Skip to main content

Posts

Showing posts from October, 2024

இல்லாத சொந்தங்கள்

 தீபாவளி என்றால் வழக்கமான கொண்டாட்டம் தவிர பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருவது பெரும் கொண்டாட்டம். புது ரிலீஸ் படத்தைத் தீபாவளி அன்றே பார்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் வயதில் மூத்தவர்கள்.இளைஞர்கள். அதாவது வேலை பார்ப்பவர்கள். கல்லூரியில் படிக்கின்றவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு புரளும் வாய்ப்பு பெற்றவர்கள். எல்லோரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள். அம்மாக்களுக்கு நிறைய வேலை இருக்கும். வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை வேளையில் சிறு பொழுது மட்டுமே புத்தாடை அணிவார்கள். சிறுவர்கள் நாள் பூராவும் புத்தாடையுடன் திரிவோம்.  இன்று மூன்று தெய்வங்கள் என்ற நிரைப்படத்தில் வரும் தாயெனும் செல்வங்கள் என்ற பாட்டு ஞாபகம் வந்தது. தீபாவளி கொண்டாட்டத்தை இசைக்கும் பாடல். சாதாரணமாக வீடும் உறவுகளும் கொண்டாடும் பண்டிகை. புத்தாடை இனிப்பு பட்டாசு என்று. இந்தப் பாடலில் சொந்தமில்லாமல் வந்த யாரோ மூன்று பேர் சொந்தமாக ஆகித் தீபாவளி கொண்டாடும் காட்சி. பாடலின் இறுதியில் வரும் வரிகள் இப்படி அமைந்து இருக்கும். எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் தாயாக மகனாக உறவாட...

எங்கும் அவன்

  சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் எங்கும் தானாய நங்கள் நாதனே 1.8.9 நம்மாழ்வார் திருவாய்மொழி Discus and Conch He has in his hands It's Him everywhere He is our Master In English T Santhanam

உண்மை அறிந்தவர்

  மாயையைப் பழித்தல்  உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வதும் ஒன்றுண்டோ !-மாயையே! எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் மாயையே-நீ சித்தத் தெளிவெனுந் தீயின்முன் நிற்பாயோ?-மாயையே! என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே!-நான் உன்னைக் கெடுப்பது உறுதியென்றே உணர்-மாயையே! சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு மாயையே!-இந்தத் தேகம் பொய் யென்றுணார் தீரரை யென் செய்வாய்!-மாயையே! இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப மாயையே!-தெளிந் தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ?-மாயையே! நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே-சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை-மாயையே! என்னிச்சை கொண்டுனை யெற்றி விட வல்லேன் மாயையே!-இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்-மாயையே! யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே!-உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை-மாயையே! பாரதியின் கவிதைகளில் நான் விரும்பிப் படிக்கும் கவிதைகளில் மேலே கண்ட கவிதையும் ஒன்று. பாரதியின் பாடல்கள் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது உண்டு. சிலர் சின்னஞ் சிறு கிளியை அழைத்து மேனி சிலிர்ப்பா...

உலகெல்லாம் நள்ளிருள்

  ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்  நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால் பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால் ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே  நம்மாழ்வார் திருவாய்மொழி ஊர் முழுதும் உறங்குகிறது. இந்த உலகம் முழுதும் இருள் சூழ்ந்து அடர்ந்து இருக்கிறது. நீர் எல்லாம் அலைகள் அடங்கி தெளிவாக இருக்கிறது. இரவு மிகவும் நீண்டு வளர்ந்தபடி இருக்கிறது. உலகத்தை எல்லாம் முழுதும் உண்டவன், பாம்பின் மேல் பள்ளி கொள்பவன் இன்னும் வரவில்லையே? எனது உயிரை இனி யார் காப்பாற்றுவார்கள்? The whole place is in slumber The whole world is pitch dark The waters still and clear The night is longer than long He who had the entire world He who has serpent as his bed He has not come,  Who shall then deliver me of my sins And save my soul? Nammalwar Thiruvaimozhi In English T Santhanam

பெருமழை நீடிக்காது

  லாவோட்சு சீனத்து அறிஞர். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் எழுதிய நூல் தாவோ தே ஜிங் என்பது. ஞானச் சுடர் தெறிக்கும் அதில் என்று கற்றவர்கள் கொண்டாடுவார்கள். சீனத்துத் தாவோ மார்க்கம் என்று பாரதி கொண்டாடியது இதைத் தான். அதிலிருந்து சில பொறிகள். Tao Te Ching Lao Tsu Translation A S Kiln Poetry in translation To speak infrequently Is natural. So a strong wind won’t last all morning, A downpour won’t last all day. What causes these? Heaven and earth. If even heaven and earth must rest, How much more so human beings? Therefore align yourself to the Way. Aligned with the Way you are one with the Way. Aligned with virtue you are one with virtue. Aligned with the heavens you are one with the heavens. The Way accepts this alignment gladly. Virtue accepts this alignment gladly. The heavens accept this alignment gladly. When there is lack of faith There is a lack of respect. விட்டு விட்டுப் பேசுவது இயல்பு தான் பலத்த காற்று காலை வரை தாங்காது பெருமழை காலை வரை நீடிக்காது இதற்கு...

