Skip to main content

Posts

Showing posts from October, 2022

அலையும் பறவைகள்

   ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் ஒன்று Stray Birds என்பது.   அதில் எல்லாம் சின்னச் சின்ன கவிதைகள்.அதிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகளை மொழி பெயர்த்தேன்.                         1 நீரில் மீன் மெளனமாக இருக்கிறது நிலத்தில் மிருகம் சத்தம் போடுகிறது காற்றில் பறவை கானம் பாடுகிறது ஆனால் கடலின் மெளனம் நிலத்தின் சத்தம் காற்றில் கானம் எல்லாம் மனிதருள் இருக்கிறது                                2 அலையும் கோடை காலப் பறவைகள் என் சன்னல் அருகே வருகின்றன பாடிப் பறந்து செல்கின்றன படபடத்து இலையுதிர் கால மஞ்சள் இலைகள் பாடல் இன்றித் தரையில் விழுகின்றன  பெருமூச்சு விட்டபடி                      ...

காற்றில் ஆடும் கிளிக் கூடு

  மரத்தின் கிளைகளில் அமர்ந்து கிளி கீ கீ என்று கத்தியது. தனது இருப்பைச் சொன்னது. அதன் உடல் பச்சையாகவும் மூக்கு சிகப்பாகவும் இருந்தது. சிறிது நேரம்.. அது ஜிவ்வென்று விண் பரப்பில் பறந்து எங்கோ சென்றது. கூட்டில் இருந்து கிளி எப்போதும்  கோலிந்தா கோவிந்தா என்று அழைக்கும். நாச்சியார் திருமொழி அப்படிச் சொல்லும். உடல் ஒரு கூடு. உயிர் அதில் உறையும் கிளி. அதுதான் கோவிந்தா என்று எப்போதும் கூவுகிறது. உண்ணத் தராமல் உடலை வாட்டினாலும் அது கோவிந்தா என்று கூவ மறப்பதில்லை.  எண்பதுகளில் ஒரு திரைப்படம் பார்த்தேன். மலையாளத் திரைப்படம். அதன் பெயர் காட்டத்தே கிளிக்கூடு. போஸ்டர் அதைக் காற்றில் ஆடும் கிளிக் கூடுகள் என்று மொழி பெயர்த்திருந்தது. படத்தை இயக்கியவர் பரதன். கோபி, ஸ்ரீவித்யா, மோகன்லால், ரேவதி முக்கிய வேடம் ஏற்றிருந்தார்கள். அவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். ஷேக்ஸ்பியர் கிருஷ்ணன் பிள்ளை என்று எல்லோரும் அழைப்பார்கள். சாரதா அவரது மனைவி.  அவர்களுக்கு நண்டும் சிண்டுமாக மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண். அப்பாவின் மேல் காலைப் போட்டுக் கொண்டு தூங்கும் குழந்தைகள். காலையில் கல்லூரிக்குச் ...

வாழ்க நீ எம்மான்

  வாழ்க நீ எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம்   தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு  பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம! நீ வாழ்க! வாழ்க! இப்படி எழுதினார் பாரதி. காந்தி தன் வாழ்வெல்லாம் நடந்தபடி இருந்தார். ஆயிரம் ஆயிரம் அக்கறைகள், கவலைகள் அவருக்கு. இந்த தேசம் குறித்து. அவை எங்கெல்லாம் அவரை இட்டுச் சென்றதோ அங்கெல்லாம் சென்றார்.  அது தண்டியாக இருந்தாலும் சரி. நவகாளியாக இருந்தாலும் சரி. அவரது அக்கறை இந்த தேசம் தழுவி இருந்தது.  அன்பு அவர் விடுத்த சேதியாக இருந்தது. உண்மை அவருக்கு வழி காட்டும் விளக்காக இருந்தது. அவர் உள்ளத்தால் பொய்யாது ஒழுகினார்.  உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உள்ளார். தி சந்தானம்