Skip to main content

Posts

Showing posts with the label இலக்கியம்

மனதில் வளரும் கதை

 For Sale: Baby shoes, never worn அது ஆறே வார்த்தைகள் கொண்ட சிறுகதை. ஹெமிங்வே எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மெய்யாகவே இப்படி ஒரு கதையை ஹெமிங்வே எழுதியிருக்கிறாரா தெரியாது. ஆறு வார்த்தைகளில் ஒரு கதையைச் சொல்லி விட முடியுமா? ஆறு வார்த்தைகளில் கதையைக் கோடிட்டுக் காட்டலாம். மிகுதிக் கதையை வாசிப்பவர் மனது உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான்.  For Sale: Baby shoes, never worn இந்த வரிகள் என்ன சொல்கிறது. ஒரு பொழுதும் அணியாத குழந்தையின் காலணி ஏன் விற்பனைக்கு வர வேண்டும். குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கி வைத்த காலணி. ஆனால் பிறக்கவில்லை. இனியும் பிறக்க வாய்ப்பில்லை. எனவே காலணி விற்பனைக்கு வருகிறதோ? இப்படி எல்லாம் மனதில் கதை வளர்கிறது. ஹெமிங்வேயின் ஒரு சிறுகதை Cat in the Rain. விடுமுறையைக் கழிக்க அமெரிக்கத் தம்பதி இத்தாலியில் ஒரு ஊருக்கு வருகிறார்கள். ஒரு விடுதியில் தங்குகிறார்கள். அவர்களது அறை இரண்டாவது மாடியில். அங்கிருந்து தொலைவில் கடல் தெரிகிறது. எதிரே பூங்கா. மற்றும் ஒரு போர் நினைவுச் சின்னம். வந்ததிலிருந்து விடாது மழை பெய்கிறது. எங்கும் போகவில்லை. கணவன் எப்போதும் புத்தகம்...

பறவையின் குழப்பம்

  “வாழ்க்கை என்பது ஒருவர் வாழ்ந்து விட்டது அல்ல. வாழ்க்கை என்பது ஒருவர் எதை ஞாபகம் கொள்கிறாரோ, அதை எப்படி ஞாபகத்தில் கொண்டு சொல்கிறாரோ அது. “ கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சுயசரிதை எழுதினார். அது Living to Tell the Tale என்பது. அந்த புத்தகத்தில் முதலாக இந்த வரிகள் காணப்படுகிறது. பின்னாட்களில் அவர் ஞாபகங்களோடு போராடினார். அவருக்கு மறதி நோய் ஏற்பட்டது. அவர் செல்வாராம். நான் ஞாபகத்தை இழந்து கொண்டிருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக நான் அதை இழக்கிறேன் என்பதையே மறந்து போகிறேன். சுற்றிலும் பழகிய முகங்கள் இருந்தாலும் சமயங்களில் தனது மகன்களையே அவர் மறந்து போகிறார். அவருக்குப் பிரியமான மஞ்சள் ரோஜாவையும் கூட. ஒருமுறை அவரது செயலாளர் அவரிடம் கேட்டார். அந்த மதிய நேரத்தில் மார்க்வெஸ் தோட்டத்தில் இருந்தார். “ இங்கே என்ன செய்கிறீர்கள், கேப்ரியல்?” அதற்கு அவர் சொன்னார். “நான் கண்ணீர் சிந்தாமல் அழுது கொண்டிருக்கிறேன். உனக்குப் புரிகிறதா? எனது மண்டையில் இப்போது வெறும் மலக் குப்பை” ஞாபகங்களிலிருந்தே எழுத்தாளன் எழுதுகிறான். கேப்ரியலோ கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்களை இழந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு ந...

