Skip to main content

Posts

Showing posts with the label கவிதை கவிஞர்

பனியின் வாசமும் கூந்தலின் ஈரமும்

 Moonlit Night Tonight my wife must watch alone the full moon over Fu-zhou; I think sadly of my sons and daughters far away, too young to understand this separation or remember our life in Chang'an. In fragrant mist, her flowing hair is damp; In clear moonlight, her jade-white arms are cold. When will we lean at the open casement together while the moonlight dries our shining tears? Du Fu நிலவொளி இரவு இன்று இரவு எனது மனைவி தனியே முழு நிலவைக் காண்பாள்  தூர தூரத்தில் இருக்கும் எனது மக்களை நினைத்துக் கொள்கிறேன் வயதில் சிறிய அவர்களுக்கு இந்தப் பிரிவின் துயரம் புரியாது சாங்கனில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை கூட நினைவில் இருக்காது பனியின் வாசமும் விழுகின்ற அவள் கூந்தலின் ஈரமும்.. தெளிந்த நிலவில் தண்ணென்றிருக்கும் வெண்ணிறக் கைகளும்.. நாங்கள் எப்போது இனி ஒன்றாக திறந்த சன்னலின் மீது சாய்ந்து இருப்போம் நிலவொளி எங்கள் ஒளிரும் கண்ணீர்த் துளிகளை உலரச் செய்யும் போது சீனக் கவிஞர் டூ ஃபூவின் கவிதை சங்க காலக் கவிதை போல இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் படித்த சத்திமுத்தப் புலவரின் பாடல் ஞாபகம் வந்தது...

இழந்த காலங்கள்

  Missed Time My notebook has remained blank for months thanks to the light you shower around me. I have no use for my pen, which lies languorously without grief. Nothing is better than to live a storyless life that needs no writing for meaning— when I am gone, let others say they lost a happy man, though no one can tell how happy I was. Ha Jin இழந்த காலங்கள் என்னுடைய நோட்டுப் புத்தகம் எல்லாம் வெற்றுத் தாள்கள் பல மாதங்களாக காரணம் என்னவென்றால் நீ என்னைச் சுற்றித் தூவும் ஒளி பேனாவுக்கு வேலை இல்லை அது சோம்பிக் கிடக்கிறது  எவ்வித வருத்தமும் இன்றி கதை இல்லாத வாழ்க்கை வாழ்வதை விடப் பெரிதான வேறொன்று இல்லை அதை எழுதிப் பொருள் கொள்ளத் தேவையும் இல்லை நான் சென்று விடுவேன் அப்போது பிறர் சொல்லட்டும்  ஒரு சந்தோஷமான மனிதனை இழந்தோமே என்று ஆனால் யாராலும் சொல்ல முடியாது அவன் எத்தனை சந்தோஷமாக இருந்தான் என்று ஹா ஜின் தமிழில் தி சந்தானம்

மதிய உணவிற்குப் பிறகு

  After Lunch After eating lunch, I feel so sleepy. Waking later, I sip two bowls of tea, then notice shadows aslant, the sun already low in the southwest again. Joyful people resent fleeting days. Sad ones can't bear the slow yers. It's those with no joy and no sorrow— they trust whatever this life brings. Bai JuYi மதிய உணவிற்குப் பிறகு மதியம் சாப்பிட்ட பின் தூக்கமாக வருகிறது  விழித்து எழுந்த பின் இரண்டு கோப்பை தேநீர் பருகினேன் பின்பு கண்டு கொண்டேன் சாய்வான கிரணங்களை தென் மேற்கில் ஏற்கனவே இறங்கியிருக்கும்  சூரியனை சந்தோஷமான மனிதர்கள் விரைந்து போகும் நாட்களுக்கு  வருந்துகிறார்கள் துயரமானவர்கள்  வருடங்கள் மெல்ல நகருவதைத்  தாங்கிக் கொள்கிறார்கள் இல்லை மகிழ்ச்சியோ துயரமோ அற்றவர்கள் வாழ்க்கை கொண்டு வருவது எதுவாயினும் நம்பிக்கை கொள்கிறார்கள் சீனக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில் தி சந்தானம்

