Skip to main content

Posts

Showing posts from October, 2021

அடங்கிய சுடர்

கீதாஞ்சலி பதின்பருவத்துப் பெண். வாழ்வதின் சத்தியத்தையும் துடிப்பையம் ஒரு சங்கீத அலையாய் தனக்குள் உணர்ந்தவள். சகல சாத்தியங்களும் நம்பிக்கைகளும் அவளுக்குள்ளே கிளர்ந்து எழுகின்ற பருவம்.. ஆனால் விதி பொல்லாதது  ஆயிற்றே? அவளுக்கு மூளையில் புற்று நோய் என்று கண்டு அறியப்படுகிறது. நோயின் வலியும் சிகிச்சையின் வேதனையும் அவளைப் பற்றுகிறது. சாவு மெல்ல மெல்ல நெருங்குவதை உணருகிறாள் தனிமையும் தூக்கமின்மையும் அவளை வாட்டுகிறது.  அவள் எழுதுகிறாள. கிடைத்த  காகிதங்களில் எல்லாம் எழுதுகிறாள். எல்லாம் கவிதைகளாய் எழுதுகிறாள். நோயையும் மரணத்தையும் கவித்துவத்துடன் எதிர் கொண்ட இந்த இளம் கொடியைப் பற்றி  அருண் சத்தா ஒரு அற்புதமான டாகுமண்டரிப்  படம் எடுத்திருக்கிறார். கீதாஞ்சலியின் கவிதைகளின் தமிழாக்கம் இதோ                                           1 துயிலே! நாம் கடைசியாக என்று பார்த்தோ...

புன்னகையும் அமைதியும்

  தொண்ணூறுகளில் லவ் பேர்ட்ஸ் என்று ஒரு திரைப்படம் வந்தது. உலகமயம் தாராளமயம் என்று நாட்கள் மாறிக் கொண்டிருந்த நேரம். மாற்றங்கள். இசையில் ; இயக்கத்தில்.. மின்னணு வாத்தியங்களின் ஒலியில். இந்தப் படத்தில் “மலர்களே மலர்களே என்று ஒரு பாடல். இந்தப் பாடலில் சொற்ப வினாடி ஒரு காட்சி தோன்றி மறையும். நாயகன் புல் தரையில் கால் பதிப்பான். அவன் வைத்து எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் பூ மலரும். கிராபிக்ஸ். மன்னிக்கவும். நான் சொல்ல வந்தது கிராபிக்ஸ் பற்றியோ பிரபு தேவாவைப் பற்றியோ அல்ல. திக் நியட் ஹன். என்பவரைப் பற்றி  யார் இவர்? சொல்கிறேன். இவர் வியட்நாமைச் சேர்ந்த புத்தத் துறவி. புலம் பெயர்ந்து பிரான்ஸூக்குச் செல்கிறார். நடை தியானம் என்ற ஒன்றை பிரபலப்படுத்துகிறார்.  நடக்கும் போது ஒரு அரைப் புன்னகையுடன் நடக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளிவிடும் போதும் அமைதியை உணர வேண்டும். மூச்சும் நடையும் ஒத்திசைவு கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ஒரு பூ மலருவதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். புத்தத் துறவிமார்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு சின்னக் கவிதை ...

தாகூர் என்ற ஆன்மிகவாதி

ரவீந்திர நாத் தாகூர் வங்காளம் தந்த ஒப்பற்ற மனிதர். கவி. காந்தியை மகாத்மாவாக கண்டவர். காந்திக்கு இவர் குருதேவ். இருவரும் முரண்பட்டாலும் தமக்குள் மேன்மையான உறவைப் பேணினர். முரண்பட்ட கருத்தைப் பகிர்ந்தாலே சமூகத் தளங்களில் வெறுப்பு உமிழப்படும் காலம் இது. இப்போது இருவரையும் நினைத்தால் கணகளில் நீர் கசிகின்றது.   தாகூர் கீதாஞ்சலி என்ற படைப்புக்காக தனது 52 வது வயதில் நோபல் பரிசு பெற்றார் . விடுதலை பெற்று உயர்ந்தெழுந்த ஆன்மாவின் உன்னதப் படைப்புகள் அவர் கவிதைகளில். எனது தேர்வாகச் சில கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழ் ஆக்கியிருக்கிறேன். மிஸ்டிக் (mystic) தனமை மிளிரும் கவிதைகள்.                                    1 நீ என் வாழ்க்கையின் ஆணி வேராக இருக்கிறாய் ஒரு வேளை அதுதான் தவறா? மறந்தவனாய் நான் நடக்கிறேன் மலர்களை நான் புறக்கணிக்கிறேன் அல்லவா? நடசத்திரங்களையும் கூட எனினும் நான் சுவாசிக்கும் காற்றில் அவை சுகந்தம் தருகின்றன...

