Skip to main content

Posts

Showing posts with the label கவிதை

அசைவதும் அடங்குவதும் அது

  அசைவதும் அடங்குவதும் அது மரத்திலிருந்து ஒரு சிறகு உதிர்ந்தது  காற்றில் நழுவியபடி மெல்ல மெல்ல மிதந்து வந்தது அதன் நிறம் பாதி வெண்மை பாதி கருமை எத்தனை மென்மையானது அது இதோ மிதந்து மிதந்து இறங்கி தரையைத் தழுவுகிறது. இப்படியும் அப்படியுமாக லேசாக அசைகிறது அப்படியே அடங்கியது அது தி சந்தானம் 

மோகக் குழப்பம்

                                 I இரவு எங்கும் விரிந்திருந்தது மரத்தின் கிளைகள் உயர்ந்து இருந்தது இலைகள் உதிர்ந்த கிளைகளின் ஊடாக நிலவு தெரிந்தது பேரிருள் சிறு வெளிச்சத்தைத் தழுவிக் கிடந்தது நிலவில் சிறு களங்கம் ஏறி இருந்தது நிலவு சற்றே மங்கியது போல் இருந்தது “நிலவுக்குப் பின்னால் நிழல் இருக்கிறது நிழலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?” என்று அவளிடம் கேட்டேன். சுடர் போலப் புன்னகை சிந்தினாள்  பின்னும் முகத்தில் அருள் காட்டினாள்  மோகமது தீர்ந்த பாடில்லை                                   II ஒரு நாள் கனவில் யமுனா வந்தாள் பாதம் வாழை இலைக் குருத்தைப் போலப் பொலிந்தது அவள் கழுத்தைச் சுற்றியிருந்த புடவையில்  சுட்டி சுட்டியாக ஈரம் சோப்பு போட்டு அலம்பிய முகம் துடைத்து விட்ட பளிங்குக் கல் போல இருந்தது நெற்றியில் பொட்டு இல்லை. நான் பாபுவைப் பற்றிக் கேட்டு இருக்கக் கூடாது யமுனாவின் தலை குனிந்தது  அவள் முகம் கட...

காதல் கடிது

  காதல் கடிது கொப்பும் கிளையுமாக நெடிது வளர்ந்திருந்தது அந்த மரம் பச்சை இலைகளோடு ஒரு செழுமை அதனைச் சூழ்ந்திருந்தது கனிகளைத் தாங்கியபடி ஒரு தனி அழகு கொண்டு விளங்கியது நான் அதைப் பார்த்து பார்த்துப் பரவசம் கொண்டேன் என் காதலை ஒரு நாள் இல்லை ஒரு நாள் சொல்லி விட வேண்டும் என்று எண்ணியிருந்தேன் அதற்கான தனிமை வாய்க்காமலே இருந்தது ஒரு நாள் மழை பெய்தது. மரத்தின் மேனி எல்லாம் நனைந்து போனது இலைகள் எல்லாம் பளபளத்தது  ஒரு அற்புதமான அழகுடன் மரம் இருந்தது. மழை விட்டதும் நான் மெல்ல அதனிடம் சென்றேன் என்னுடைய காதலைச் சொன்னேன் மரம் மறுமொழி ஏதும் சொல்ல வில்லை. லேசாகக் காற்று வீசியது இலைகளில் தங்கியிருந்த மழைத் துளிகளை மட்டும் என் மேல் தெளித்து விட்டு சும்மா இருந்தது மரம் நகராது நான் நகர்ந்து விடக் கூடியவன் அது மரத்துக்கும் தெரிந்திருந்தது ஏற்கப் படாத காதல் எனக்குள்ளே காலம் முழுவதும் இருந்தது தி சந்தானம்