Skip to main content

Posts

தாயே உன்னை வணங்குகிறேன்

Recent posts

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...

கறுப்பு என்பது

 சூல் கொண்டு அசையும் மேகத் திரள்கள் மழையில் நனைந்த பனைமர மேனி ………………. கரவு,தனிமை, அச்சம் கறுப்பு நிறத்தின் வெவ்வேறு சாயைகள்…….. இது எழுபதுகளில் வந்த நெரோலாக் பெயிண்ட்ஸ் விளம்பரக் கவிதை. அற்புதமான கவிதை. கறுப்பு நிறத்தைக் கொண்டாடிய கவிதை. கணையாழி பத்திரிக்கையில் பல வருடங்கள் முன்னால் படித்திருக்கிறேன். இந்த கவிதையைக் குறிப்பிட்டு சிலாகித்தவர் யாரென்று தெரியவில்லை. இரவில் இருள் வந்து சூழும். இருள் கறுப்பாக இருக்கும். காலம் பேர்வது ஓர் காரிருள் ஊழி ஒத்ததால் என்று பேசும் நம்மாழ்வார் பாசுரம். ஆரம்பப் பள்ளியில் ஆசிரியை எழுதும் பலகை கறுப்பாக இருக்கும். சாக்பீஸால் எழுதி அழித்து அழித்து ஒரு சாம்பல் நிறம் கொண்டு விடும். பள்ளிக்கு ஆய்வாளர் வரும் போது ஊமத்தை இலை கொண்டு அதைத் தேய்ப்பார்கள் மீண்டும் கறுப்பாகி விடும். சிறு வயதில் கண்ணா கருமை நிறக் கண்ணா என்று ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கறுப்புப் பெண்ணை யாரும் மணம் செய்து கொள்ள மாட்டார்கள். மனம் பார்க்க மறுப்பவர் முன் என்னை ஏன் படைத்தாய் என்று வருத்தப் படுவாள். அழுகையாக வரும். நான் போகும் கிராமத்து வழியில் கரிசல் மண்ணைப் பார்க்க மு...

வாடிய ரோஜா மலர்ந்த போது

எனக்கு சத்யஜித் ரேயின் படங்கள் பிடிக்கும். அநேகமாக அவரது எல்லாப் படங்களும் பார்த்திருக்கிறேன். சத்யஜித் ரேக்கு நேருவைப் பிடிக்கும். அவர் நேருவைப் பற்றிச் சொல்வார். "நான் நேருவுக்கு மிக நெருக்கமாகவே உணருகிறேன். எனக்கு நேருவை ரொம்பப் பிடிக்கும். நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன். நானும் ஒரு விதத்தில் கிழக்கும் மேற்கும் சேர்ந்த கலவை தான். சுதந்திரப் போக்கு, மேற்கத்திய மதிப்பீடுகளின் மீது ஒரு புரிதல், கீழை மற்றும் மேலை மதிப்பீடுகளின் சேர்க்கை நேருவிடம் இருந்தது. அது காந்தியிடம் இல்லை. ஆனால் ஒரு மனிதனாக, ஒரு குறியீடாக, பல்லாயிரம் பேரை காந்தி தொட்டு அடைந்தது அசாதாரணமான ஒன்று. ஆனால் ஒரு மனிதனாக நேரு என்ன செய்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. எப்போதும். தாகூரைப் புரிந்தது போல. இந்த முக்கோணத்தில் தாகூரை விட்டு விட முடியாது." உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? சத்யஜித் ரே Sight and sound என்ற பத்திரிக்கைக்கு 1970 ம் வருடம் கொடுத்த பேட்டியில் இவ்வாறு சொன்னார் என்று Mainstream என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். ஐ.ஏ.எஸ் பரீட்சைக்கு படிப்பவர்கள் அப்போது எல்லாம் Ma...

பூ உதிரும்

  கையிலிருந்த ரோஜாவை அவள் கூந்தலில் சூட்டிய பின், ஒரு விநாடி அமைதியாக அவள் முகத்தையும், மலர் சூடிய கூந்தலின் அழகையும் பார்த்தான்; தொடர்ந்துசொன்னான் அவன்; “இதோ இந்தப் பூ, செடியிலே இருக்கறப்போ நல்லாத்தான் இருந்தது. இது நல்லா இருக்கே பறிக்காம இருப்போம்னு விட்டுட்டா, அது உதிராம இருக்கப் போகுதா? இப்ப நான் அதைப் பறிச்சு உன் தலையிலே வெச்சிருக்கேன்…நீ அதைப் பறிச்சி உனக்கு இஷ்டமான ஒரு தெய்வத்துக்கு மாலை கட்டிப் போடறே… அதிலேதான் அந்தப் பூவுக்கு… உதிர்ந்து போகிற சாதாரணப் பூவுக்கு ஒரு மகத்தான அர்த்தம் இருக்கு… இல்லியா?… அது மாதிரிதான், மனுஷன்னு பொறந்தா..பூத்திருக்கிற மலர் உதிர்ந்து போகிற மாதிரி… மனுஷனும் ஒரு நாளைக்கு செத்துத்தான் போவான்… அப்படி விதி முடிஞ்சி, வியாதி வந்து சாகிற மனுஷன் அந்த உயிரை, தான் நேசிக்கிற தேசத்துக்காக, தான் விரும்பும் ஒரு லட்சியத்துக்காக அர்ப்பணம் பண்ணினா, அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு இல்லியா? பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் பூவைப்போல, புனிதமான தெய்வத்துக்கு அர்ச்சிக்கப்பட்ட மலரைப் போல… கௌரி, பூ…உதிரும்…மனுஷனும் சாவான்…” என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில், தா...