இழந்து போன குரல்

 . வாழ்க்கையில் எல்லாம் கடந்தபடியே இருக்கிறது. பழகிய மனிதர்கள் தொலைவிலேயே நின்று விடுகிறார்கள். ஆனால் அவர்களது குரல் காலமெல்லாம் தொடர்ந்து வருகிறது. பிரியத்துடன் பேசிய குரல்கள். ரகசியம் பகிர்ந்த குரல்கள். ரசனையான பேச்சில் பரவசம் காட்டிய குரல்கள். இப்படி எல்லாம்.. எல்லாம்…. சமீபத்தில் இந்தக் கவிதையைப் படித்தேன். ஒரு சின்னக் கவிதை என்னவெல்லாம் செய்து விடுகிறது? Idealized, beloved voices of those who have died or are lost to us like the dead. Sometimes they speak in our dreams; and our mind hears them in our thoughts. And with their echo for an instant echoes of the first poetry in our lives come back like music that fades into the distant night Constantine Cavafy இழந்து போன குரல் போற்றிய குரல்கள் பிரியமான குரல்கள் இறந்தவர்கள் குரல்கள் இழந்து போன குரல்கள் சில பொழுது அவை கனவில் நம்மோடு பேசுகின்றன எண்ணங்களில் நமது மனது கேட்கிறது ஓரு கணம் அவை எதிரொலிக்கும் போது வாழ்வின் முதல் கவிதை போல ஒலிக்கிறது அது இரவில் தொலைவில் தேய்ந்து மறையும் இசை போன்றே இருக்கிறது தமிழில்  தி சந்தானம்

வேதம் தமிழ் செய்த மாறன்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள் உண்டோ சடகோபருக்கு ஒப்பு ஒருவர்—-உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்புத் தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் உபதேசரத்தினமாலை  சடகோபர் அந்தாதியைப் படிக்க வாய்த்தது. கம்பன் இராம காதை எழுதி திருவரங்கத்தில் அரங்கேற்ற எண்ணுகிறான். ஒரு நாள் இரவு அரங்கன் கம்பனின் கனவில் தோன்றி நம் சடகோபனைப் பாடினையோ என்று வினவுகிறார். மெய் விதிர்த்துப் போன கம்பன் சடகோபன் பேரில் ஒரு நூறு பாடல்கள் இயற்றுகிறான். அதுவே சடகோபர் நூற்றந்தாதி. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனின் சொற்களை வியந்து மோற்றுகிறார் கம்பன். சில பாடல்களைப் பார்க்கலாம். சொல்லென்கெ னோமுழு வேதச்‌ சுருக்கென்கெ னோவெவர்க்கு  நெல்லென்கெ னோவுண்ணு நீரென்கெ னோமறை நேர்நிறுக்குங்‌  கல்லென்‌ கெனோமுதிர்‌ ஞானக்‌ கனியென்கெனோபுகல  வல்லென்கெ னோகுரு கூரெம்பிரான்‌ சொன்ன மாலையையே,. சொல்லென்பதா? வேதத்தின் சுருக்கம் என்பதா? உண்ணும் சோறு என்பதா? பருகும் நீர் என்பதா? வேதத்தை நிறுக்கும் தராசுக் கல் என்பதா? நன்கு பழுத்த ஞானக் கனி என்பதா? குருகூரில் அவதரித்த சடகோபன் தொடுத்த சொல் மாலை பற்றி எனக்குச் சொல்லும் தி...

எங்கோ யாரோ

 Somewhere in life There must be someone To take your hand And share the torrid day Without the touch of friendship There is no life and we must fade away Ruskin Bond Thick as Thieves, Tales of friendship  வாழ்க்கையில் எங்கோ  யாரோ ஒருவர் இருக்க வேண்டும் நமது கைகளை எடுத்து தமது கைகளோடு பதித்துக் கொள்ள வறண்டு போன நாட்களைப் பகிர்ந்து கொள்ள நட்பின் தொடுகை இல்லையென்றால் வாழ்க்கை என்பது இல்லை நாம் மெல்ல மறைந்து போக வேண்டியது தான் தமிழில் தி சந்தானம்

