Skip to main content

Posts

Showing posts from February, 2024

சின்ன விஷயங்கள்

                         சின்ன விஷயங்கள் காலையில் பருவநிலை மாறியது. பனி உருகி அழுக்கான தண்ணீராக உருக்கொண்டிருந்தது. அதன் சில துளிகள் சிறிய தோள் உயரப் பின்கட்டு நோக்கிய சன்னல் வழியே வழிந்தது. கார்கள் தெருவில் பனிச் சகதியில் விரைந்து கொண்டிருந்தன. வெளியே இருள் வரத் துவங்கியது. உள்ளேயும் இருள் ஆரம்பித்திருந்தது. அவன் படுக்கையறையில் சூட்கேஸில் துணிகளைத் திணித்தபடி இருந்தான். அப்போது அவள் கதவருகே வந்தாள். “நீ போவதில் எனக்கு சந்தோஷம்.. நீ போவதில் எனக்கு சந்தோஷம்.. நான் சொல்வது கேட்கிறதா?” என்றாள். அவன் சூட்கேஸில் எதையோ திணித்தபடி இருந்தான். “….மகனே! நீ போவதில் எனக்கு சந்தோஷம்” அவள் அழ ஆரம்பித்தாள். “என்னை முகத்துக்கு நேராக உன்னால் பார்க்க முடியுமா?” சொல்” என்றாள். பின்பு படுக்கை மீது குழந்தையின் புகைப்படம் இருந்ததைப் பார்த்தாள். அதைக் கையில் எடுத்தாள். அவன் அவளைப் பார்த்தான். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனையே வெறித்தாள். பின்பு திரும்பியபடி முன்னறைக்குச் சென்றாள். அவன் “அதை இங...

போகின்ற காலம்

  Passing Time Your skin like dawn Mine like musk One paints the beginning of a certain end. The other, the end of a sure beginning. Maya Angelou போகின்ற காலம் உனது தோல் உதயத்தைப் போல எனது அந்தியைப் போல ஒன்று உறுதியான முடிவின் துவக்கத்தை வரைகிறது  மற்றது நிச்சயமான துவக்கத்தின் முடிவை தமிழில் தி சந்தானம் 

அவனது நரகம்

                         அவனது நரகம்                             சிறுகதை                                               தி சந்தானம்                                   1 நான் அந்த சிறிய ஸ்டேஷனில் இறங்கினேன். என்னை அழைத்துப் போக அவன் வந்திருந்தான்.  கனமான எனது சூட்கேஸை வாங்கிக் கொண்டான். படுக்கையை நான் எடுத்துக் கொண்டேன். நாங்கள் நடக்க...

சிறிய பயணம்

  The living is a passing traveller; The dead, a person come home. One short journey between heaven and earth, Then, alas! we are the same old dust of ten thousand ages. The rabbit in the moon pounds out the elixir in vain; Fu-sang, the tree of immortality, has crumbled to kindling wood. Man dies, his white bones are dumb without a word While the green pines feel the coming of spring. Looking back, I sigh; looking in front of me, I sigh again. What is there to value in this life's vaporous glory? Li Bai உயிர்த்து இருப்பவன் அலையும் பயணி மரித்து இருப்பவன் வீடு திரும்பியவன்  சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு சிறிய பயணம்  பின்பு, அந்தோ! நாம் பத்தாயிரம் ஆண்டு பழமையான தூசி முயல் ஒன்று நிலவிலிருந்து அமுதத்தை வடித்து எடுக்க முயன்று தோற்கிறது ஃபூசாங் தரு முறிந்து தீ மூட்டும் விறகு ஆகிப் போனது மனிதன் இறந்து போகிறான் அவனது வெள்ளை எலும்புகள் ஒரு வார்த்தை கூட பேசாத ஊமை என ஆகின்றன பசிய பைன் மரங்கள் வசந்தம் வருவதை உணர்கின்றன  கடந்ததை எண்ணி நான் பெருமூச்சு விடுகிறேன் எதிர் வருவ...