Skip to main content

Posts

Showing posts from January, 2023

குழந்தையைப் போல

  எட்டு வயதில் டால்ஸ்டாய் அறிமுகம் ஆனார். அந்த வயதில் நூலகம் தெரியாது. சென்று புத்தகங்களைப் புரட்டி அறிந்து கொள்ள. பெரியவர்கள் யாராவது சொல்லி இருக்கலாம். அப்படியும் இல்லை. வீட்டிற்கு எதிரே நான் படித்த ஆரம்பப் பள்ளி.  ஆசிரியைகள் யாரும் டால்ஸ்டாயைப் பற்றிச் சொல்லவில்லை. ராஜேந்திரன் கதை சொல்வான். அது மகாபாரதத்திலிருந்து இருக்கும். பாண்டவர் வனவாசத்தின் போது நிகழ்ந்தவையாக இருக்கும்.  எல்லாம் சுவாரசியமான கதைகள்.  எனில் முதல் முதலாக டால்ஸ்டாயை அறிந்தது ஒரு திரைப்படத்தின் முலமாக. எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு தியேட்டர் இருந்தது. சந்திரா டாக்கீஸ் என்று சொல்லுவோம். அங்கே குழந்தையும் தெய்வமும் என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில் குட்டி பத்மினி என்று ஒரு சிறுமி இரட்டை வேடத்தில் நடித்தாள். தாயும் தந்தையும் மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.  இத்தனைக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்துப் பின்பு மணம் புரிந்தவர்கள். தன்மானம் உள்ள அவனால் பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகப் பொருந்தி வாழ முடியவில்லை பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைத் தந்தை எடுத்துச் சென்று விடுகிறான். அவள் பெயர் ...

தோற்கவில்லை

  ஹெமிங்வே The Sun also rises" என்று ஒரு நாவல் எழுதினார். அதுதான் அவருடைய முதல் நாவல். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் பாரீஸில் இருந்தார். அந்த சமயம் எழுதப்பட்ட நாவல் அது. ஸ்பானிய காளைச் சண்டையை மையமாக வைத்து எழுதினார் என்று சொல்வார்கள். நான் அந்த நாவலைப் படித்ததில்லை.  ஆனால்  The Undefeated என்ற அவரது கதையைப் படித்தது உண்டு.  அது ஒரு காளைச் சண்டை வீரனைப் பற்றியது. அவன் பெயர் மானுவல் கார்ஸியா. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக வலம் வந்தவன். ஆனால் இப்பொழுது..?  வாய்ப்புக் கேட்டு ரெடினாவை அணுகுகிறான்.  உயிரோடுதான் இருக்கிறாயா?  அடிபட்டுக் கொண்டாயாமே? வேறு வேலை தேடிக் கொள்ள வேண்டியது தானே? என்கிறான்  ரெடினா அலட்சியமாக. மானுவல் தளராமல் பதில் கூறுகிறான். எனக்குத் தெரிந்த வேலை காளையோடு சண்டை இடுவது மட்டுமே என்கிறான்.  அப்படி என்றால் உன்னை மாற்று வீரனாகத்தான் களமிறக்க முடியும் என்கிறான் ரெடினா. நான் ஒருபொழுதும் மாற்று வீரனாகக் களம் இறங்கியதில்லை என்கிறான் மானுவல். உனது இஷ்டம் என்கிறான் ரெடினா. தனது நிலைமையை எண்ணி வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறான் முன்னாள் ...