ஒன்றும் புதிதல்ல

  மரணம் தழுவுகின்ற இறுதிக் கணம். நேருவின் படுக்கைக்கு அருகே ஒரு கவிதைப் புத்தகம் இருந்தது. அது ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞனின் கவிதைத் தொகுப்பு. Stopping by the woods என்று ஒரு கவிதை. அதன் இறுதி வரிகள் நேருவால் அடிக்கோடு இடப்பட்டு இருந்தது. அந்த வரிகள் The woods are lovely, dark and deep But I have promises to keep  And miles to go before I sleep, And miles to go before I sleep நேருவின் மனம் நுட்பமானது. அவருக்கு வாய்த்தது கவி மனம். இயற்கை சார்ந்த ரசனை, தத்துவ விசாரம், உலகளாவிய பார்வை இவை எல்லாம் அவருக்கு இருந்தது. அவர் நிறையப் படித்தார். படிப்பு அவரது எழுத்தைச் செழுமைப் படுத்தியது. நிறைய எழுதினார். சிறை வாழ்க்கை அதற்கு உதவியது. காச நோயாளியான தனது மனைவிக்கு Pearl S Buck எழுதிய The Good Earth என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டும் மனிதராக அவர் இருந்தார்.  இன்று ராபர்ட் ஃப்ராஸ்டின் சில கவிதைகள் படிக்கக் கிடைத்தது. ஆங்கில மூலத்தையும் தமிழில் அதைச் செய்ததையும் கீழே தந்திருக்கிறேன். Nothing new One moment when the dust to-day Against my face was turned to spray, I dr...

கடைசிப் புலரி

  Last Dawn Your hair is lost in the forest, your feet touching mine. Asleep you are bigger than the night, but your dream fits within this room. How much we are who are so little! Outside a taxi passes with its load of ghosts. The river that runs by is always running back. Will tomorrow be another day? Octavio Paz கடைசிப் புலரி உனது கூந்தல் கானகத்தில் தொலைந்து போனது உனது பாதம் எனது பாதத்தைத் தொடுகிறது உறங்கும் போது நீ இரவை விடப் பெரிதாக இருக்கிறாய் ஆனால் உனது கனவு இந்த அறை அளவிற்கு சரியாகப் பொருந்தி விடுகிறது எத்தனை பெறுமதி நாம், இத்தனை சிறிய நாம்! வெளியே ஒரு டாக்ஸி போகிறது  அது கொள்ளும் அளவு பேய்களுடன்  அருகே ஓடும் நதி எப்போதும் பின்னோக்கியே ஓடுகிறது நாளை மற்றுமோர் நாளா என்ன? ஆக்டாவியா பாஸ் ஆங்கிலம் வழியாகத் தமிழில் தி சந்தானம் 

நீர், காற்று, கல்

  Water hollows stone, wind scatters water, stone stops the wind. Water, wind, stone. Wind carves stone, stone's a cup of water, water escapes and is wind. Stone, wind, water. Wind sings in its whirling, water murmurs going by, unmoving stone keeps still. Wind, water, stone. Each is another and no other: crossing and vanishing through their empty names: water, stone, wind. Octavio Paz நீர் கல்லில் குழி செய்கிறது  காற்று நீரைத் தெறிக்க விடுகிறது  கல் காற்றை நிறுத்துகிறது நீர், காற்று, கல். காற்று கல்லைச் செதுக்குகிறது கல் ஒரு கோப்பை நீராக இருக்கிறது நீர் தப்பிச் செல்கிறது, காற்றாகிறது  கல், காற்று, நீர் காற்று சுழன்று ஓடும் போது பாடுகிறது நீர் கடந்து செல்லும் போது முணுமுணுக்கிறது கல் அசைவதில்லை, அமைதியாகக் கிடக்கிறது காற்று, நீர், கல் ஒவ்வொன்றும் வேறு ஒன்று மற்றேதும் இல்லை வெறும் பெயர்களாகக் கடக்கிறது, காணாமல் போகிறது நீர், கல், காற்று ஆக்டாவியோ பாஸ்   ஆங்கிலம் வழியாகத் தமிழில் தி சந்தானம்

