Skip to main content

Posts

Showing posts from December, 2024

நீர், காற்று, கல்

  Water hollows stone, wind scatters water, stone stops the wind. Water, wind, stone. Wind carves stone, stone's a cup of water, water escapes and is wind. Stone, wind, water. Wind sings in its whirling, water murmurs going by, unmoving stone keeps still. Wind, water, stone. Each is another and no other: crossing and vanishing through their empty names: water, stone, wind. Octavio Paz நீர் கல்லில் குழி செய்கிறது  காற்று நீரைத் தெறிக்க விடுகிறது  கல் காற்றை நிறுத்துகிறது நீர், காற்று, கல். காற்று கல்லைச் செதுக்குகிறது கல் ஒரு கோப்பை நீராக இருக்கிறது நீர் தப்பிச் செல்கிறது, காற்றாகிறது  கல், காற்று, நீர் காற்று சுழன்று ஓடும் போது பாடுகிறது நீர் கடந்து செல்லும் போது முணுமுணுக்கிறது கல் அசைவதில்லை, அமைதியாகக் கிடக்கிறது காற்று, நீர், கல் ஒவ்வொன்றும் வேறு ஒன்று மற்றேதும் இல்லை வெறும் பெயர்களாகக் கடக்கிறது, காணாமல் போகிறது நீர், கல், காற்று ஆக்டாவியோ பாஸ்   ஆங்கிலம் வழியாகத் தமிழில் தி சந்தானம்

வேனில் இன்னும் வரவில்லை

  Always it’s cold on this mountain! Every year, and not just this. Dense peaks, thick with snow. Black pine-trees breathing mist. It’s summer before the grass grows, Not yet autumn when the leaves fall. Full of illusions, I roam here, Gaze and gaze, but can’t see the sky Han-shan எப்போதும் குளிர் இந்த மலையில் இப்போது என்றில்லை எல்லா ஆண்டும் அடர்ந்த சிகரங்கள், அப்பிக் கொண்ட பனி கரிய பைன் மரங்கள் சுவாசிக்கும் மேகப் படலம் புல் முளைக்கு முன்னே வந்து விட்ட கோடை வேனில் இன்னும் வரவில்லை, விழுகின்ற இலைகள் இங்கே திரிகின்றேன், எல்லாம் மாயம்  ஆகாயம் காணுதில்லை பார்த்த விழி பார்த்த பின்னும்  தமிழில் தி சந்தானம் 

வெண்பாவைக் கொண்டாடு வோம்

 வெண்பா ஒரு சுவையான பா வகை. பள்ளி படிக்கும் காலத்திலேயே ஆர்வம் ஏற்பட்டு விட்டது. இது தான் வெண்பா என்று தெரியாமலே மனப்பாடம் ஆன ஒரு பாடல்.  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்– சவைநடுவே  நீடடோலை வாசியா நின்றான் குறிப்பறிய  மாட்டாதான் அவன்நல் மரம் வெண்பாவின் இலக்கணம் ஓரளவு பிடிபட்டது. தனிச்சீர் தளை எல்லாம் பரிச்சயமாயிற்று. இறுதிச் சீர் நாள், காசு, மலர் பிறப்பு என்றபடி அமைய வேண்டும் என்று புரிந்தது. பன்னிரெண்டு வயதில் நான் முதலாக வெண்பா எழுதிப் பார்த்தேன். எனக்கு இருந்த அரைகுறையான புரிதலோடு. ஏற்றமிகு கல்வியை ஏழையும் அறிந்திருப்பின் போற்றிப் புகழப் படுவான்- நற்றமிழா  சேற்றிலே பூப்பினும் செழுமையாய்ச் சிரிக்குமே  நாற்றமிகு நல்ல மலர். இறுதிச் சீர் நாள் காசு மலர் பிறப்பு என்றே அமைய வேண்டும் என்று பேதமையாகப் புரிந்து கொண்டேன். அப்படி இருக்க வேண்டியதில்லை. அது போன்று ஒலிக்கும் வேறு வார்த்தைகளும் வரலாம் என்று பின்னாட்களில் தெரிந்தது. நளவெண்பாவில் ஒரு பாடல் பாடமாக வரும். அது மனதில் பதிந்து போனது. நெஞ்சால் இம்மாற்றம் நினைந்திருக்க நீயல்லால்...

அச்சமில்லை

 வெகுஜன திரைப்படத்தாருக்கும் சில சமயம் சிகப்பின் மீது ஒரு பிடிப்பு வருவது உண்டு. அது சினிமாவுக்கு வைக்கும் தலைப்போடு முடிந்து விடும். அது எண்பதுகளின் காலம். வறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு படம் வந்தது. சிவப்பு சரியா இல்லை சிகப்புதானா என்று ஒரு விவாதம் நண்பர்களுக்கு இடையே அப்போது நடந்தது. அது குமாஸ்தா வேலைக்கு முண்டியடிக்கும் காலம். அதை இந்தத் திரைப்படம் முன் வைக்கும். புது டெல்லி கதைக்களம். டில்லியே பார்த்து அறியாதவர்களுக்கு அது ஒரு புதுமை. சிறிது இடைவெளிக்குப் பின் பாரதியின் பாடல்கள் இந்தப் படத்தில் ஒலித்தது. இந்தப் படத்தின் நாயகன் கமலஹாசன். தத்துவத்தில் பட்டதாரி.வேலை கிடைக்கவில்லை. பாரதியைப் பிடிக்கும் அவனுக்கு. அவர் பாடல்களை அவ்வப்போது எடுத்துச் சொல்வதும் பிடிக்கும்.. அப்பா சங்கீத வித்வான். பல விஷயங்களில் அப்பாவோடு முரண்படுபவன். ஒரு முறை அப்பாவின் தம்பூராவை விற்றுச் செலவழித்து விடுவான். செலவு என்றால் வேலைக்கு விண்ணப்பிக்கும் செலவுதான். மிச்சப் பணத்திற்கு அப்பாவிற்கு திராட்சைப் பழம் வாங்கித் தருவான். இளமையின் செருக்கு நீடாமங்கலத்தைச் சொந்த ஊராகக் கொண்ட சங்கீத வித்வானின் செ...

