Skip to main content

Posts

Showing posts from May, 2025

மனதில் வளரும் கதை

 For Sale: Baby shoes, never worn அது ஆறே வார்த்தைகள் கொண்ட சிறுகதை. ஹெமிங்வே எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மெய்யாகவே இப்படி ஒரு கதையை ஹெமிங்வே எழுதியிருக்கிறாரா தெரியாது. ஆறு வார்த்தைகளில் ஒரு கதையைச் சொல்லி விட முடியுமா? ஆறு வார்த்தைகளில் கதையைக் கோடிட்டுக் காட்டலாம். மிகுதிக் கதையை வாசிப்பவர் மனது உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான்.  For Sale: Baby shoes, never worn இந்த வரிகள் என்ன சொல்கிறது. ஒரு பொழுதும் அணியாத குழந்தையின் காலணி ஏன் விற்பனைக்கு வர வேண்டும். குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கி வைத்த காலணி. ஆனால் பிறக்கவில்லை. இனியும் பிறக்க வாய்ப்பில்லை. எனவே காலணி விற்பனைக்கு வருகிறதோ? இப்படி எல்லாம் மனதில் கதை வளர்கிறது. ஹெமிங்வேயின் ஒரு சிறுகதை Cat in the Rain. விடுமுறையைக் கழிக்க அமெரிக்கத் தம்பதி இத்தாலியில் ஒரு ஊருக்கு வருகிறார்கள். ஒரு விடுதியில் தங்குகிறார்கள். அவர்களது அறை இரண்டாவது மாடியில். அங்கிருந்து தொலைவில் கடல் தெரிகிறது. எதிரே பூங்கா. மற்றும் ஒரு போர் நினைவுச் சின்னம். வந்ததிலிருந்து விடாது மழை பெய்கிறது. எங்கும் போகவில்லை. கணவன் எப்போதும் புத்தகம்...

தபாலில் இடாத கடிதம்

            தபாலில் இடாத கடிதம் சிறுகதை                                         தி சந்தானம் வெகு நாட்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இருக்கும் இடம் தெரியாது. இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேருமா? உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எண்ணம் கொண்டு போகும் வேகத்தில் எழுதிப் போகிறேன். என்னுடைய கையெழுத்து மாறியிருப்பதாக நீங்கள் கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நெல்லின் மணியைப் பொறுக்கி எடுத்துச் சாய்த்து சாய்த்து வைத்தது போல நீண்டு சிறிதான உங்கள் கையெழுத்து ஞாபகம் வருகிறது. கண்ணீர் வருகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. காரணம் தெரியவில்லை. நட்பும் ஆன்மீகம் போலத்தானோ? உங்களுடைய சிரிப்பு, மென்மையான பேச்சு எல்லாம் எனது மனதில் ஒரு ஆன்மீகத்தையே விதைக்கிறது. நான் மேன்மேலும் நம்பிக்கை பெறுகிறேன். எப்போதும் உங்களைச் சார்ந்து இருக்கவே விரும்புகிறேன். உங்களால் நிராகரிக்கப்படவில்லை என்பதிலிருந்தே ஆறுதல் பெறுகிறேன். உங்களுடைய இங்கிதம் ஒ...