Skip to main content

Posts

Showing posts from June, 2022

மரத்தின் கிளைகள்

  மரத்தடியில் மம்மூட்டி நின்றிருந்தார். கை விரல்களில் பீடி புகைந்து கொண்டிருந்தது. அவரைச் சுற்றி நாலைந்து பேர். அந்திப் பொழுது. அப்போது சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டப வளாகத்தின் விளக்குகள் ஏற்றப் பட்டன.  மம்மூட்டியின் கரிய தலைமுடி வெளிச்சத்தில் மினுங்கியது.  உலகத் திரைப்பட விழா அன்று.பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஷாகா பிரஷோகா (மரத்தின் கிளைகள்) என்ற படம் திரையிடப்பட இருந்தது. இசையும் இயக்கமும் சத்யஜித் ரே. நானும் ஏ.ஜி. அலுவலகத்தில் பணி புரிந்த நண்பர் சுரேஷும் மண்டபத்துக்கு வெளியே இருந்தோம். மம்மூட்டியைப் பார்த்தபடி வேறொரு மரத்தடியில். உள்ளே நுழைய அனுமதிச் சீட்டு எங்களிடம் இல்லை. ரேயின் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. தமிழக அரசு விழாவை நடத்தியது. அரசு அலுவலர்கள் தான் அரங்க நுழைவில் இருப்பார்கள். படம் துவங்கும் போது உள்ளே அனுமதித்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அப்படி நடக்க வில்லை. நுழைவில் தடுத்து நிறுத்தப் பட்டோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது நண்பன் ஐ.ஓ.பி நரசிம்மன் அங்கே தென்பட்டது தற்செயல்....

நான் வரைந்த ஓவியம்

  பள்ளியில் ஆசிரியர்களிடம் அடி வாங்காமல் தப்புதல் கடினம். சிலர் கையால் அடிப்பார்கள். சிலர் அடி ஸ்கேலால் விளாசுவார்கள். இது போக எளிமையாக  காதைத் திருகுதல்  கன்னத்தைக் கிள்ளி இழைத்தல் போன்ற முறைகளும் உண்டு. வள்ளியம்மை டீச்சர் கசகசவென்று இரைச்சல் செய்தபடி பெஞ்சில் நாங்கள் அமராமல் இருக்கும் போது தலையில் ஸ்கேலால் போடுவார். யார் இவரென்ற கணக்கு கிடையாது. வசந்தா டீச்சர் மனக்கணக்கில் தவறு செய்தால் அருகில் வரவழைத்து அடிவயிற்றில் கிள்ளுவார். இதெல்லாம் ஆரம்பப் பள்ளி வரை. உயர்நிலைப் பள்ளி வந்த பின்பும் அடி விவகாரம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியில் மெளனமான நேரம் என்று உண்டு. மதிய இடைவேளையில் உணவு உண்டு பத்து நிமிடம் சென்று வகுப்புக்கு வர வேண்டும். யாரும் யாரோடும் பேசக் கூடாது. அமைதியாகப் பாடங்களைப் படிக்கலாம். யாரும் அசைந்தாலோ..ஏன் பக்கத்தில் திரும்பினால் கூட பெயரை கரும்பலகையில் எழுதி விடுவான் வகுப்பு லீடர்.  உடற்கல்வி ஆசிரியர் வகுப்பு வகுப்பாகச் சுற்றி வருவார். கையில் நீளமான குச்சி வைத்திருப்பார். பெயர் சொல்லி அழைத்தவுடன் வகுப்புக்கு வெளியே செல்ல வேண்டும். அவர் குச்சியை உ...