வெட்டி மறையும் மின்னல்

  அன்னி மைக்கல்ஸ் எழுதிய Held என்ற நாவலைப் படிக்க வாய்த்தது.  அன்னி கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர். இந்தப் புத்தகம் புக்கரின் நீள் வரிசைப் பட்டியலில் உள்ளது.  இவரது எழுத்து நடை பிரமிக்க வைத்தது. கவிதை நடை. எளிய பிரார்த்தனை போல எத்தனை எத்தனை வரிகள். கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்களை அள்ளி அரை நிஜார் பையில் நிரப்பிக் கொள்ளும் சிறுவனைப் போல உணர்ந்தேன். ஐந்து தலைமுறைப் பெண்களைப் பற்றிப் பேசுகிறது கதை. வேறு வேறு காலங்கள். வேறு வேறு நிலப் பரப்புகள்.  துண்டு துண்டாக நிகழ்வுகள். ஒரு நேர் கோட்டில் செல்வது இல்லை. ஒரு தேர்ந்த சினிமா எடிட்டரைப் போல அழகாக வெட்டி வெட்டிச் செல்கிறார் அன்னி. 1917. எஸ்காட் நதிக்கரை. யுத்த களம். குண்டடி பட்டு, பனி பெய்த நிலத்தில் தலை கவிழ்ந்து வீழ்ந்திருக்கும் ஜேம்ஸ். காலை அசைக்க முடியவில்லை  இல்லை இல்லை..அவனது கால் காலணியைப் போல கழன்று சற்றே அருகில்.. இவனது பார்வையிலிருந்து கதை துவங்குகிறது.  மிக அருகில் காயமுற்று ஒரு இளைய படை வீரன் வீழ்ந்திருப்பதை அவன் உணருகிறான். இரவு விழுவது போல இருக்குமா அவனது இறுதிக் கணங்கள்? நினைவுகள் கசிகிறது. . தனது அன்புக...

ஒரு மனுஷ்யன்

ஒரு மனுஷ்யன்  வைக்கம் முகமது பஷீர் நீங்கள் என்ன ஏது என்று திட்டமிடவில்லை. வீட்டை விட்டு வெகு தொலைவில் நீங்கள் அலைந்து திரிந்தபடி இருக்கிறீர்கள். அங்கு இருப்பவர் பேசும் மொழி தெரியாது. ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி பேசத் தெரியும். வெகு சிலருக்குத் தான் இந்த இரண்டு மொழியும் தெரியும். என்னவென்றால் இது தேவையில்லாத சங்கடங்களில் முடியும். ஒரு ஆபத்தான சூழலில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். முற்றிலும் பரிச்சயம் அற்ற மனிதர் உங்களுக்கு உதவுவார். பல வருடங்கள் சென்றாலும் நீங்கள் அவரை மறக்க முடியாது. சில போது அவர் ஏன் உதவி செய்தார் என்ற வியப்பு அடங்காமலே இருக்கும். சரி..நீங்கள் நீங்கள் என்று சொல்ல வேண்டாம். நான் தான். நான் அந்த மனிதனை நினைத்த வண்ணம் இருப்பேன். நான் இப்போது எனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறேன். மனிதர்களைப் பற்றி எனக்கு தெளிவில்லாத கருத்துக்கள் உண்டு. என்னைப் பற்றியும் கூட. என்னைச் சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள். திருடர்கள் இருக்கிறார்கள். நோயால் பீடிக்கப் பட்டவர்கள் இருக்கிறார்கள். பித்துப் பிடித்தவர்களும் இருக்கிறார்கள். கவனமாக வாழ வேண்டியிருக்கிறது. உலகத்தில் நல்...

முன் நிலவும் பின் பனியும்

முன் நிலவும் பின் பனியும் என்ற ஜெயகாந்தனின் கதையைப் படித்தேன். இத்தனை வருடங்களில் இந்தக் கதையைப் படிக்க எப்படித் தவறினேன்?  தலைப்பைப் பாருங்கள். முன் நிலவும் பின் பனியும். ஜெயகாந்தனின் கதைத் தலைப்புகளை எல்லாம் திரட்டி ஒருமுறை வாய் விட்டு உரக்கச் சொன்னால் அதுவே ஒரு பெரிய இலக்கிய அனுபவமாக மலரும் என்று தோன்றுகிறது. ஒரு கிழவர். பெரிய கோனார் என்று அவரை எல்லோரும் அழைபபார்கள். அவருடைய மகன் சபாபதி.ஒரு முறை அவரோடு மனத்தாங்கல் ஏற்படுகிறது.  பட்டாளத்தில் சேர்ந்து விடுகிறான். விரக்தியில் கிழவர் முந்திரித் தோட்டத்தின் நடுவே குடிசையில் தனித்து வாழ்கிறார். தம்பி சின்னக் கோனாரின் குடும்பம் அருகில் இருக்கிறது. அண்ணன் மீது அவருக்குப் பெரிய மரியாதை. சில வருடங்கள் கழித்து சபாபதி திரும்பி வருகிறான். கிழவருக்கு இப்போது பார்வை மங்கியிருக்கிறது. மகனை அணைத்து ஆனந்தம் அடைகிறார். சபாபதிக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவன் மனைவியுடன் வடக்கே சென்று விடுகிறான். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. வருடம் ஒருமுறை கிழவரைப் பார்த்து விட்டுச் செல்வார்கள். பாபு வளர்ந்து விடுகிறான். கிழவருக்கு பாபு மேல் கொள்ளை...

