Skip to main content

Posts

Showing posts from March, 2026

பறவையை வரைவது

 எண்பதுகள் சிறு பத்திரிகைகளின் காலம். எண்ணிலடங்காத சிறு பத்திரிக்கைகள் வெளி வரும். எழுத்து, நடை, கசடதபற, ழ, கல் குதிரை, பிரக்ஞை, வெளி, விருட்சம் என்றெல்லாம் பெயர்கள். பெரும்பாலும் தவற விட்டது இல்லை. வாங்கிப் படித்திருக்கிறேன். இலக்கியப் பத்திரிக்கைகள் சில இடது சாரி அரசியல் சார்ந்து இருக்கும்.. முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளும் உண்டு.  இளமை கட்டுக்கு அடங்காதது. வேகம் கொண்டு எங்கும் பரவுவது. மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டு திரிவது. பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றிய எங்களைப் போன்றவர்கள் பூபாளம் என்று கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திப் பார்த்த காலமது. சமீபத்தில் மறைந்து விட்ட நண்பர் செளந்தரராஜன் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். அவர் என்னோடு அறிமுகமானதற்குக் காரணமே அதுதான். அன்று தொடங்கிய நட்பு இத்தனை காலம் தொடர்ந்தது. நாம் துவக்கத்தில் குறிப்பிட்ட பத்திரிக்கைகளில் ஏதோ ஓரு பத்திரிக்கையில் (சரியாக நினைவில்லை) ஸ்ரீராம் என்பவர் ஒரு பிரெஞ்சுக் கவிதையை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். நான் அறிந்த வரையில் ஸ்ரீராம் பிரெஞ்சு மொழியிலிருந...

எய்த்தார்

 நேற்று (14.3.2026) மாலை செளந்தரராஜன் உயிர் பிரிந்தது. நட்புக்கு வயது உண்டா? அப்படி என்றால் நாற்பத்து மூன்று ஆண்டுகள் என்று சொல்லலாம். மரத்திலிருந்து இலை உதிர்வது போல ஒவ்வொருவராக நீங்குகிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் என்னோடு பேசினார். சுகுமாரன் எழுதிய பெருவலி என்ற நாவலைப் பற்றி சொன்னார். வாசிப்பும் இலக்கியமும் ரசனையும் தானே எங்களை இணைக்கும் புள்ளிகளாக இருந்தன? செளந்தர் புத்தகங்களை விரும்புபவர். விரும்பி வாசிப்பவர். வாசித்த புத்தகங்களைப் சேகரித்து வைப்பவர். சேகரித்த புத்தகங்களைத் தொட்டு உணர்ந்து மகிழ்பவர். ஆயிரக் கணக்கில் புத்தகங்கள் அவரது சேமிப்பில் உண்டு. அத்தனையும் படிக்கப்பட்டு அவருக்குப் பிரியமான பகுதிகளில் பென்சிலால் அடிக்கோடு இடப்பட்டிருக்கும். காலை பெங்களூர் விமான நிலையத்தில் ஸோனாவைப் பார்த்தேன். கோவை செல்வதற்கு Lay over ல் இருந்தாள். எனக்கும் அதே விமானம் தான். திகைப்பு பயம் சோகம் எல்லாம் அவள் முகத்தில் எழுதப் பட்டிருந்தது. பேசுவதற்கு வார்த்தை இல்லை. கண்களில் நீர் அரும்பியது. மெளனமான அசைவுகள் சோகத்தைப் பரிமாறிக் கொள்ள போதுமானதாக இருந்தன. ஸோனா செளந்தரின் ஒரே மகள். ஓரே...