Skip to main content

Posts

Showing posts from June, 2024

யாருக்கு லாபம்

                         CUI BONO What is Hope? A smiling rainbow       Children follow through the wet; ’Tis not here, still yonder, yonder:       Never urchin found it yet. What is Life? A thawing iceboard       On a sea with sunny shore;— Gay we sail; it melts beneath us;       We are sunk, and seen no more. What is Man? A foolish baby,       Vainly strives, and fights, and frets; Demanding all, deserving nothing;—       One small grave is what he gets Thomas Carlyle யாருக்கு லாபம் நம்பிக்கை என்பது என்ன? ஒரு புன்னகை புரியும் வானவில் குழந்தைகள் ஈரத்தில் அதைத் தொடருகிறார்கள் அது இங்கே இல்லை  அதோ.. அங்கே அங்கே.. ஒரு விஷமக்காரப் பிள்ளையும்  அதை இன்னும் கண்டுபிடிக்க வில்லை...

காற்றின் அலைகள்

 சிவசங்கரி எழுதிய கதை நண்டு. தினமணி கதிர் பத்திரிக்கையில் தொடராக வந்ததா? சரியாக நினைவில்லை. நான் அந்தக் கதையைப் படித்ததில்லை. என் சகோதரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது ஒரு சோகமான கதை என்று. இந்தக் கதை திரைப்படமாக வந்தபோது பார்த்தேன். அது ஒரு நல்ல திரை அனுபவமாக இருந்தது.  உணர்வுகளைக் கடத்துவதில் இசை முக்கிய பங்காற்றியது.  இந்தப் படத்தில் டைட்டில் ஓடும் போது பின்னணியில் பாடல் ஒலிக்கும். பாடியவர் பூபேந்தர் சிங். இவர் ஹிந்தித் திரைப்படங்களில்  குறைவான பாடல்களையே பாடியிருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள். மேலே குறிப்பிட்ட பாடலில் பூபேந்தரின் குரலோடு சாளரம் சாளரமாக காலத்தின் கதவுகள் திறக்க காற்றைப் போல நாம் எங்கோ எங்கோ பின்னோக்கிச் செல்கிறோம். என்ன ஒரு குரல்? சில குரல்கள் அப்படித் தான் நம்மைப் பாதித்து விடுகிறது இல்லையா? கேட்கலாம். Note: No copyright infringement intended

நினைப்பும் மறப்பும்

  நம்மாழ்வார் திருவாய்மொழி ஆறாம் பத்து மூன்றாம் திருமொழியில் பாசுரங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன.  பாசுரங்கள் நெடுகிலும்  ஒன்றுக்கு ஒன்று முரணான வார்த்தைகள் நயம்பட செறிவான பொருள் கொண்டு அமைந்திருக்கிறது. படிக்கப் படிக்க எல்லையில்லாத பரவசம் பெருகுகிறது.  சில பாசுரங்களைப் பார்க்கலாம். புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் கண்ணன் இன்னருளே கண்டுகொள்மின்கள் கைதவமே?     நாம் கண்ட பொருள் எல்லாம் கண்ணனின் இன்னருள் என்று ஆகும் போது பொய்ம்மையும் துன்பமும் என்ன செய்து விடும்? இதை அறிந்து கொள்க. புண்ணியமும் பாவமும் அவனே.  இணைதலும் பிரிதலும் அவனே நினைப்பும் மறப்பும் அவனே. இருப்பதும் இல்லாததும் இவை அல்லாததுவும் அவனே. வலிமையான மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகர் நகரில் அவன் இருக்கின்றான்.  திருவிண்ணகர் கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன்(ஒப்பிலியப்பன்) கோவில் என்று நீங்கள் அறிவீர்கள். Oh Deceit, Oh Sufferings, Realise this Everything is His sweet Grace He is...

முன் நிலவும் பின் பனியும்

முன் நிலவும் பின் பனியும் என்ற ஜெயகாந்தனின் கதையைப் படித்தேன். இத்தனை வருடங்களில் இந்தக் கதையைப் படிக்க எப்படித் தவறினேன்?  தலைப்பைப் பாருங்கள். முன் நிலவும் பின் பனியும். ஜெயகாந்தனின் கதைத் தலைப்புகளை எல்லாம் திரட்டி ஒருமுறை வாய் விட்டு உரக்கச் சொன்னால் அதுவே ஒரு பெரிய இலக்கிய அனுபவமாக மலரும் என்று தோன்றுகிறது. ஒரு கிழவர். பெரிய கோனார் என்று அவரை எல்லோரும் அழைபபார்கள். அவருடைய மகன் சபாபதி.ஒரு முறை அவரோடு மனத்தாங்கல் ஏற்படுகிறது.  பட்டாளத்தில் சேர்ந்து விடுகிறான். விரக்தியில் கிழவர் முந்திரித் தோட்டத்தின் நடுவே குடிசையில் தனித்து வாழ்கிறார். தம்பி சின்னக் கோனாரின் குடும்பம் அருகில் இருக்கிறது. அண்ணன் மீது அவருக்குப் பெரிய மரியாதை. சில வருடங்கள் கழித்து சபாபதி திரும்பி வருகிறான். கிழவருக்கு இப்போது பார்வை மங்கியிருக்கிறது. மகனை அணைத்து ஆனந்தம் அடைகிறார். சபாபதிக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவன் மனைவியுடன் வடக்கே சென்று விடுகிறான். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. வருடம் ஒருமுறை கிழவரைப் பார்த்து விட்டுச் செல்வார்கள். பாபு வளர்ந்து விடுகிறான். கிழவருக்கு பாபு மேல் கொள்ளை...

