After Lunch After eating lunch, I feel so sleepy. Waking later, I sip two bowls of tea, then notice shadows aslant, the sun already low in the southwest again. Joyful people resent fleeting days. Sad ones can't bear the slow yers. It's those with no joy and no sorrow— they trust whatever this life brings. Bai JuYi மதிய உணவிற்குப் பிறகு மதியம் சாப்பிட்ட பின் தூக்கமாக வருகிறது விழித்து எழுந்த பின் இரண்டு கோப்பை தேநீர் பருகினேன் பின்பு கண்டு கொண்டேன் சாய்வான கிரணங்களை தென் மேற்கில் ஏற்கனவே இறங்கியிருக்கும் சூரியனை சந்தோஷமான மனிதர்கள் விரைந்து போகும் நாட்களுக்கு வருந்துகிறார்கள் துயரமானவர்கள் வருடங்கள் மெல்ல நகருவதைத் தாங்கிக் கொள்கிறார்கள் இல்லை மகிழ்ச்சியோ துயரமோ அற்றவர்கள் வாழ்க்கை கொண்டு வருவது எதுவாயினும் நம்பிக்கை கொள்கிறார்கள் சீனக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில் தி சந்தானம்