இரு பறவைகள்

  யாசுனாரி கவாபத்தா ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்து நடை கவிதை போன்றது. இவர் 1968ம் வருடம் நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானியர் இவர். Canaries என்ற இந்தச் சிறுகதை Palm of the hand stories என்ற தொகுப்பில் உள்ளது                                         Canaries                                             Yasunari Kawabata                             இரு பறவைகள்                                           தமிழில் தி சந்தானம் அம்மையே, நான் வாக்களித்ததற்கு மாறாகப் பின்னொரு முறை உங்களுக்கு எழுதுமாறு ஆயிற்று. நீங்கள் போன வருடம் எனக்குத் தந்த பறவைகளை என்னால் இனியும் வைத்துக் காப...

காந்தி

  ரொமய்ன் ரோலண்டு என்ற பிரெஞ்சுக்காரர் காந்தியைப் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். இதை ஜெயகாந்தன் வாழ்விக்க வந்த காந்தி என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நாற்பது வருடங்களுக்கு முன்பு நண்பர் செளந்தர் இந்தப் புத்தகத்தைப் படிக்க தந்தார். ரொமய்ன் ரோலண்டின் அறிமுகக் கடிதத்தோடு தான் மிஸ் ஸ்லேட் (Slade) காந்தியை சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்தார். பல வருடங்கள் காந்தியோடே இருந்தார். கடினமான ஆசிரம வாழ்க்கைக்கு தன்னை பழக்கிக் கொண்டார். காந்தி இவருக்கு மீரா என்று பெயர் மாற்றம் செய்தார். மீராபென் என்று அனைவரும் அவரை அழைத்தனர்.  ரொமய்ன் ரோலண்டு காந்தியை பிரான்ஸில் சந்தித்தது குறித்து தனது நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் இவ்வாறு சொல்கிறார். அந்த சிறிய மனிதன் கண்ணாடி அணிந்திருந்தான். பற்கள் இல்லை. உடம்பின் மேற்பகுதியை வெள்ளை ஆடை மூடியிருந்தது. கால் பகுதியைத் துணியால் மறைக்கவில்லை. கால்கள் ஒல்லியாக இருந்தது. கொக்கு அல்லது நாரையின் கால்களைப் போல. மழிக்கப்பட்ட தலையில் ஆங்காங்கே முடி. மழையில் நனைந்து ஈரமாக இருந்தது. இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு வறண்ட சிர...

மழையோடு நடந்து

 A walk in the spring rain என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அது தற்செயலாக நடந்தது. தலைப்பிலே ஒரு கவிதை இருப்பது போல தோன்றியது. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் அது.  இந்தப் படம் பார்க்கும் வரை இன்கிரிட் பெர்க்மன் என்ற பெண்மணியைப் பற்றித் தெரியாது. A walk in the spring rain 1970ம் ஆண்டு வந்திருக்கிறது. இன்கிட் பெர்மன் இந்தப் படத்தில் தோன்றும் போது ஐம்பது வயதைக் கடந்து விட்டிருந்தார். திரைக்கதை என்னவென்றால் பெர்க்மனின் கணவர் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதற்கான தனிமை வேண்டி நாட்டுப்புறப் பகுதிக்கு வருகிறார்கள். வளர்ந்த மகளை ஊரில் விட்டு விட்டு. பெர்க்மன் கணவர் புத்தகம் எழுத உதவிகள் செய்கிறார். அன்டனி க்வின் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து தருகிறார். பெர்க்மன் இவருடைய எளிய கிராமியப் பண்புகளால் கவரப்படுகிறார். இயற்கையோடு இயைந்து இருக்கிறது அந்த மனிதனின் வாழ்வு. அவனால் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் வாய்க்கிறது. உள்ளங்கைகளில் அணில் குஞ்சின் குறுகுறுப்பை உணர்வது போல. அழகழகாய் ஆட்டுக் குட்டிகளை கைகளில் ஏந்துவதைப் போல. அந்த நல்ல பெண்மணி இந்த மனிதனிடம் பழகுவதில் ஆர்வம...