ரகசியம்

“உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்” சிறு வயதில் வானொலிப் பெட்டியில் ஒலித்த பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த வயதில் இந்தப் பாடலைக் கேட்கும்பொது ஏனோ ஒரு பயம் தோன்றும். ரகசியம் என்றால் என்னவென்று அறியாத வயது. அதிலும் அந்த அடுத்த வரி- “ஒருவரிடம் சொல்லி விடாதே”  ஆணைகளைக் கேட்டே வளரும் பருவம். “சட்டைப் பொத்தானைப் போடு”, நகத்தைக் கடிக்காதே” சோற்றை சிந்தாதே” இப்படி எல்லாம். ஆணைகளைக் கேட்டு பிள்ளை மனம் தயங்கிக் குழம்பும் காலம்.  சொல்லி விடாதே என்று பாடும் அக்காவின் குரல் கவலையோடு கூட ஒரு பொறுப்புணர்வையும் தந்து விடும். ரகசியங்கள் ரகசியங்களாகவே பெரும்பாலும் இருக்கின்றன. இருக்க வேண்டும். நெஞ்சோடு வைத்து நெருப்போடு போவதில்லை. ரகசியம் மிக அரிதாக பகிரவும் படுகிறது. அப்படிப் பகிர நேர்ந்தால் மிக நெருக்கம் என்று நினைக்கும் ஓரிருவருடனே மட்டும் பகிரப் படுகிறது. ரகசியங்கள் உடைக்கப்படலாகாது. பெரும் நம்பிக்கை கொண்டு நம்மிடம் ஒப்படைக்கப்படுபவை அல்லவா? அடைக்கலம் வந்த பறவை என்று நினைத்து இறுதி வரை காக்க வேண்டும். ரகசியங்கள் பாதுகாக்கப் படாவிட்டால் நட்புக்கும் நெருக்கத்திற்கும் அர்த்தம் தான...

கேள்விகளால் நிரம்பியவன்

  நண்பர் ராமநாதன் சில வங்கிச் சுற்றறிக்கைகளை விவாதிக்கும் போது “உபநிஷத்தா இருக்கு”என்று மெல்லிய குரலில் கூறுவார். புரியாமல் இருப்பதை அப்படிச் சொல்வார். தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலோ வேதாந்தம் என்று ஒரு பழைய பாடல் வரி உண்டு. எப்படியோ ராமநாதன் சொன்னது உபநிடதங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு உந்துதலாக இருந்தது. ‘த்த்வமஸி’ என்ற புத்தகம். சுகுமார் அழிக்கோடு மலையாளத்தில் எழுதியது. தமிழாக்கம் சாகித்ய அகாடமி வெளியீடு. இதைப் படித்தபோது சில விஷயங்கள் புரிந்தது. ஈசம், கதம், கேனம், தைத்ரீயம் என்றெல்லாம் உபநிடத்த்தின் பெயர்கள். ஈசோவாஸ்ய உபநிடதம் காந்தியைக் கவர்கிறது. வியப்பென்ன? தனது வாழ்நாள் முழுதும் சத்திய சோதனை செய்தவராயிற்றே? ‘ ஈசாவாஸ்யம்மிதம் ஸர்வம்’ என்ற மந்திரமும ‘ஹிரண்யமயம் பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முகம்’ என்ற மந்திரமும் காந்தியைச் செலுத்துபவனவாய் இருந்தது. முன்னதன் பொருள் “இந்த உலகம் கடவுள்மயமானது” இரண்டாவதின் பொருள் “சத்தியத்தின் முகம் தங்கப் பாத்திரத்தினால் மூடப்பட்டு இருக்கிறது” ஆனால் நான் இப்போது சொல்லப் போவது கதோபநிடதத்தைப் பற்றி. காரணம் அதில் வரும் கதை. நசிக...

விண்ணானாய் கண்ணா

  நம்மாழ்வாரின் திருவிருத்தத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்- இந்தப் பாசுரம் என்னைக் கவர்ந்தது. பலபல ஊழிகள் ஆயிடும் அன்றிஓர் நாழிகையைப் பலபலகூறிட்ட கூறாயிடும் கண்ணன் விண்ணனையாய் பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் பலபல சூழல் உடைத்து,அம்ம! வாழிஇப் பாய் இருளே என்ன சொல்கிறார்? பொருள் கொள்ள வேண்டுமே. இப்படி எழுதிப் பார்க்கலாம். கண்ணா! விண்ணைப் போன்றவனே! பலபல ஊழிகள் ஆகின்றன ஒரு நாழிகை பலபல கூறு ஆகிறது பின்னும் அது பல பல கூறிட்ட கூறாகிறது பல நாட்கள் பல நாட்கள் அன்பர் கூடுகிறார் பிரிகிறார் நான் மெலிகிறேன் பலபல சூழ்நிலைகள் பாய்கின்ற இருளே! நீ வாழ்க! நம்மாழ்வார் கண்ணனை இப்படி உணருகிறார். பாரதிக்கு கண்ணன் எப்படி அனுபவமாகிறான் பார்க்கலாமா? மாலைப் பொழுது. வானையும் கடலையும் பார்த்தபடி இருக்கிறார் பாரதி. நேரம் போவதே தெரியவில்லை. பின்னால் ஆள் வந்து கண்ணை மறைப்பதை உணருகிறார்.யாரது? கண்ணன்தான் பெண்ணுருவில் கண்ணன் கேட்கிறான் “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்? நீலமான ஆகாயத்தில், கடல் நுரையில், சின்னக்குமிழ்களில், என்னதான் பார்க்கிறாய்?” பாரதி பதில் சொல்கிறார். “தெரித்த திரைக்கடலில் நின்...