வேனில் இன்னும் வரவில்லை

  Always it’s cold on this mountain! Every year, and not just this. Dense peaks, thick with snow. Black pine-trees breathing mist. It’s summer before the grass grows, Not yet autumn when the leaves fall. Full of illusions, I roam here, Gaze and gaze, but can’t see the sky Han-shan எப்போதும் குளிர் இந்த மலையில் இப்போது என்றில்லை எல்லா ஆண்டும் அடர்ந்த சிகரங்கள், அப்பிக் கொண்ட பனி கரிய பைன் மரங்கள் சுவாசிக்கும் மேகப் படலம் புல் முளைக்கு முன்னே வந்து விட்ட கோடை வேனில் இன்னும் வரவில்லை, விழுகின்ற இலைகள் இங்கே திரிகின்றேன், எல்லாம் மாயம்  ஆகாயம் காணுதில்லை பார்த்த விழி பார்த்த பின்னும்  தமிழில் தி சந்தானம் 

வெண்பாவைக் கொண்டாடு வோம்

 வெண்பா ஒரு சுவையான பா வகை. பள்ளி படிக்கும் காலத்திலேயே ஆர்வம் ஏற்பட்டு விட்டது. இது தான் வெண்பா என்று தெரியாமலே மனப்பாடம் ஆன ஒரு பாடல்.  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்– சவைநடுவே  நீடடோலை வாசியா நின்றான் குறிப்பறிய  மாட்டாதான் அவன்நல் மரம் வெண்பாவின் இலக்கணம் ஓரளவு பிடிபட்டது. தனிச்சீர் தளை எல்லாம் பரிச்சயமாயிற்று. இறுதிச் சீர் நாள், காசு, மலர் பிறப்பு என்றபடி அமைய வேண்டும் என்று புரிந்தது. பன்னிரெண்டு வயதில் நான் முதலாக வெண்பா எழுதிப் பார்த்தேன். எனக்கு இருந்த அரைகுறையான புரிதலோடு. ஏற்றமிகு கல்வியை ஏழையும் அறிந்திருப்பின் போற்றிப் புகழப் படுவான்- நற்றமிழா  சேற்றிலே பூப்பினும் செழுமையாய்ச் சிரிக்குமே  நாற்றமிகு நல்ல மலர். இறுதிச் சீர் நாள் காசு மலர் பிறப்பு என்றே அமைய வேண்டும் என்று பேதமையாகப் புரிந்து கொண்டேன். அப்படி இருக்க வேண்டியதில்லை. அது போன்று ஒலிக்கும் வேறு வார்த்தைகளும் வரலாம் என்று பின்னாட்களில் தெரிந்தது. நளவெண்பாவில் ஒரு பாடல் பாடமாக வரும். அது மனதில் பதிந்து போனது. நெஞ்சால் இம்மாற்றம் நினைந்திருக்க நீயல்லால்...

அச்சமில்லை

 வெகுஜன திரைப்படத்தாருக்கும் சில சமயம் சிகப்பின் மீது ஒரு பிடிப்பு வருவது உண்டு. அது சினிமாவுக்கு வைக்கும் தலைப்போடு முடிந்து விடும். அது எண்பதுகளின் காலம். வறுமையின் நிறம் சிவப்பு என்று ஒரு படம் வந்தது. சிவப்பு சரியா இல்லை சிகப்புதானா என்று ஒரு விவாதம் நண்பர்களுக்கு இடையே அப்போது நடந்தது. அது குமாஸ்தா வேலைக்கு முண்டியடிக்கும் காலம். அதை இந்தத் திரைப்படம் முன் வைக்கும். புது டெல்லி கதைக்களம். டில்லியே பார்த்து அறியாதவர்களுக்கு அது ஒரு புதுமை. சிறிது இடைவெளிக்குப் பின் பாரதியின் பாடல்கள் இந்தப் படத்தில் ஒலித்தது. இந்தப் படத்தின் நாயகன் கமலஹாசன். தத்துவத்தில் பட்டதாரி.வேலை கிடைக்கவில்லை. பாரதியைப் பிடிக்கும் அவனுக்கு. அவர் பாடல்களை அவ்வப்போது எடுத்துச் சொல்வதும் பிடிக்கும்.. அப்பா சங்கீத வித்வான். பல விஷயங்களில் அப்பாவோடு முரண்படுபவன். ஒரு முறை அப்பாவின் தம்பூராவை விற்றுச் செலவழித்து விடுவான். செலவு என்றால் வேலைக்கு விண்ணப்பிக்கும் செலவுதான். மிச்சப் பணத்திற்கு அப்பாவிற்கு திராட்சைப் பழம் வாங்கித் தருவான். இளமையின் செருக்கு நீடாமங்கலத்தைச் சொந்த ஊராகக் கொண்ட சங்கீத வித்வானின் செ...

