The Path On Which You Are Walking Alone by Pär Lagerkvist The lonely man is the weakest one. Not because he is alone but because He is denying what he is carrying within himself. Our soul, getting deeper, is the broad river of life. The path on which you are walking alone, is leading away from yourself. பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர். கவிஞர். நோபல் பரிசு வென்றவர். பாரபாஸ் என்ற இவரது நாவலுக்காக க.நா.சுப்ரமணியன் இந்தக் கதையை அன்பு வழி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அன்பு வழி போல ஒரு நாவல் எழுதி விட மாட்டோமா என்ற ஆசையில் தான் எழுதிப் போகிறேன் என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பாரபாஸ் என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமீபத்தில் படித்து முடித்தேன். பாரபாஸ் கொள்ளையன். சிலுவையில் ஏற்றப்பட வேண்டியவன். பஸ்கா விருந்து நாளில் குற்றவாளி ஒருவனை விடுதலை செய்ய முடியும். பிலாத்து மக்களிடம் கேட்கிறான். நசரேயன் என்ற ஏசு அல்லது கொள்ளையன் பாரபாஸ் இவர்களில் யாரை விடுதலை செய்ய வேண்டும் எ...