி. எடுப்பான மூக்கு. சுடர் விடும் கண்கள்.  இது அவருடைய புற அடையாளம்.   அவருடைய அகத் தேடல்கள் இன்னதென்று பிடிபட்டது இல்லை. அவர் அதிகம் பேசுவது இல்லை.  சில வார்த்தைகள் பேசுவார் அரிதாக. அதில் பொய் இருக்காது.  எளிய உண்மைகள் இருக்கும்.  சூரியன் கிழக்கில் தானே உதிக்கும்....

அவனது நரகம்

                         அவனது நரகம்                             சிறுகதை                                               தி சந்தானம்                                   1 நான் அந்த சிறிய ஸ்டேஷனில் இறங்கினேன். என்னை அழைத்துப் போக அவன் வந்திருந்தான்.  கனமான எனது சூட்கேஸை வாங்கிக் கொண்டான். படுக்கையை நான் எடுத்துக் கொண்டேன். நாங்கள் நடக்க...