Skip to main content

Posts

Showing posts from December, 2022

சர்மா.ரங்கூன்..சிவாஜி

  பர்மா தற்போது மியான்மர் என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகர் ரங்கூன் தற்போது யாங்கே என்று அழைக்கப்படுகிறது. இந்த ரங்கூன் ஒரு திரைப்பட நடிகரின் திரை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் சிவாஜி கணேசன்.  அது அவருடைய முதல் படம். பராசக்தி. ஓரு அழகான மாடுலேஷனில் ரங்கூன் என்ற பெயர் அவர் வாயில்புகுந்து புறப்படும்.  தமிழன் பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம் என்று பரிகாசக் குரலில் சொன்ன பின்பு ரங்..கூன் என் உயிரை வளர்த்தது என்பார். சகோதரர்கள் மூவரும் பிழைப்புக்காக பர்மா சென்று வசிக்கிறார்கள். அதுவும் இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த  பகுதி.  தமிழ் நாட்டில் தங்கைக்குத் திருமணம். சகோதரர்கள் வர இயலாத நிலை.  காரணம் பர்மாவின் மீது ஜப்பானின் தாக்குதல். குண்டுகள் பொழிவு ஆரம்பம். கப்பலில் ஒரு டிக்கெட் தான் கிடைக்கிறது.  எல்லோருக்கும் இளையவனான குணசேகரனை பெரும் பொருளோடு அனுப்பி வைக்கிறார்கள். போர் சூழ்நிலையின் காரணமாக கப்பல் மிகவும் தாமதமாக சென்னை வருகிறது. குணசேகரன் ஹோட்டலில் தங்கும் போது உடமைகளையும் பொருளையும் இழக்கிறான். பித்தனைப் போல் நடித்துத் திரிகிறான். ...

நான்

  நான் - மகாகவி பாரதியார் வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், வாரியினுள் உயிரெலாம் நான், கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உரவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில்நகர் கோபுரம் யாவுமே நான், இன்னிசை மாதரிசையுளேன் நான், இன்பத்திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான், பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். மந்திரங்கோடி இயக்குவோன் நான், இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்; தந்திரங் கோடி சமைத்துளோன் நான். சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், அவை பிழையாமே சுழற்றுவோன் நான், கண்டல் சக்திக் கணமெலாம் நான் காரணமாகிக் கதித்துளோன் நான். நானெனும் பொய்யை நடத்துவோன் நான், ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்; ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்குமுதற்சோதி நான்."

சாந்தமு லேகா

  தி ஜானகிராமன் அருமையாகப் பாடுவாராம். அவருடைய கதைகளில் இசை பற்றிய குறிப்புகள் இயைந்து வரும். அத்தனை நுணுக்கமாக எழுதி இருப்பார். அது சிறுகதைகள் ஆனாலும் சரி, மோகமுள் போன்ற நாவல்கள் ஆனாலும் சரி. இசைக் கச்சேரிகளில் கேட்டு அனுபவிக்கும் போது அந்த வரிகள் மனதில் ஓடும்.  மோகமுள் நாயகன் பாபு. அவன் பாடும் தன்மை எத்தகையது என்பதைப் போகிற போக்கில் ஒரு சின்ன கதாபாத்திரத்தின்  மூலம் சொல்லியிருப்பார் ஜானகிராமன். நாவலின் துவக்கத்திலேயே. பின்பு நாவலின் ஓரு பகுதியில் பாபு பூங்காவிற்கு வருவான். அங்கே ரேடியோப் பெட்டியில் வீணை ஒலிக்கும். அது பாபுவிடம் என்ன சொல்கிறது?  நீயா.. நீயா.. நீ ஏன் இப்படிச் செய்தாய்? என்று அங்கலாய்க்கிறது. இது போன்ற அனுபவம் நமக்கும் வாய்த்திருக்கிறது. வயலின் தந்திகள் வில்லோடு இழையும் போது ஐயா.. ஐயா என்ற சன்னக் கதறல் ஒலித்திருக்கிறது. பாபுவும் அவன் அப்பாவும் கச்சேரி கேட்டுவிட்டு பனி பெய்யும் பின்னிரவில் வீட்டுக்கு வருவது போல எனக்கும் நேர்ந்திருக்கிறது.  நாவலின் பின்னொரு பகுதியில் இப்படி எழுதுகிறார். "'மேலே மாறி மாறி வந்த நினைவுகளுக்கு அடியில் பேகடை ராகம் கமகங்க...