ஹெபா அபு நாடா என்ற பெண்மணி கவிஞர். இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். கடந்த 20.10.2023 வெள்ளிக்கிழமை அன்று காஸாவில் நடந்த குண்டு வீச்சில் கொல்லப் பட்டார். அவருக்கு வயது 32. அவர் எழுதிய கடைசிக் கவிதை என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது நண்பர்கள் சின்னச் சின்ன சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள் ஏவுகணைகளைவிட வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை என்னால் மீட்க முடியவில்லை காக்க முடியவில்லை எனக்கு அழ முடியவில்லை எனக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது இது வெறும் பெயர்கள் அல்ல வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த அவர்களும் நானே நானும் அவர்களே அல்லாவே மாபெரும் இச் “சா” விருந்தில் நான் என்ன செய்யமுடியும் எந்தக் கொம்பனாலும் கனவிலுங் கூட என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது. – ஹெபா அபு நாடா வினவு இணைய இதழில் இருந்து Gaza’s night is dark apart from the glow of rockets, quiet apart from the sound of the bombs, terrifying apart from the comfort of prayer, black apart from the light of the martyrs. Good night, Gaza From Literary Hub கடைச...