மரணம் என்பதும் தற்செயல்

 எழுபதுகளில் கேட்டது பெருமளவில் ஹிந்திப் பாடல்கள். அதில் ஆஷாவின் பாடல்களும் உண்டு. பெரிதும் ஆடல் நங்கைகளுக்கு அவர் பாடுவார். கதாநாயகிக்கு அவருடைய அக்கா பாடுவார். ஒரு பாடல் பியா தூ அப் தூ ஆஜா என்று. ஆர் டி பர்மனின் இசை.  திகில் இசையுடன் துவங்கும். பன்னிரண்டு மணி அடிக்கும். டிரம்பட் போன்ற வாத்தியங்கள் ஆசையில் முழங்கும். ஆஷாவின் பெருமூச்சுக்கள் இந்தப் பாடல் முழுதும் கலந்திருக்கும். இளைஞர்களின் இதயத் துடிப்பு எகிறி விடும். அதே ஆர் டி பர்மனின் இசையில் இவர் பாடிய தம் மாரோ தம் என்ற பாடல் உலகப் பிரசித்தம். Gay abandon. அது தான் இந்தப் பாடல். ஜெயகாந்தன் பற்றி ஒரு டாகுமெண்டரி எடுக்கப் பட்டது. அதில் ஒரு காட்சி. மேல் துண்டை தலையில் முண்டாசாகக் கட்டியிருப்பார். மனிதர் ஆனந்தமாகப் புகையை இழுத்து விடுவார். தம் மாரோ தம் என்று பாடுவார். ஜெயகாந்தன் வரை போய்ச் சேர்ந்திருக்கிறது அந்தப் பாடல். ஜவானி திவானி என்று ஒரு படம். கல்லூரி மாணவ மாணவிகளின் ஆதரவோடு பிரமாதமாக ஓடியது மதுரையில். ஆர் டி பர்மன் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட். எல்லாப் பாடல்களிலும் ஆஷாவின் பங்கு உண்டு. ஜானே ஜா.. நஹி நஹி என்ற பாட...

பறவையை வரைவது

 எண்பதுகள் சிறு பத்திரிகைகளின் காலம். எண்ணிலடங்காத சிறு பத்திரிக்கைகள் வெளி வரும். எழுத்து, நடை, கசடதபற, ழ, கல் குதிரை, பிரக்ஞை, வெளி, விருட்சம் என்றெல்லாம் பெயர்கள். பெரும்பாலும் தவற விட்டது இல்லை. வாங்கிப் படித்திருக்கிறேன். இலக்கியப் பத்திரிக்கைகள் சில இடது சாரி அரசியல் சார்ந்து இருக்கும்.. முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளும் உண்டு.  இளமை கட்டுக்கு அடங்காதது. வேகம் கொண்டு எங்கும் பரவுவது. மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டு திரிவது. பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றிய எங்களைப் போன்றவர்கள் பூபாளம் என்று கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திப் பார்த்த காலமது. சமீபத்தில் மறைந்து விட்ட நண்பர் செளந்தரராஜன் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். அவர் என்னோடு அறிமுகமானதற்குக் காரணமே அதுதான். அன்று தொடங்கிய நட்பு இத்தனை காலம் தொடர்ந்தது. நாம் துவக்கத்தில் குறிப்பிட்ட பத்திரிக்கைகளில் ஏதோ ஓரு பத்திரிக்கையில் (சரியாக நினைவில்லை) ஸ்ரீராம் என்பவர் ஒரு பிரெஞ்சுக் கவிதையை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். நான் அறிந்த வரையில் ஸ்ரீராம் பிரெஞ்சு மொழியிலிருந...