நான் மெய்யானவன்

I live in a village in the countryside, without a father or a mother. With no name, no rank in my clan.  Some people will call me any old name. Some people call me another.  No one is my teacher: I’m just a poor low creature like many another.  But I know myself. I’m real, and my heart is the Diamond. Han Shan நான் ஒரு கிராமத்தில் வாழ்கிறேன் அம்மா இல்லை அப்பா இல்லை குடிப் பெருமை இல்லை சிலர் என்னைப் பழைய பெயரில் அழைக்கிறார்கள் சிலர் வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள் யாரும் எனக்கு குரு இல்லை நான் ஒரு எளிய, தாழ்ந்த பிறவி யாரையும் போல ஆனால் எனக்கு என்னைத் தெரியும் நான் மெய்யானவன்  எனது இதயம் வைரம் தமிழில் தி சந்தானம்

தனக்குள்ளே சிந்தும் ஒளி

  If music be the food of love play on, Give me excess of it, the surfeiting, May sicken the appetite, and so die. நல்ல இசையைக் கேட்க வாய்க்கும் போது எல்லாம் அப்பா இதைச் சொல்வார். ஏற்ற இறக்கத்தோடு உணர்ச்சி பொங்கச் சொல்வார். இத்தனைக்கும் அவர் அதிகம் பேசுபவர் அல்ல. இசை அவரை நெகிழ வைத்திருக்கிறது. கண்களின் விளிம்பில் நீர் கட்டி விடும். கண்ணாடியைக் கழற்றி விட்டு அழகாகத் துடைத்து விட்டுக் கொள்வார். கர்நாடக இசை அவருக்குப் பிடிக்கும். அவர் பக்கத்தில் அமர்ந்து கச்சேரி கேட்பது ஒரு சிறந்த அனுபவம். இசைக்கு முழுவதுமாகத் தன்னைக் கொடுத்து விடுவார். ஓரு அசைவோ சிலிர்ப்போ வெளியில் தெரியாது. ஏதோ ஒரு ஆழத்தில் திளைத்திருப்பவராய் இருப்பார். ஆரம்ப காலத்தில் அவரது இந்த அனுபூதியைக் கலைக்கக் கூடாது என்று தெரியாது. அவசரப்பட்டு பாடகர் பாடும் ராகத்தைத் தவறாக ஊகித்து அவரிடம் சொல்லுவேன். . மெல்ல அவர் உலகத்திலிருந்து மீண்டு சன்னக் குரலில் கவனி என்று சொல்வார். பிறகு எல்லாம் அவருடன் கச்சேரி கேட்கும் போது இசையின் ஒரு சிறு கணத்தைக் கூடத் தவற விடத் தோன்றாது. அவர் கற்பிப்பது எல்லாம் அப்படித்தான். கற்பிக்காமல் கற்பிக...

நிலவொளியும் காதல் பாட்டும்

  1976ம் வருடம். கோடை விடுமுறையைக் கழிக்க ஈரோடு சென்றிருந்தேன். சித்தி வீடு அங்கே இருந்தது. அப்போது காற்றில் ஒரு பாடல் தவழ்ந்து வந்தது. அது ‘அன்னக்கிளி ஒன்னத் தேடுது’ என்ற பாடல். பாடலைக் கேட்க கேட்க ஒரு இனம் புரியாத சோகம் மனதைக் கவ்வியது. வில்லியம் வாரட்ஸ்வர்த்தின் The Solitary reaper என்ற கவிதை படித்த போது ஏற்பட்ட அதே உணர்வு. Perhaps the plaintive numbers flow.. என்ற பாதி வரி மட்டும் மனதில் ததும்பிச் சுழன்று கொண்டே இருந்தது. இந்தப் பாட்டு வந்த காலங்களில் காற்றில் தவழ்ந்து காதில் விழுந்தால் தான் உண்டு.  கேட்டுக் கேட்டுப் பாடல் பிரபலமாகும். அதற்குக் கொஞ்சம் நாளாகும். இப்போது எல்லாம் பாடல் வெளிவருவதற்கு கூட பெரிதாக விழா எடுக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு விடுதலை 2 படத்தின் இசை வெளியீடு நடந்தது. அந்த விவரங்கள் சேகருடைய பகிர்வு மூலம் தெரிந்தது. முதன் முதலாகக் கர்நாடக சங்கீத இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் ஒரு திரைப்பாடல் பாடியிருக்கிறார். மனசுலே மனசுலே என்று துவங்கும் அந்தப் பாடலைக் கேட்கவாம். Casablanca என்று ஒரு பழைய திரைப்படம். அதில் As time goes...