Skip to main content

Posts

Showing posts from January, 2026

பூவாகி காயாகி

 I was once a tree- all green. Very tall, bobbing in the wind. I had leaves, branches. And occasional flowers. I, too, had a name. A woman. A mother. Once a tree. I brush them aside, My tears, an upright foliage Lying heavy on my chest. Ranu Uniyal This Could Be a Love Poem for You Collection of Poems நான் முன்பொரு காலம் ஒரு மரமாக இருந்தேன் மிகவும் உயரம் எங்கும் பசுமை எனக்கு இலைகள் இருந்தன கிளைகள் இருந்தன அரிதாக மலர்கள் எனக்கும் ஒரு பெயர் உண்டு ஒரு பெண். ஒரு அன்னை முன்பு ஒரு மரம் நான் அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளுகிறேன்  நிமிர்ந்திருக்கும் இலைகள் போல எனது கண்ணீர்த் துளிகள் இதயத்தில் கனமாக விழுந்து கிடக்கிறது ரானு உனியல்  தமிழில் தி சந்தானம் பெண் மரமாக தன்னை நினைக்கிறாள். மலராக முகிழ்க்கிறாள். கனியாக இனிக்கிறாள். தண்ணென்று நிழல் தருகிறாள். சுற்றம் என்னும் பறவைகள் எல்லாம் அருகில் கூடிக் கலகலப்பாய் சிரிப்பதை ரசிக்கிறாள். ஜெய்ஹிந்த்புரம் என்றெல்லாம் மதுரையில் ஒரு பகுதிக்குப் பெயர் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பதினைந்து வருடம் ஆகியிருந்தது. நேரு என்று ஒரு தலைவர் இருந்தார். ...

கடலும் தொடு வானும்

  கவிதைகளோடு காலமெல்லாம் உறவாடியபடி இருக்கிறேன். அந்த உறவு ஒழிவதில்லை. கவிதை எங்கிருந்து எல்லாமோ வந்து என்னிடம்  சேர்கிறது.  காலை நனைக்கும் ஆற்று நீரை அள்ளிப் பருகுவதைப் போல கவிதைகளைப் பருகுகிறேன். சில பொழுது சட்டென ஒரு வெறுமை வந்து சூழ்கிறது. ஏனென்று தெரிவதில்லை இனி கவிதைகள் A torn cloud above the sea. A wounded heart on the sand. The sun sets, uncaring. Nujoom Al-Ghanem அறுந்து போன மேகம் கடலின் மேலே காயம் பட்ட இதயம் மண்ணின் மீது சூரியன் சாய்கிறது  அதற்கென்ன கவலை? I speak to trees all day long and dream of them at night. பகலெல்லாம் மரங்களோடு பேசுகிறேன் இரவெல்லாம் அதைப் பற்றி கனவு காண்கிறேன் The train rushes on, carrying memories. Laughter hovers over the fields like old souls. She wished someone had been awaiting her at the next stop. ரயில் விரைகிறது நினைவுகளைச் சுமந்தபடி சிரிப்பு வயல் வெளிகளின் மீது நிலை கொள்கிறது பழைய உயிர்களைப் போல வரவிருக்கும் நிறுத்தத்தில் எவரேனும் அவளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றே விழைகிறாள்  The train back empty. Fatigue floats on n...

யாவருக்குமான கவிதை

  Like you I love love, life, the sweet smell of things, the sky-blue landscape of January days. And my blood boils up and I laugh through eyes that have known the buds of tears. I believe the world is beautiful and that poetry, like bread, is for everyone. And that my veins don’t end in me but in the unanimous blood of those who struggle for life, love, little things, landscape and bread, the poetry of everyone. Roque Dalton Salvadorian poet உன்னைப் போலவே நானும் நேசிக்கிறேன் நேசத்தை, வாழ்வை, இனிய வாசங்களை, நீல ஆகாயத்தை, ஜனவரி மாதத்தின் நிலப் பரப்பை எனது ரத்தம் கொதிக்கிறது கண்கள் வழியாகச் சிரிக்க முயல்கிறேன்  கண்ணீர்த் துளிகளின் மொக்கு மட்டும் அறிந்த கண்கள் அது நான் இந்த உலகம் அழகானது என்று நம்புகிறேன் மேலும் கவிதை, சோறு போல எல்லாருக்கும் ஆனது என்றும் எனது நாளங்கள் சென்று முடிவது ஏகோபித்த குருதியில் வாழ்விற்காக, அன்புக்காக சின்னச் சின்ன விஷயங்களுக்காக நிலப் பரப்புக்காக சோறுக்காக யாவருக்குமான கவிதைக்காக  போராடுபவர்களின்  ஏகோபித்த குருதியில் தமிழில் தி சந்தானம்