எனது வாழ்க்கை எனதல்ல

  அது அன்னி மைக்கேல்ஸின் கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து சில கவிதைகள்                   I உனது தொடுகைக்கும் எனது அழுகைக்கும் இடையே கடலுக்கும் கடலின் கனவுக்கும் இடையே              II யார் கற்பித்தது  எனது வாழ்க்கை எனதல்ல என்று யார் கற்பித்தது  எதுவும் எடுத்துச் செல்வதற்கல்ல என்று                III கைவிளக்குகள் நீரின் மேல் தத்தம் வெளிச்சத்தைக் கவிழ்க்கின்றன  அங்கே அவை அணைந்து போவதில்லை ஒவ்வொரு விளக்கும் கடலில் நெருப்பு வைக்கிறது மூழ்கும் இடத்திலேயே பற்ற வைக்கிறது Acknowledgements 1. Anne Michaels, the author of the book 2. Bloomberg  Publishing Plc, the Publisher Note No copyright infringement intended.  The sole purpose to appreciate the poetic work and spread it among a limited group of people

எனக்குத் தெரியவில்லை

கவிதை போகும் பாதையில் போவது சுகமாக இருக்கிறது. போகப் போக வழி வளர்கிறது. புதிதாகப் புதிதாக ஏதேதோ அர்த்தம் ஆகிறது. உடனே உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனது துடிக்கிறது. எனது மொழியில் அதை மாற்றிப் பார்ப்பதில் என்னவோ ஒரு நிறைவு காண்கிறது. I ask you this:  Which way to go?  I ask you this:  Which sin to bear?  Which crown to put  Upon my hair?  I do not know,  Lord God,  I do not know.  Langston Hughes நான் உன்னைக் கேட்கிறேன் எந்த வழியில் போக? நான் உன்னைக் கேட்கிறேன் எந்தப் பாவத்தை சுமக்க? எந்த முடியைத் தலை மேல் சூட? எனக்குத் தெரியவில்லை பெரிய கடவுளே! எனக்குத் தெரியவில்லை தமிழில் தி சந்தானம்

பெருமழை நீடிக்காது

  லாவோட்சு சீனத்து அறிஞர். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் எழுதிய நூல் தாவோ தே ஜிங் என்பது. ஞானச் சுடர் தெறிக்கும் அதில் என்று கற்றவர்கள் கொண்டாடுவார்கள். சீனத்துத் தாவோ மார்க்கம் என்று பாரதி கொண்டாடியது இதைத் தான். அதிலிருந்து சில பொறிகள். Tao Te Ching Lao Tsu Translation A S Kiln Poetry in translation To speak infrequently Is natural. So a strong wind won’t last all morning, A downpour won’t last all day. What causes these? Heaven and earth. If even heaven and earth must rest, How much more so human beings? Therefore align yourself to the Way. Aligned with the Way you are one with the Way. Aligned with virtue you are one with virtue. Aligned with the heavens you are one with the heavens. The Way accepts this alignment gladly. Virtue accepts this alignment gladly. The heavens accept this alignment gladly. When there is lack of faith There is a lack of respect. விட்டு விட்டுப் பேசுவது இயல்பு தான் பலத்த காற்று காலை வரை தாங்காது பெருமழை காலை வரை நீடிக்காது இதற்கு...