டிக்கன்ஸை அறிந்த போது

சார்லஸ் டிக்கன்ஸை படிக்க வாய்த்தது பதினொன்று அல்லது பனிரெண்டு வயதில். நாவல்களின் சுருக்கிய வடிவம் Oxford Picture Series ஆக பள்ளி நூலகத்தில் கிடைக்கும்.  முகமெங்கும் அம்மை வடுக்கள் இருக்கும் நூலகர் அதிகம் பேச மாட்டார். கண்ணாடி அலமாரியில் பூட்டி வைத்திருக்கும்  புத்தகங்களைப் போல மெளனமாக இருப்பார். Great Expectations என்று ஒரு கதை. My name is Philip Phirrip என்று அந்தக் கதை துவங்கும். Miss Havisham என்று ஒரு பெண்மணி அந்தக் கதையில் வருவார். தீமையின் வடிவம். புத்தகத்தில் பார்த்த அவருடைய சித்திரம் மனதில் பதிந்து இருக்கிறது. பிலிப் பிர்ரிப் சுருக்கமாக பிப். ஒரு அனாதை.  இன்னொரு கதை. Oliver Twist.  அதில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு  The Boy who asked for more. இவனும் அனாதை.  கொடுத்த உணவு கால் வயிற்றுக்குக் கூட போதவில்லை. சிறுவன் தானே? இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்கிறான். அதற்குத் தண்டனையாக இருட்டு அறையில் அடைக்கப் படுகிறான். ஆலைகளில் புகைப் போக்கியைச் சுத்தம் செய்ய பத்து பனிரெண்டு வயதுச் சிறுவர்களைப் பணியில் அமர்த்துவார்களாம். இந்தக் கதையைப் படித்த போதுதான் தெர...

மரணம் இல்லாத நாடு

  மரணத்தைக் கடந்து போவது எளிதாக இருப்பதில்லை. அதில் ஒரு எதிர்பாராத் தன்மை இருக்கிறது. பூச்சியத்துக்குள்ளே ஒரு ராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் என்று ஒரு பழைய திரைப்பாடல் உண்டு. மரணமும் நமக்குப் புரிவதில்லை. சில பொழுது அது நம்மை நிலைகுலைய வைத்து விடுகிறது. ஒரு ஹங்கேரிய நாட்டுப்புறக் கதை.  முன்பொரு காலத்திலே ஒரு ராச்சியம் இருந்தது. அதில் ஒரு நகரம் இருந்தது. அதிலே ஒரு அரண்மனை இருந்தது. அங்கே ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு ஒரு மகன். வாலிப வயது அடைந்தவன். ஒரு நாள் மகன் சொன்னான். மரணமே இல்லாத ஒரு நாட்டை நான் தேடிப் போகிறேன் என்று. ராஜா தடுத்துப் பார்த்தான். மரணம் தவிர்க்க முடியாதது. மரணம் இல்லாத நாட்டைத் தேடுவது வீண் முயற்சி என்றான். ராஜகுமாரன் கேட்பதாக இல்லை. புறப்படுகிறான்.  வழியில் ஒரு பெரிய மரத்தைப் பார்க்கிறான்.  அதன் உச்சாணிக் கிளையில் ஒரு கழுகு இருந்தது. அது தன் அலகுகளால் கிளையை அசைத்து இலைகளை உதிரச் செய்த வண்ணம் இருந்தது.  இவனைப் பார்த்தவுடன் பறந்து வந்தது. அதன் அலகுகள் தரையைத் தொட்டது. தொட்ட வினாடியில் பறவை அரசனாக மாறியது.  ராஜகுமாரன் கே...

