Skip to main content

Posts

Showing posts from April, 2023

நீ தொட்டால்...

  தாவரங்கள் நுணுக்கமான நரம்புக் கூட்டங்கள் அமையப் பெற்றவை. ஒளி,ஒலி,தொடுகை போன்ற புறத் தூண்டுதல்களுக்கு ஆட்படுபவை. தாவரங்கள் வலியை உணரும். எரித்தால்,ஒடித்தால்,வெட்டி எறிந்தால் மிகவும் வேதனைப் படும்.தாவரங்கள் பேசும். எப்படி? வேதிப் பொருட்களை சமிக்ஞையாக வெளிப்படுத்துவதன் மூலம். இந்த சமிக்ஞைகளை அருகில் இருக்கும் தாவரம் புரிந்து கொள்ளும்.  தாவரங்களால் கற்கவும் நினைவில் கொள்ளவும் முடியும். சில புறத் தூண்டுதல்களை அவை நினைவில் கொள்ளுமாறு கற்பிக்க முடியும்.  இப்படி எல்லாம் கண்டுபிடித்துச் சொன்னது ஜெகதீஷ் சந்திர போஸ்.  ஒரு நூறு ஆண்டுகளுக்கு மூன்பு. தான் கண்டு கொண்ட எதற்கும் அவர் காப்புரிமை பெறவில்லை. அதனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் கவலைப் படவும் இல்லை.  'கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு' என்று இவரைப் பாரதி புகழ்வார். "அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்'. என்ற பாரதியின் வசன கவிதை இங்கே பொருள் கொள்ளத் தக்கது. பல வருடங்களுக்கு முன்பு நண்பர் நரசிம்மனோடு திரூவனந்தபுரம் சென்றேன். இந்தப் பயணம் எப்படி என்றால் நெல்லை வரை பஜாஜ் ஸ்கூட்டரி...

உருகிடும் வேளையிலும்

  தாகம் என்று ஒரு திரைப்படம் 1974 ம் வருடம் வந்தது. மதுரையில சிந்தாமணி தியேட்டரில் ரிலீஸ் ஆனதாக ஞாபகம். முத்துராமன் மற்றும் நந்திதா போஸ் நடித்திருந்தனர். தமிழில் அது ஒரு சோதனை முயற்சி. மதுரை திரைப்பட ரசிகர்கள் அதை தங்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனையாகக் கருதினர்.  விளைவு. படத்தை மூன்று நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டார்கள். முத்துராமன் பார்வையற்றவராக நடித்திருந்ததாக அறிந்தேன். எங்கள் கல்லூரி நூலகத்தில கணையாழி, தீபம் போன்ற பத்திரிக்கைகள் படிக்கக் கிடைக்கும். இந்தப் படத்தைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். நந்திதா போஸ் டவுன் பஸ்ஸில் செல்லும் காட்சியில் அவர் மேல் படர்ந்து விலகும் பார்வைகளை எப்படி காமிரா மூலம் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள் என்று சொல்லி இருந்தார்கள். ஒரு பஸ் காட்சியில் காமிரா இப்படி புகுந்து புறப்படுவது அப்போதெல்லாம் பெரிய விந்தை.  இந்தப் படத்தை ஓரு இளைஞர் பார்த்தார். ஒரு காட்சியில் பஸ் சன்னலோரம் அமர்ந்திருக்கும் நந்திதா போஸின் ஒற்றை முடி காற்றில் பறக்கும். இந்த் காட்சியால் உந்தப் பட்டு திரைப்பட இயக்குநர் ஆக விரும்பினேன் என்று சொன்னா...

ஒரு மனிதன்

  ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த விருது கொடுத்ததன் மூலம் சாகித்ய அகாடமி தன்னைக் கெளரவப்படுத்திக் கொண்டது என்று அவர் சொன்னார். விருது கிடைத்ததை விட இந்தப் பேச்சைப் பற்றியே எல்லோரும் பேசினார்கள். விருது வாங்கியதை முன்னிட்டு டெல்லியில ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. ஜெயகாந்தன் பேச வருகிறார். மைக் வேலை செய்ய வில்லை. உடனே ஜெயகாந்தன் தலையை மேலும் கீழும் அசைக்கிறார். உடனடியாகப் பார்வையாளர்களிடம்  ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். Instant connect with the audience. இதைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில எழுதியிருந்தார்கள். மேலும் அவரோடு ஒரு பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள்.  மதுரையில் ஜெயகாந்தன் பேச்சை மூன்று முறை கேட்டிருக்கிறேன். ஒன்று துக்ளக் பத்திரிக்கை இரண்டாவது ஆண்டு விழா. நான் பள்ளி மாணவன். அது பங்களாதேஷ் பிறந்த நேரம். முஜிபுர் ரஹ்மான் பற்றியும் வங்கம் பிறந்தது பற்றியும் மிகுந்த ஆவேசமாகப் பேசினார். வங்காளம் பிறந்த அந்த நாட்களில் எல்லோரும் மிகுந்த மனவெழுச்சி கொண்டிருந்தோம்.  இரண்டாவது மணியன் நடத்திய இதயம் பேசுகிறது பத்திரிக்கை விழா. சிவசங்கரி,ஓவியர்...

மண்ணுலகத்து நல் ஓசைகள்

  காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின்  வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ  இது நாச்சியார் திருமொழி.  ஆண்டாளின் திருப்பாவையில் தான்  எத்தனை ஓசைகள். வலம்புரிச் சங்கு அதிரும் ஓசை. கீசு கீசென்று ஆனைச்சாத்தனின் பேச்சரவம். ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்தத் தயிர் அரவம். வெள்ளை விரிசங்கின் பேரரவம். மெள்ள எழும் ஹரி என்ற பேரரவம். சிங்கம் மூரி நிமிர்ந்து முழங்கும் ஓசை. மாதவிப் பந்தல் மேல் கூவும் குயில் இனங்களின் ஓசை. செந்தாமரைக் கையாளின் வளை ஓசை. இப்படி எல்லாம்.. நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு நாய்கள் குலைப்பதுவும், எண்ணுமுன்னே‘அன்னக் காவடிப் பிச்சை’யென் றேங்கிடு வான் குரலும், வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும், வாதுகள் பேசிடு மாந்தர் குரலும் மதலை யழுங் குரலும், ஏதெது கொண்டு வருகுது காற்றிவை எண்ணி லகப்படுமோ? அது பாரதி.. மணி ஒலிக்கிறது. நாய்கள் குலைக்கின்றன. அன்னக் காவடியின் பிச்சைக் குரல். வீதிக் கதவை அடைக்கும் ஓசை. கிழக்கு திசையிலிருந்து வரும் சங்கொலி.  மனிதர்கள் புரணி பேசும் குரல். குழந்தை அழும் குரல்.  எத்தனை எத்தனை ஓலிகள். அ...