அற்புதங்கள் ஆழத்தில்

  ஹான் ஷான் என்ற சீனக் கவியின் Cold Mountain தொகுப்பிலிருந்து மேலும் சில கவிதைகளைப் பார்க்கலாம் Bright water shimmers like crystal, Translucent to the furthest depth. Mind is free of every thought Unmoved by the myriad things. Since it can never be stirred It will always stay like this. Knowing, this way, you can see, There is no within, no without ஒளி பொருந்திய தண்ணீர் ஸ்படிகம் போல் மின்னுகிறது. வெளிச்சம் அதன் ஆழங்களில் ஊடுருவியிருக்கிறது  மனம் ஒவ்வொரு எண்ணத்திலிருந்தும்  விடுபட்டு இருக்கிறது பலபலவான எண்ணங்கள் அதில் சலனம் செய்ய முடியாது அதனால் அப்படித்தான் அது எப்போதும் இருக்கும் தெரிந்து கொள் இந்த வழியை உள்ளே என்றும் வெளியே என்றும் ஏதும் கிடையாது Are you looking for a place to rest? Cold Mountain’s good for many a day. Wind sings here in the black pines, Closer you are, the better it sounds. There’s an old man sitting by a tree, Muttering about the things of Tao. Ten years now, it’s been so long This one’s forgotten his way home. ஓய்வெடுக்க இடம் தேடுகிறாயா? குளிர் மலையே...

உங்கள் மனதும் என் மனதும்

  முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ஹான் ஷானின் Cold Mountain தொகுப்பிலிருந்து மேலும் சில கவிதைகளைப் பார்க்கலாம் If there’s something good, delight! Seize the moment while it flies! Though life can last a hundred years, Who’s seen their thirty thousand days? Just an instant then you’re gone. Why sit whining over things? When you’ve read the Classics through, You’ll know quite enough of death. ஏதாவது நன்றாக இருந்தால், ஆனந்தம் கொள் பறந்து செல்லும் போதே அந்தக் கணத்தைப் பற்றிக் கொள் வாழ்க்கை நூறு வருடங்களாக இருக்கலாம் முப்பதாயிரம் நாட்களைக் கண்டவர் யார்? ஒரு சிறு கணம்.. நீ போய்விடுவாய் நின்று பலதுக்காகவும் புலம்புவது என்ன? செவ்விலக்கியங்களைப் படித்து முடித்து விட்டால் சாவைப் பற்றி போதுமான அளவு தெரிந்து கொண்டு விடுவாய் Where’s the trail to Cold Mountain? Cold Mountain? There’s no clear way. Ice, in summer, is still frozen. Bright sun shines through thick fog. You won’t get there following me. Your heart and mine are not the same. If your heart was like mine, You’d have made it, and be there...

மெளனம் பெருகி வழியும் போது

  ஹரித்வாருக்கு ஒரு முறை சென்றிருந்தேன். நெருக்கமாக இமயமலையைப் பார்த்தேன். அது ஒரு பேரனுபவம். மலையடிவாரத்தில் கங்கை பெருகி ஓடிக் கொண்டிருந்தாள். ஒரு பெரும் மெளனம் மலையிலிருந்து பெருகி வழிந்தோடுவது போல இருந்தது அது. மலையும் உண்மையும் வேறல்ல. பெரிய உண்மைகளை எல்லாம் மலை சொல்லித் தருகிறது. எனவே தான் உண்மையைத் தேடுபவர்கள் மலையைத் தேடிப் போகிறார்கள். ஏசுநாதர் மலை மேல் ஏறி நின்று கொண்டு தானறிந்த உண்மைகளைப் பிரசங்கமாகச் செய்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணையதளத்தில் ஹான்ஷான் என்ற சீனக் கவிஞரைப் பற்றி எழுதியிருக்கிறார். குறிப்பாக அவரது Cold Mountain என்ற கவிதைத் தொகுதி பற்றி. இதைப் படித்தவுடன் ஹான்ஷானை இணையத்தில் தேடினேன். கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் படித்தேன். ஹரித்வாரில் நெருக்கமாக இமயமலையைக் கண்டு பேச்சிழந்து போனதற்கு ஒப்பான அனுபவம் அது. சில கவிதைகள் தமிழில். Han-Shan A thousand clouds, ten thousand streams, Here I live, an idle man, Roaming green peaks by day, Back to sleep by cliffs at night. One by one, springs and autumns go, Free of heat and dust, my mind. Sweet to know there’s n...