எய்த்தார்

 நேற்று (14.3.2026) மாலை செளந்தரராஜன் உயிர் பிரிந்தது. நட்புக்கு வயது உண்டா? அப்படி என்றால் நாற்பத்து மூன்று ஆண்டுகள் என்று சொல்லலாம். மரத்திலிருந்து இலை உதிர்வது போல ஒவ்வொருவராக நீங்குகிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் என்னோடு பேசினார். சுகுமாரன் எழுதிய பெருவலி என்ற நாவலைப் பற்றி சொன்னார். வாசிப்பும் இலக்கியமும் ரசனையும் தானே எங்களை இணைக்கும் புள்ளிகளாக இருந்தன? செளந்தர் புத்தகங்களை விரும்புபவர். விரும்பி வாசிப்பவர். வாசித்த புத்தகங்களைப் சேகரித்து வைப்பவர். சேகரித்த புத்தகங்களைத் தொட்டு உணர்ந்து மகிழ்பவர். ஆயிரக் கணக்கில் புத்தகங்கள் அவரது சேமிப்பில் உண்டு. அத்தனையும் படிக்கப்பட்டு அவருக்குப் பிரியமான பகுதிகளில் பென்சிலால் அடிக்கோடு இடப்பட்டிருக்கும். காலை பெங்களூர் விமான நிலையத்தில் ஸோனாவைப் பார்த்தேன். கோவை செல்வதற்கு Lay over ல் இருந்தாள். எனக்கும் அதே விமானம் தான். திகைப்பு பயம் சோகம் எல்லாம் அவள் முகத்தில் எழுதப் பட்டிருந்தது. பேசுவதற்கு வார்த்தை இல்லை. கண்களில் நீர் அரும்பியது. மெளனமான அசைவுகள் சோகத்தைப் பரிமாறிக் கொள்ள போதுமானதாக இருந்தன. ஸோனா செளந்தரின் ஒரே மகள். ஓரே...

பூவாகி காயாகி

 I was once a tree- all green. Very tall, bobbing in the wind. I had leaves, branches. And occasional flowers. I, too, had a name. A woman. A mother. Once a tree. I brush them aside, My tears, an upright foliage Lying heavy on my chest. Ranu Uniyal This Could Be a Love Poem for You Collection of Poems நான் முன்பொரு காலம் ஒரு மரமாக இருந்தேன் மிகவும் உயரம் எங்கும் பசுமை எனக்கு இலைகள் இருந்தன கிளைகள் இருந்தன அரிதாக மலர்கள் எனக்கும் ஒரு பெயர் உண்டு ஒரு பெண். ஒரு அன்னை முன்பு ஒரு மரம் நான் அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளுகிறேன்  நிமிர்ந்திருக்கும் இலைகள் போல எனது கண்ணீர்த் துளிகள் இதயத்தில் கனமாக விழுந்து கிடக்கிறது ரானு உனியல்  தமிழில் தி சந்தானம் பெண் மரமாக தன்னை நினைக்கிறாள். மலராக முகிழ்க்கிறாள். கனியாக இனிக்கிறாள். தண்ணென்று நிழல் தருகிறாள். சுற்றம் என்னும் பறவைகள் எல்லாம் அருகில் கூடிக் கலகலப்பாய் சிரிப்பதை ரசிக்கிறாள். ஜெய்ஹிந்த்புரம் என்றெல்லாம் மதுரையில் ஒரு பகுதிக்குப் பெயர் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பதினைந்து வருடம் ஆகியிருந்தது. நேரு என்று ஒரு தலைவர் இருந்தார். ...

கடலும் தொடு வானும்

  கவிதைகளோடு காலமெல்லாம் உறவாடியபடி இருக்கிறேன். அந்த உறவு ஒழிவதில்லை. கவிதை எங்கிருந்து எல்லாமோ வந்து என்னிடம்  சேர்கிறது.  காலை நனைக்கும் ஆற்று நீரை அள்ளிப் பருகுவதைப் போல கவிதைகளைப் பருகுகிறேன். சில பொழுது சட்டென ஒரு வெறுமை வந்து சூழ்கிறது. ஏனென்று தெரிவதில்லை இனி கவிதைகள் A torn cloud above the sea. A wounded heart on the sand. The sun sets, uncaring. Nujoom Al-Ghanem அறுந்து போன மேகம் கடலின் மேலே காயம் பட்ட இதயம் மண்ணின் மீது சூரியன் சாய்கிறது  அதற்கென்ன கவலை? I speak to trees all day long and dream of them at night. பகலெல்லாம் மரங்களோடு பேசுகிறேன் இரவெல்லாம் அதைப் பற்றி கனவு காண்கிறேன் The train rushes on, carrying memories. Laughter hovers over the fields like old souls. She wished someone had been awaiting her at the next stop. ரயில் விரைகிறது நினைவுகளைச் சுமந்தபடி சிரிப்பு வயல் வெளிகளின் மீது நிலை கொள்கிறது பழைய உயிர்களைப் போல வரவிருக்கும் நிறுத்தத்தில் எவரேனும் அவளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றே விழைகிறாள்  The train back empty. Fatigue floats on n...