Skip to main content

Posts

Showing posts from May, 2022

மழை கொண்டு வந்த போது

 இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. கோடையின் கடுமை சற்றே குறைந்திருக்கிறது. தாகத்தோடு அலைந்த பறவைகள் ஆசுவாசம் கொண்டிருக்கின்றன.. மழை நீரில் மரத்தின் பச்சை இலைகள் மினுங்குகின்றன.  மேகங்கள் மழையை கொண்டு வருகின்றன. மழை பொழியும் போது மனம் நிறைந்து ததும்புகின்றது. அத்வைத தாஸ் என்று ஒரு கவிஞர். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு  Songs of sanity என்பது. இந்தத் தொகுப்பில் ஒரு கவிதை எனது குறிப்பில் இருந்தது. அதை நான் தமிழில் மொழி பெமர்த்தேன்.  இப்படி அவள் நகரத்திற்கு மழை கொணர்ந்தாள் அவள் மேகத்தில் இருந்த போது பூமியைத் தொடுவதற்கு முன் பிறகு அடுத்த நாள் காலை மழை பெய்தது இறந்தவர் மீது சூரியனால் உலர்ந்தவர் மீது அவள் எங்கு சென்றாலும் மழை கொண்டு வருகிறாள் வெண்மையை சாம்பல் நிறமாக மாற்றுகிறாள்  சாம்பல் நிறத்தை ஆகாயத்திற்கு எடுத்துச் சென்று தனது சன்னலில்–படுக்கைக்கு மேல் இருத்தி விடுகிறாள் ஒரு நிலவும் துண்டு அவளுடைய கைப்பையிலிருந்து சற்றே எட்டாத தூரத்தில் இருக்கிறது சற்றே மெலிதாகத் தூங்குவதற்கு போதுமானதாக  இரவில் நட்சத்திரக் கூட்டங்கள் ஒழுங்கமைக்கப் பெறுகின்றன அவளது ர...

குறளும் இன்பமும்

  திருக்குறள் செய்த திருக்கூத்து என்று ஒரு கதை. புதுமைப்பித்தன் எழுதினார். அன்று இரவு  என்ற கதைத் தொகுப்பில் அது ஒரு கதை. புதுமைப்பித்தன் எழுதும் முறையில் ஒரு அலட்சியம் இருக்கும். மேதமைக்கே உண்டான அலட்சியம். மேலும் கேலி. திருக்குறள் செய்த திருக்கூத்து என்ற கதை கூடுதலான அலட்சியத்தோடு எழுதப் பட்டது போலத் தோன்றும். வெற்றிலையின் நரம்பைக் கீறி எறிந்த மாதிரி. வித்தல் ராவ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆவது அவரது வாழ்க்கை லட்சியம். ஒரு நாள் கசங்கிய காகிதம் அவர் கையில் அகப்படுகிறது. அதில் சிகப்பு மசியில் இவ்வாறு எழுதப் பட்டிருக்கிறது.  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை வித்தல் ராவுக்கு இது ஏதோ புரட்சிக்காரர்களின் சதி வேலை என்று படுகிறது.உடை முள் புதரோடு தவழ்ந்து சென்று காலடிகளைத் தொடருகிறார். ஒரு சிறிய கூட்டம். நடுவே ஒரு இளைஞன். சர்வகலாசாலை அதாவது பல்கலைக் கழக மாணவன். கழுத்தில் சிகப்புப் பட்டி. இந்தக் கொடுமை.. நாளைக்கு என்று சில வாரத்தைகள் காதில் விழுகிறது. புரட்சிக் கும்பல்தான்.  சந்தேகமே இல்லை. ...