Skip to main content

Posts

Showing posts from July, 2024

ஒரு மனுஷ்யன்

ஒரு மனுஷ்யன்  வைக்கம் முகமது பஷீர் நீங்கள் என்ன ஏது என்று திட்டமிடவில்லை. வீட்டை விட்டு வெகு தொலைவில் நீங்கள் அலைந்து திரிந்தபடி இருக்கிறீர்கள். அங்கு இருப்பவர் பேசும் மொழி தெரியாது. ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி பேசத் தெரியும். வெகு சிலருக்குத் தான் இந்த இரண்டு மொழியும் தெரியும். என்னவென்றால் இது தேவையில்லாத சங்கடங்களில் முடியும். ஒரு ஆபத்தான சூழலில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். முற்றிலும் பரிச்சயம் அற்ற மனிதர் உங்களுக்கு உதவுவார். பல வருடங்கள் சென்றாலும் நீங்கள் அவரை மறக்க முடியாது. சில போது அவர் ஏன் உதவி செய்தார் என்ற வியப்பு அடங்காமலே இருக்கும். சரி..நீங்கள் நீங்கள் என்று சொல்ல வேண்டாம். நான் தான். நான் அந்த மனிதனை நினைத்த வண்ணம் இருப்பேன். நான் இப்போது எனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறேன். மனிதர்களைப் பற்றி எனக்கு தெளிவில்லாத கருத்துக்கள் உண்டு. என்னைப் பற்றியும் கூட. என்னைச் சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள். திருடர்கள் இருக்கிறார்கள். நோயால் பீடிக்கப் பட்டவர்கள் இருக்கிறார்கள். பித்துப் பிடித்தவர்களும் இருக்கிறார்கள். கவனமாக வாழ வேண்டியிருக்கிறது. உலகத்தில் நல்...

நான் ஏதும் இல்லை

  கல்லூரியில் ஹிந்தி மொழியைக் கற்றேன். தமிழ் இலக்கியம் போலச் செறிவு மிகுந்தது அல்ல ஹிந்தி இலக்கியம். தமிழ் மீது தணியாத ஆர்வம் உண்டு. எனினும் பண்டைத் தமிழ் இலக்கியச் சுவையைப் பருகினேன் அல்லேன். ஹிந்தியைத் தேர்வு செய்யப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஹிந்திப் பிரச்சார சபை நடத்திய ஓரிரண்டு தேர்வுகளை எழுதியிருந்தேன்.முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன். ஓரளவு ஹிந்தி அப்போது தெரிந்தது. அப்போது நான் ஹம்ராஜ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். நீல வானம். பனி மூடிய இமயத்தின் சிகரங்கள். வண்ண மலர்கள். இந்தக் காட்சிகள் எல்லாம் திரையில் விரிந்தது. மனதைப் பறி கொடுத்தேன். இசையோ இனிமை. ஆனால் பாடலின் பொருளோ பேசும் வசனமோ சிறிதும் புரியவில்லை. எனவே ஹிந்தியில் மேல் ஒரு ஆர்வம். ஹிந்தியைத் தேர்ந்து எடுத்தேன். கபீர் தாஸ் என்ற பெயர் அறிமுகம் ஆனது. அவர் எழுதிய கண்ணிகளைத் தோஹா என்று குறிப்பிடுவார்கள். எளிமையான சொற்கள். பெரிய உண்மைகள் அதிலே பொலிந்து நிற்கும். யோசிக்க வைத்து விடும். ஒரு பேச்சுக்காக திருக்குறளைப் போல என்று சொல்லலாம்.  அதன் சுருங்கிய வடிவத்திற்காக. ஆனால் இரண்டும் வேறானவை. கபீர் தாஸின் கண்ணிக...

மதிலுகள்

  வைக்கம் முகமது பஷீர். இந்தப் பெயரை நினைத்த மாத்திரம் எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது என்ற புத்தகத் தலைப்பு ஞாபகம் வரும். பல வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை புரட்டி இருக்கிறேன். ஆனால் வாங்கினேன் இல்லை. பஷீர் மலையாளத்தில் எழுதியது தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. தொண்ணூறுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய மதிலுகள் என்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள். பார்த்தேன். அற்புதமான படம். ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசு  கைது செய்து சிறை வைத்த ஒருவனின் கதைதான் மதிலுகள். அது வைக்கம் முகமது பஷீரின் கதை.  பஷீர் ஏனைய அரசியல் கைதிகளோடு சிறையில் இருக்கிறார். ஜெயிலர், ஜெயில் உயரதிகாரி அவரது மனைவி எல்லோரும் பஷீரின் தீவிர வாசகர்கள். அதனால் சிறை வாசத்தில் அவருக்கு சலுகைகள் பல உண்டு. மீன் துண்டு கூடுதலாக சோற்று உருண்டை, பீடி இதெல்லாம் எத்தனை பெரிய சலுகைகள். பஷீருக்கு மிகவும் கடினமான வேலைகள் சிறையில் இல்லை. அவருக்குப் பிடித்த மாதிரி பல வகை ரோஜாப் பதியன்களை நட்டு நீரூற்றி வருவது அவரது வாடிக்கை.  அவ்வப்போது அவரை ஒத்த அரசியல் கைதிகளோ...

மலையும் அசையவில்லை

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே                                                                                           7.4.3 நம்மாழ்வார் திருவாய்மொழி இப்பாசுரத்தில் பெருமான் வராக உருவம் எடுத்து மண்ணைத் தனது கொம்பால் இடந்து பூமியைத் தன் பற்களில் கொண்ட செய்கையைப் பேசுகிறது. அப்படி அவன் செய்யும் போது மண்ணும் அசையவில்லை. மலையும் அசையவில்லை. கடலும் அசையவில்லை. They tilted not They were secure in their place The seven isles on the earth  The...

கவிதைகள் மீது ஒரு காதல்

  The fountains mingle with the river    And the rivers with the ocean, The winds of heaven mix for ever    With a sweet emotion; Nothing in the world is single;    All things by a law divine In one spirit meet and mingle.    Why not I with thine?— See the mountains kiss high heaven    And the waves clasp one another; No sister-flower would be forgiven    If it disdained its brother; And the sunlight clasps the earth    And the moonbeams kiss the sea: What is all this sweet work worth    If thou kiss not me?     அன்று ஒரு நாள் பாரதி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. பாரதிக்கு எட்டயபுரம் அரண்மனையில் வேலை கிடைக்கிறது. என்ன வேலை? ஜமீன்தாருக்கு நண்பனாக அவர் கூடவே எப்போதும் இருக்கும் வேலை. பாரதி அன்று மாலை ஒரு குதிரை வண்டியில் வீட்டுக்கு வருகிறார். மூட்டை மூட்டையாக வந்து இறங்குகின்றன. பாரதியின் மனைவி பொன்னும் மணியும் பட்டும...