Skip to main content

Posts

Showing posts from November, 2024

எனது வாழ்க்கை எனதல்ல

  அது அன்னி மைக்கேல்ஸின் கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து சில கவிதைகள்                   I உனது தொடுகைக்கும் எனது அழுகைக்கும் இடையே கடலுக்கும் கடலின் கனவுக்கும் இடையே              II யார் கற்பித்தது  எனது வாழ்க்கை எனதல்ல என்று யார் கற்பித்தது  எதுவும் எடுத்துச் செல்வதற்கல்ல என்று                III கைவிளக்குகள் நீரின் மேல் தத்தம் வெளிச்சத்தைக் கவிழ்க்கின்றன  அங்கே அவை அணைந்து போவதில்லை ஒவ்வொரு விளக்கும் கடலில் நெருப்பு வைக்கிறது மூழ்கும் இடத்திலேயே பற்ற வைக்கிறது Acknowledgements 1. Anne Michaels, the author of the book 2. Bloomberg  Publishing Plc, the Publisher Note No copyright infringement intended.  The sole purpose to appreciate the poetic work and spread it among a limited group of people

யானே நீ

  யானே என்னை அறியகிலாதே, யானே, என் தனதே என்றுஇருந்தேன், யானே நீ, என் உடைமையும் நீயே, வானே ஏத்தும் எம் வானவர் ஏறே.                                                    2.9.9 நம்மாழ்வார் திருவாய்மொழி Yaane ennai ariyakilathe Yaane en thanadhe enru irundhen Yaane nee, en udaimaiyum neeye  Vaane ethum vanavar yere Nammalwar Thiruvaimozhi. 2.9.9 விண்ணும் புகழ்கின்ற வானவர் தலைவனே! எனக்கு என்னையே தெரியவில்லை. ஆனாலும் நான் எனது என்றே இத்தனை காலமும் இருந்தேன்.  இப்போது அறிந்து கொண்டேன். நான் நீ தான். என்னுடைய உடைமைப் பொருளும் நீ தான். Even the Me in me did not know Me And so I thought everything was about Me and mine all along  I realise now that I am You, You are my possession Our Lord of the Celestials, majestic like a bull, You are glorified by the Sky In English T Santhanam

வாராய் குண்டலகேசி

 ஐம்பெருங் காப்பியங்கள் யாவை? இது சாதாரணமாகப் பள்ளிப் பருவத்தில் நாம் எதிர்கொள்ளும் கேள்வி. அதற்குப் படித்துப் பதிலும் எழுதி இருக்கிறோம். பள்ளிப் பாடத்தில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் வழக்காடு காதை வந்திருக்கிறது. நங்காய், கள்வனைக் கோறல் கடுங்கோலன்று, வெண்வேற்கொற்றம் காண் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. எனது சகோதரி சீவக சிந்தாமணி படித்ததாக நினைவு. பின்னுமொரு சகோதரிக்கு மணிமேகலை பாடமாக வந்திருக்கிறது. காயசண்டிகையின் யானைப்பசி என்னும் நோயை மணிமேகலையின் அமுதசுரபி தீர்த்து வைக்கும். ஆனால் குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்களின் பாடல்கள் அறிந்து கொண்டதே இல்லை. அதாவது பாடப்பகுதி மூலம் அறிமுகமாகி மேலும் விரிவாகத் தன் முயற்சியில் அறிந்து கொள்ள வாய்க்கவே இல்லை. நண்பர் செளந்தர் குண்டலகேசியின் ஒரு பாடலைச் சில வருடங்களுக்கு முன் சொன்னார். அந்தப் பாடல் வருமாறு பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ இந்தப் பாடல் என்னை வியக்க வைத்ததோடு சிந்த...

எனக்குத் தெரியவில்லை

கவிதை போகும் பாதையில் போவது சுகமாக இருக்கிறது. போகப் போக வழி வளர்கிறது. புதிதாகப் புதிதாக ஏதேதோ அர்த்தம் ஆகிறது. உடனே உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனது துடிக்கிறது. எனது மொழியில் அதை மாற்றிப் பார்ப்பதில் என்னவோ ஒரு நிறைவு காண்கிறது. I ask you this:  Which way to go?  I ask you this:  Which sin to bear?  Which crown to put  Upon my hair?  I do not know,  Lord God,  I do not know.  Langston Hughes நான் உன்னைக் கேட்கிறேன் எந்த வழியில் போக? நான் உன்னைக் கேட்கிறேன் எந்தப் பாவத்தை சுமக்க? எந்த முடியைத் தலை மேல் சூட? எனக்குத் தெரியவில்லை பெரிய கடவுளே! எனக்குத் தெரியவில்லை தமிழில் தி சந்தானம்