Skip to main content

Posts

Showing posts from September, 2025

நிலவும் நிழலும்

 இளையராஜா, மன்னிக்கவும் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அரசே நடத்திய விழா. சிகரம் தொட்ட தமிழன் என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். சிம்பனி என்ற மேற்கத்திய இசை வடிவத்தை உருவாக்கியதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா. இந்த விழாவில் பேசியவர்கள் பெரிதாக சிம்பனி பற்றிப் பேசவில்லை. உணர்ச்சிப் பெருக்கில் இளையராஜாவால் சரியாகப் பேச முடியவில்லை. இதை அவரே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். மூகாம்பிகை மேல் கொண்ட பக்தி குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனது பற்றி எல்லாம் பேசியவர் ரஜினிகாந்தோடு சேர்ந்து குடித்ததைப் பற்றிக் கூற முயன்றார். சரிவர அதைச் செய்ய முடியாமல் போனது. அவருக்கு உதவி செய்ய ரஜினிகாந்த் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மைக்கைப் பிடித்தார். பெருத்த ஆரவாரம். ரஜினிகாந்த் மகேந்திரன் மற்றும் இளையராஜாவோடு சேர்ந்து குடித்ததை பெருங்கூட்டத்தோடு பகிர்ந்து கொண்டார். எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.  இசைதான் வாழ்வு என்று ஆனபின் இளையராஜா மிகுந்த ஈடுபாடு மற்றும் முனைப்புடன் தனது வேலையைச் செய்தார். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தார். தனிப்ப...

நெஞ்சுக்கு நிம்மதி

 நான் ஹிந்தி மொழியைக் கற்றது பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழியாகத்தான். எங்கே உருது கலந்திருக்கும் என்று நான் அறிந்ததில்லை. ஆறு வருடங்கள் வட இந்தியாவில் இருந்திருக்கிறேன். நான் ஹிந்தி பேசுவது திரைப்படத்தில் பேசுவது போல இருக்கிறது என்று அங்கு உள்ளவர்கள் சொல்வார்கள். எங்கு சென்றாலும் நான் நட்பு பாராட்டுவது கடைநிலை ஊழியர்களோடு. அவர்களுடனான நட்பு எனக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்திருக்கிறது. ஒருமுறை கடவுளைக் குறிப்பதற்கு குதா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். ஜெனரேட்டரை இயக்கும் பையன் என்னைக் கடிந்து கொண்டான். குதா என்று சொல்லாதீர்கள். பகவான் என்று சொல்லுங்கள் என்று சொன்னான். எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. குதா என்பது உருதுச் சொல். கடுமைக்குக் காரணம் அது தான். எழுபது காலக் கட்டங்களில் பெரிதும் விரும்பிக் கேட்டது ஹிந்தித் திரைப்படப் பாடல்கள் தான். அதிலும் ஆர் டி பர்மன் இசையில் கிஷோர் குமார் பாடலைக் கேட்டால் மனம் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடும். இசையும் குரலும் மனதில் உணர்ச்சிகளை மீட்டி விடும். இளமை தரும் மனவெழுச்சி எல்லாம் வார்த்தைகள் காட்ட...

நோக்கி நோக்கி

 குறுந்தொகையில் ஒரு பாடல். வெள்ளிவீதியார் இயற்றியது. செவிலித் தாய் பாடுவதாக அமைந்திருக்கிறது. காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே . பொருளைப் பார்க்கலாம். தலைவி தலைவனுடன் சென்று விட்டாள்.  அவளைத் தேடி ஓடி ஓடி கால்கள் சலித்துப் போயின.  அவள் சென்ற திசையைப் பார்த்துப் பார்த்து கண்களில் ஒளி குன்றியது. இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். அகன்ற வானில் உள்ள நட்சத்திரங்களை விட அளவில் அதிகமானவர்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? செவிலித் தாய்  இப்படித் தனியே நின்று புலம்புகிறாள் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்று. நோக்கி நோக்கி உன்னைக் காண்பன்  நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய  ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும்  நீக்கம் அன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே நோக்கி நோக்கி உன்னைக் காண்பன் என்ற சொல்லில் எத்தனை வேட்கை. மீண்டும் மீண்டும் காண வேண்டுமென்ற மீளாத வேட்கை. உயிரின் உள்ளேயும் உடம்பின் உள்ளேயும் வெளியில் எங்கும் நீக்கம் இன்றி நிற்கும் ப...

இழந்த காலங்கள்

  Missed Time My notebook has remained blank for months thanks to the light you shower around me. I have no use for my pen, which lies languorously without grief. Nothing is better than to live a storyless life that needs no writing for meaning— when I am gone, let others say they lost a happy man, though no one can tell how happy I was. Ha Jin இழந்த காலங்கள் என்னுடைய நோட்டுப் புத்தகம் எல்லாம் வெற்றுத் தாள்கள் பல மாதங்களாக காரணம் என்னவென்றால் நீ என்னைச் சுற்றித் தூவும் ஒளி பேனாவுக்கு வேலை இல்லை அது சோம்பிக் கிடக்கிறது  எவ்வித வருத்தமும் இன்றி கதை இல்லாத வாழ்க்கை வாழ்வதை விடப் பெரிதான வேறொன்று இல்லை அதை எழுதிப் பொருள் கொள்ளத் தேவையும் இல்லை நான் சென்று விடுவேன் அப்போது பிறர் சொல்லட்டும்  ஒரு சந்தோஷமான மனிதனை இழந்தோமே என்று ஆனால் யாராலும் சொல்ல முடியாது அவன் எத்தனை சந்தோஷமாக இருந்தான் என்று ஹா ஜின் தமிழில் தி சந்தானம்