இது தேவலோக ராகம்

 என்னது? பீத்தோவனப்ரியா என்று ஒரு ராகமா? எனக்கும் உங்களை போல வியப்பாகத்தான் இருந்தது. ரமேஷ் விநாயகம் இந்தக் காணொளியைப் பதிவேற்றியிருக்கிறார். அபிஷேக் ரகுராம் திருவருள் தர வருவாய் என்று பாடுகிறார்.  சரி பீத்தோவனப்ரியா?  பீத்தோவனின் இசைக் குறிப்பு ஒன்று fur elise என்று.  கேட்கும் திறன் ஏறக்குறைய குறைந்து விட்ட போது பீத்தோவன் இதை எழுதியதாகச் சொல்கிறார்கள். பியானோவில் இசைக்க எழுதப் பட்ட இதுவும் அபிஷேக் ரகுராம் பாடிய பாடலின் ராகமும் ஒன்று போல இருக்கிறது. எனவே இது பீத்தோவனப்ரியா. இந்தப் பெயரைச் சூட்டியது ரமேஷ் விநாயகம். எனக்கு இதைக் கேட்டவுடன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எழுபதுகளில் ஓலித்த என் மனது ஒன்றுதான் என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இந்தப் பாடலின் இறுதிச் சரணத்தில் இது தேவலோக ராகம் நம் ஆயுட்கால கீதம் என்று வருகிறது. எத்தனை பொருத்தமான வரிகள்! Note:    No copyright infringement intended in.                        uploading the above youtube videos உதவி. The Hindu dated June 4 2024, Article' What  ...

ஆழி எழ

  ஆழி எழச் சங்கும் வில்லும் எழ திசை வாழிஎழத்தண்டும்வாளும்எழஅண்டம் மூழி எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே 7.4.1 நம்மாழ்வார் திருவாய்மொழி The discus came rising The conch came rising The bow came rising The greetings from the directions, The shaft and the sword, The bubbles as the Universe broke open The Head of my Lord, His feet And His Time came rising As He had the World In English T Santhanam

கண்கள் செய்து விட்ட மாயம்

பட்னா நகரில் ஓரு நகலச்சகத்துக்கு நான் போவது உண்டு. அதன் உரிமையாளர் பெயர் ஆன்கிட். இளைஞன். அவன் அமர்ந்திருக்கும் மேசை நாற்காலிக்குப் பின்னால் அளவில் பெரிதான நிழற்படம் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டிருக்கும். அது மதுபாலாவின் படம்.  கனவில் மிதக்கும் கண்கள். கன்னங்களின் மீது விளையாடும் கூந்தல் இழைகள். சற்றே பிரிந்த உதடுகள். சிறிய பற்கள் பாதி தெரிந்தும் தெரியாமலும். அந்த கறுப்பு வெள்ளைப் படம் காண்பவரைக் கவரும் விதமாக இருந்தது. காலங்கள் எல்லாம் கடந்தும் அந்தக் கண்களும் உதடுகளும் உயிர் பெற்று வருவது போல ஒரு மயக்கம் தோன்றியது. நான் ஆன்கிட்டைக் கேட்டேன். உனக்கு மதுபாலாவைப் பிடிக்குமா என்று.  ஜீ(ஆமாங்க) என்று வெட்கத்துடன் சொன்னான். யாருக்குத் தான் அவரைப் பிடிக்காது என்று நினைத்துக் கொண்டேன். பேசும் படம் என்று ஒரு பத்திரிக்கை உண்டு. அது ஒரு சினிமாப் பத்திரிக்கை. அந்தப் பத்திரிக்கையின் பழைய இதழ்களின் தொகுப்பு அழகாக பைண்டு செய்யப் பட்டு கிராமத்து வீட்டில் இருக்கும்.   எட்டு ஒன்பது வயதில் விடுமுறைக்குச் செல்லும் போது பார்க்கக் கிடைக்கும். காகிதங்கள் வழவழப்பாக இருக்கும். அச்சு நல்ல தரத்த...