Mahmoud Darwish Fady Joudah ஒரு இளைய கவிக்கு BY MAHMOUD DARWISH TRANSLATED BY FADY JOUDAH தமிழில் தி சந்தானம் எங்களது விவரங்களை நம்பாதே. மறந்து போ உனது சொந்த வார்த்தைகளிலேயே தொடங்கு ஏதோ நீதான் முதலாக கவிதை எழுதுபவன் போல அல்லது நீ தான் கடைசிக் கவி என்பதைப் போல எங்களது படைப்புகளை நீ படித்தாலும் எமது நீட்சியாக நீ எழுதுவது இருக்க வேண்டாம் துன்பத்தின் புத்தகத்தில் எங்களின் தவறுகளைத் திருத்தி எழுதியதாக அவை இருக்கட்டும் யாரிடமும் கேட்காதே நான் யாரென்று உனது அன்னையை யாரென்று உனக்குத் தெரியும் தானே தந்தை.. தந்தை என்றால், உனக்கு நீயே தந்தையாக இரு உண்மை வெண்மை. அதன் மேலே எழுதி விடு காக்கையின் மையைக் கொண்டு உண்மை கருமை அதன் மேலே எழுதி விடு கானலின் ஒளியைக் கொண்டு பருந்தோடு உனக்கு சண்டை என்ற...