Skip to main content

Posts

Showing posts from June, 2025

ஒரு குள்ள நரியின் தினம்

 To be honest, I never intended to be a writer at all. Long periods of solitude were first a circumstance, then a preference and finally a necessity. Frederick Forsyth in his book The Outsider 1978ம் வருடம் ஒரு தீபாவளி நன்னாளில் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். அது The Day of the Jackal. பிரெஞ்சு அதிபர் டி கோல். அவரைக் கொல்ல முடிவு செய்கிறார்கள். கூலிக்கு ஒருவனை நியமிக்கிறார்கள். Hired assassin. இதற்காக அவன் மாறி மாறி வேடம் அணிந்து கொள்கிறான். போலி அடையாள அட்டை போலி பாஸ்போர்ட் எல்லாம் தயாரித்து பலர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பிரான்ஸ் வருகிறான். போரில் மடிந்த வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி.  கால் இழந்த முன்னாள் ராணுவ வீரன் போல வேடமிட்டு வருகிறான் கொலையாளி. ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் டெலஸ்கோப் பொருத்திய மெளனத் துப்பாக்கியோடு காத்திருக்கிறான். அதிபர் டி கோல் தன் கையால் ஒவ்வொருவருக்கும மெடல் குத்தி விடுகிறார். டி கோல் கிட்டத்தட்ட ஏழடி உயரம். உயரமான கட்டிடத்தின் மேலிருந்து கொலையாளி அதிபரின் நெற்றிப் பொட்டைக் குறி பார்த்தபடி இருப்பான். துப்பாக்கியின் விசையை அழுத்துவா...

வேதம் தமிழ் செய்த மாறன்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள் உண்டோ சடகோபருக்கு ஒப்பு ஒருவர்—-உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்புத் தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் உபதேசரத்தினமாலை  சடகோபர் அந்தாதியைப் படிக்க வாய்த்தது. கம்பன் இராம காதை எழுதி திருவரங்கத்தில் அரங்கேற்ற எண்ணுகிறான். ஒரு நாள் இரவு அரங்கன் கம்பனின் கனவில் தோன்றி நம் சடகோபனைப் பாடினையோ என்று வினவுகிறார். மெய் விதிர்த்துப் போன கம்பன் சடகோபன் பேரில் ஒரு நூறு பாடல்கள் இயற்றுகிறான். அதுவே சடகோபர் நூற்றந்தாதி. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனின் சொற்களை வியந்து மோற்றுகிறார் கம்பன். சில பாடல்களைப் பார்க்கலாம். சொல்லென்கெ னோமுழு வேதச்‌ சுருக்கென்கெ னோவெவர்க்கு  நெல்லென்கெ னோவுண்ணு நீரென்கெ னோமறை நேர்நிறுக்குங்‌  கல்லென்‌ கெனோமுதிர்‌ ஞானக்‌ கனியென்கெனோபுகல  வல்லென்கெ னோகுரு கூரெம்பிரான்‌ சொன்ன மாலையையே,. சொல்லென்பதா? வேதத்தின் சுருக்கம் என்பதா? உண்ணும் சோறு என்பதா? பருகும் நீர் என்பதா? வேதத்தை நிறுக்கும் தராசுக் கல் என்பதா? நன்கு பழுத்த ஞானக் கனி என்பதா? குருகூரில் அவதரித்த சடகோபன் தொடுத்த சொல் மாலை பற்றி எனக்குச் சொல்லும் தி...