தூங்கும் நேரம் தவறிப் போனால் அதைப் பிடிப்பது கடினம். ஊரெல்லாம் துஞ்சுகிறது. உலகெல்லாம் நள்ளிருள் சூழ்கிறது. தூக்கம் வருவது இல்லை. எண்ணங்கள் வந்து சூழ்கிறது. இரவைக் கடத்துவது கடினமாகி விடுகிறது. Sleep dwell upon thine eyes, peace in thy breast. Would I were sleep and peace so sweet to rest. அது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் வரும் வசனம். காதல் வயப்பட்ட ரோமியோ அவளைப் பிரிந்து செல்லும் போது இப்படிச் சொல்கிறான். காதல் தூக்கத்தையும் நிம்மதியையும் பறித்து விடுகிறது. எனவே தூக்கமும் அமைதியும் அவளுக்கு வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறான். தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் உன் ஹ்ருதயத்தில் சாந்தி இளைப்பாறட்டும். அந்தத் தூக்கமும் அமைதியும் நானாக இருந்தால்… இது அம்பிகாபதி என்ற 1937ம் வருட திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பேசும் வசனம். இந்த வசனத்தை எழுதியவர் இளங்கோவன். படத்தை இயக்கியவர் எல்லிஸ் ஆர் டங்கன். அம்பிகாபதி கவிஞன். கம்பரின் மகன். ஆனால் இந்தப் படத்தில் எம் கே டி கவிதையைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அமராவதியாக நடிக்கும் எம் ஆர் சந்தானலட்சுமியை அடிக்கடி காதல் பார...