குழந்தையைப் போல

  எட்டு வயதில் டால்ஸ்டாய் அறிமுகம் ஆனார். அந்த வயதில் நூலகம் தெரியாது. சென்று புத்தகங்களைப் புரட்டி அறிந்து கொள்ள. பெரியவர்கள் யாராவது சொல்லி இருக்கலாம். அப்படியும் இல்லை. வீட்டிற்கு எதிரே நான் படித்த ஆரம்பப் பள்ளி.  ஆசிரியைகள் யாரும் டால்ஸ்டாயைப் பற்றிச் சொல்லவில்லை. ராஜேந்திரன் கதை சொல்வான். அது மகாபாரதத்திலிருந்து இருக்கும். பாண்டவர் வனவாசத்தின் போது நிகழ்ந்தவையாக இருக்கும்.  எல்லாம் சுவாரசியமான கதைகள்.  எனில் முதல் முதலாக டால்ஸ்டாயை அறிந்தது ஒரு திரைப்படத்தின் முலமாக. எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு தியேட்டர் இருந்தது. சந்திரா டாக்கீஸ் என்று சொல்லுவோம். அங்கே குழந்தையும் தெய்வமும் என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில் குட்டி பத்மினி என்று ஒரு சிறுமி இரட்டை வேடத்தில் நடித்தாள். தாயும் தந்தையும் மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.  இத்தனைக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்துப் பின்பு மணம் புரிந்தவர்கள். தன்மானம் உள்ள அவனால் பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகப் பொருந்தி வாழ முடியவில்லை பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைத் தந்தை எடுத்துச் சென்று விடுகிறான். அவள் பெயர் ...

சர்மா.ரங்கூன்..சிவாஜி

  பர்மா தற்போது மியான்மர் என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகர் ரங்கூன் தற்போது யாங்கே என்று அழைக்கப்படுகிறது. இந்த ரங்கூன் ஒரு திரைப்பட நடிகரின் திரை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் சிவாஜி கணேசன்.  அது அவருடைய முதல் படம். பராசக்தி. ஓரு அழகான மாடுலேஷனில் ரங்கூன் என்ற பெயர் அவர் வாயில்புகுந்து புறப்படும்.  தமிழன் பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம் என்று பரிகாசக் குரலில் சொன்ன பின்பு ரங்..கூன் என் உயிரை வளர்த்தது என்பார். சகோதரர்கள் மூவரும் பிழைப்புக்காக பர்மா சென்று வசிக்கிறார்கள். அதுவும் இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த  பகுதி.  தமிழ் நாட்டில் தங்கைக்குத் திருமணம். சகோதரர்கள் வர இயலாத நிலை.  காரணம் பர்மாவின் மீது ஜப்பானின் தாக்குதல். குண்டுகள் பொழிவு ஆரம்பம். கப்பலில் ஒரு டிக்கெட் தான் கிடைக்கிறது.  எல்லோருக்கும் இளையவனான குணசேகரனை பெரும் பொருளோடு அனுப்பி வைக்கிறார்கள். போர் சூழ்நிலையின் காரணமாக கப்பல் மிகவும் தாமதமாக சென்னை வருகிறது. குணசேகரன் ஹோட்டலில் தங்கும் போது உடமைகளையும் பொருளையும் இழக்கிறான். பித்தனைப் போல் நடித்துத் திரிகிறான். ...

கடைசி இலை

  பள்ளி இறுதி வகுப்பில் பாடப் பகுதியாக ஒரு கதை வந்தது. அதன் தலைப்பு "கடைசி இலை" (The Last Leaf) .O.ஹென்றி எழுதிய கதை. ஹென்றியின் கதைகளில் ஒரு இறுதித் திருப்பம் இருக்கும். அது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும். இரண்டு பெண்கள். ஜான்ஸி மற்றும் ஸ்யூ. அவர்கள் ஒரு வீட்டின் மாடியில் வசிக்கிறார்கள். பிழைப்புக்கான ஓவியமும் பிடித்தமான உணவு வகைகளும் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கிறது. நகரில் நிமோனியா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஜான்ஸிக்கு நிமோனியா காய்ச்சல் கண்டு விடுகிறது. டாக்டர் வந்து சிகிச்சை செய்கிறார். அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறார்.  உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. டாக்டர் ஸ்யூவை  தனியே அழைத்துப் பேசுகிறார். நான் மருந்து தரலாம். அது உடலுக்கு மட்டுமே. நோயாளிக்கு வாழும் இச்சை இல்லை. அது இருந்தால் நோய் குணமாகும். சத்தான உணவுகளைக் கொடு என்று சொல்லி விடைபெறுகிறார். ஸ்யூ படுக்கையில் இருக்கும் ஜான்ஸியைப் பார்க்கிறாள். எத்தனை மெலிந்து விட்டாள். கை கால் முகமெல்லாம் வெளிறியிருந்தது. அவள் குரல் மெலிதாக ஒவித்துக் கொண்டிருந்தது. பன்னிரண்டு.. பதினொன்று… அவள் வாய் முணுமுணுக்...