Skip to main content

Posts

Showing posts from January, 2025

மறைந்து போன விளக்கு

 காந்தியின் வாழ்க்கையை முடித்து வைத்தது மூன்று துப்பாக்கிக் குண்டுகள். பிர்லா மாளிகையில் அவர் உடல் கிடத்தப்பட்டது. கிடத்திய உடல் மேல் அவர் குளிருக்குப் போர்த்தியிருந்த சால்வையை மெல்ல உருவியபோது நழுவி விழுந்தது ஒரு குண்டு. இன்னொன்று அவரது சடலம் முழுதும் எரிந்து சாம்பலைத் திரட்டும் போது கிடைத்தது. நேரு வானொலியில் உரை நிகழ்த்தினார். எந்த விதத் தயாரிப்பும் இன்றி பொங்கி வரும் உணர்ச்சியில் அவர் செய்த உரை அது. கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி உணர்ச்சியில் குரல் நடுங்க அவர் செய்த உரை. நமது வாழ்வில் இருந்த விளக்கு மறைந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பாபு என்று நாம் அழைக்கும் நமது அன்புத் தலைவர், தேசத் தந்தை, இன்று நம்மிடையே இல்லை. ஒரு வேளை நான் அப்படிச் சொல்வது தவறாக இருக்கக் கூடும். நாம் அவரை இத்தனை காலம் பார்த்துக் கொண்டிருந்தது போல இனிக் காண முடியாது. ஆலோசனைக்காகவும் ஆறுதல் மொழிக்காகவும் அவரைத் தேடி ஓட முடியாது. அது ஒரு பலத்த அடி. எனக்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கும் தான். வன்மையாக விழுந்த இந்த அடியை எனது ...

சாமத்தில் பூத்த மல்லி

  ஜெயச்சந்திரன் குரலில் ஒரு மென்மை இருக்கும். குழைத்து வைத்த சந்தனம் போல. அவருக்குப் பாடக் கிடைத்த பாடல்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. பாடலின் தன்மையைப் புரிந்து கொண்டு உணர்ச்சி கலந்து பாடக் கூடியவர். அதில் கொஞ்சம் கூட மிகை இருக்காது.  மணிப்பயல் என்று ஒரு திரைப்படம். அதில் ஒரு பாடல் தங்கச் சிமிழ் போல் இதழோ என்று. நான் அனேகமாக அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன். முதன் முதலாகச ஜெயச்சந்நிரனின் குரலைக் கேட்டேன். கிறங்கிப் போனேன். பல முறை வானொலிப் பெட்டியில் கேட்டிருக்கிறேன். பின்பு அலைகள் என்று ஒரு படம். ஸ்ரீதர் இயக்கியது. அதில் வரும் பொன்னென்ன பூவென்ன கண்ணே என்று ஒரு பாடல். கேட்டவுடன் பிடித்துப் போயிற்று. ஜெயச்சந்திரன் என்ற பாடகரோடு அவர் குரலையும் மனம் அடையாளம் கொள்ளத் துவங்கியது. அதற்குப் பிறகு எத்தனை எத்தனை பாடல்கள். அப்பாவுக்குப் பிடித்த சினிமாப் பாடல்கள் மிகச் சிலவே. வியப்பு என்னவென்றால் அதில் இரண்டு பாடல்கள் ஜெயச்சந்திரன் பாடியது. ஒன்று வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள். பிறிதொன்று தாலாட்டுதே வானம். ஏக்கம், தனிமை,காதல், இரக்கம் என்று எல்லா உணர்வுகளும் இவ...

பறவையின் குழப்பம்

  “வாழ்க்கை என்பது ஒருவர் வாழ்ந்து விட்டது அல்ல. வாழ்க்கை என்பது ஒருவர் எதை ஞாபகம் கொள்கிறாரோ, அதை எப்படி ஞாபகத்தில் கொண்டு சொல்கிறாரோ அது. “ கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சுயசரிதை எழுதினார். அது Living to Tell the Tale என்பது. அந்த புத்தகத்தில் முதலாக இந்த வரிகள் காணப்படுகிறது. பின்னாட்களில் அவர் ஞாபகங்களோடு போராடினார். அவருக்கு மறதி நோய் ஏற்பட்டது. அவர் செல்வாராம். நான் ஞாபகத்தை இழந்து கொண்டிருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக நான் அதை இழக்கிறேன் என்பதையே மறந்து போகிறேன். சுற்றிலும் பழகிய முகங்கள் இருந்தாலும் சமயங்களில் தனது மகன்களையே அவர் மறந்து போகிறார். அவருக்குப் பிரியமான மஞ்சள் ரோஜாவையும் கூட. ஒருமுறை அவரது செயலாளர் அவரிடம் கேட்டார். அந்த மதிய நேரத்தில் மார்க்வெஸ் தோட்டத்தில் இருந்தார். “ இங்கே என்ன செய்கிறீர்கள், கேப்ரியல்?” அதற்கு அவர் சொன்னார். “நான் கண்ணீர் சிந்தாமல் அழுது கொண்டிருக்கிறேன். உனக்குப் புரிகிறதா? எனது மண்டையில் இப்போது வெறும் மலக் குப்பை” ஞாபகங்களிலிருந்தே எழுத்தாளன் எழுதுகிறான். கேப்ரியலோ கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்களை இழந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு ந...

கடைசிப் புலரி

  Last Dawn Your hair is lost in the forest, your feet touching mine. Asleep you are bigger than the night, but your dream fits within this room. How much we are who are so little! Outside a taxi passes with its load of ghosts. The river that runs by is always running back. Will tomorrow be another day? Octavio Paz கடைசிப் புலரி உனது கூந்தல் கானகத்தில் தொலைந்து போனது உனது பாதம் எனது பாதத்தைத் தொடுகிறது உறங்கும் போது நீ இரவை விடப் பெரிதாக இருக்கிறாய் ஆனால் உனது கனவு இந்த அறை அளவிற்கு சரியாகப் பொருந்தி விடுகிறது எத்தனை பெறுமதி நாம், இத்தனை சிறிய நாம்! வெளியே ஒரு டாக்ஸி போகிறது  அது கொள்ளும் அளவு பேய்களுடன்  அருகே ஓடும் நதி எப்போதும் பின்னோக்கியே ஓடுகிறது நாளை மற்றுமோர் நாளா என்ன? ஆக்டாவியா பாஸ் ஆங்கிலம் வழியாகத் தமிழில் தி சந்தானம்