Skip to main content

Posts

Showing posts from September, 2023

எங்கேயோ ஏதோ

 சில பாடல்கள் துள்ள வைக்கும். சில அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும். சில பாடல்கள் நமது நிம்மதியை ஒரேயடியாகக் குலைத்து விடும்.  ஒரு ஏக்கம் வந்து மெல்லத் தழுவிக் கொள்ளும். அப்படி ஒரு பாடலை சமீபத்தில் கேட்க வாய்த்தது. இந்த வாய்ப்பு அமையக் காரணம் தம்பி சேகர். ஓரு காலத்தில் கேட்டு காலப் போக்கில் நினைவிலிருந்து நழுவிய அந்தப் பாடலை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தான். நதியைத் தேடி வந்த கடல் என்று ஓரு திரைப்படம். மகரிஷி என்பவர் எழுதிய கதை திரைப்படம் ஆகி இருந்தது. இந்தப் படத்திற்கு இசை இளையராஜா.  துவக்க இசையைக் கேளுங்கள். முடிந்தவுடன் எங்கேயோ என்று வந்து சேரும் சுசீலாவின் குரலைக் கேளுங்கள். இந்தப் பாடல் சுநாத வினோதினி என்ற ராகத்தில் அமைந்திருக்கிறது. சிவரஞ்சனியோ அல்லது ஹம்சாநந்தியோ என்று குழம்பி விட்டு பின்பு சுநாத வினோதினி என்று தீர்மானம் செய்ய நேர்ந்தது. 

மிலன் நகரில் ஒரு அற்புதம்

  ஒரு சின்னப் பொந்து போதும் தங்கிட  அங்கேயே உறங்கி விழ ஒரு சின்னத் துண்டு நிலம் போதும் வாழ்ந்திட அங்கேயே மடிந்து விட ஓரு ஜதை காலணி காலுறைகள்  மென்றிட  ஓர் துண்டு ரொட்டி  இதுவே நாங்கள் வேண்டுவது நாளைய தினத்தை நம்புதற்கு  மிலன் நகரில் ஓர் அற்புதம்  (Miracle in Milan) என்று ஓரு இத்தாலியத் திரைப்படம். இதில் மேலே சொன்ன பாடல் வரும்.  Bicycle Thieves என்ற படத்தை இயக்கிய விட்டோரியா டி சிகா தான் இந்தப் படத்தின் இயக்கம். ரியலிஸம் தான் விட்டோரியா வின் முத்திரை என்றாலும் இந்தப் படத்தில் கொஞ்சம் ஃபான்டஸியும் கலந்திருப்பது ஒரு மாறுபட்ட திரை அனுபவத்தைத் தருகிறது.  லோலட்டா முதிய பெண்மணி. தனியே வசித்து வருகிறாள். ஒரு நாள் தான் பயிரிட்டிருந்த முட்டைக்கோஸ் செடிகளுக்கு நடுவே ஒரு குழந்தையைப் பார்க்கிறாள். எடுத்து வளர்க்கிறாள். அவன் வளர்ந்து பையன் ஆகிறான். அவனுக்கு வாய்ப்பாடு சொல்லித் தருகிறாள். ஒருநாள் இறந்து போகிறாள். பையன் அனாதை இல்லத்தில் வளர்கிறான். வாலிபனாக வெளியே வருகிறான். அவன் பெயர் டோடோ. சிரித்த முகமும் உதவி செய்யும் குணம் உடையவனாகவும் இருக்கிறான். எனவே ...

ஷெல்லிதாசன்

  ஷெல்லியின் கவிதைகள் செறிவு மிகுந்தவை. பாரதி ஷெல்லியின் கவிதைகளில் மனம் தோய்ந்தவர். தன்னை "ஷெல்லிதாசன்"  என்று அவர் அழைத்துக் கொள்வது உண்டு. வாழ்க்கை அவர்கள் இருவரையும் ஒரு இடத்தில் நிலைத்து இருக்க விடவில்லை. ஷெல்லி ஐரோப்பா  முழுதும் திரிந்தார்.  இத்தாலியில் அவர் தங்கியிருந்த நாட்கள் படைப்பு ஊக்கம் மிகுந்த நாட்களாக இருந்தன. அது போலவே பாரதி புதுவையில் இருந்த நாட்களில் தன்னுடைய சிறந்த படைப்புகளை உருவாக்கினார்.  ஷெல்லி இருபத்தொன்பது வயதிலேயே மறைந்தார்.   "சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான் தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான் பலர் புகழும் இராமனும் ஆற்றினில் வீழ்ந்தான்  பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்" என்று பாடிய பாரதி முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்தார். பாரதி தன்னுடைய சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளார். அதில் சிலவற்றைப் பார்க்கலாம். பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வானொளியே சூறை அமுதே கண்ணம்மா வீணையடி நீ எனக்கு மேவு...