Skip to main content

Posts

இரவு என்பது பத்து நிமிடம்

 வினோத் குமார் சுக்லா செவ்வாய்க் கிழமை 23.12.2025 அன்று மறைந்தார். 88 வயது. ஹிந்திக் கவிஞர். கதைகளும் எழுதி இருக்கிறார். नौकर की कमीञ நெளகர் கீ கமீஸ் (வேலைக்காரனின் சட்டை) அவர் எழுதிய நாவல். இதை மணி கெளல் திரைப்படம் ஆக்கினார். இந்த இரண்டு நாட்களில் இவருடைய நிறைய கவிதைகளைப் படித்தேன்.  எளிமையான சொற்கள் . கனிந்த கருத்துக்கள். பிரமித்துப் போனேன். Simple is the seal of virtue.   குழந்தைகள் சில சமயம் நம்மிடம் கேள்வி கேட்கும். பதில் சொல்ல முடியாது. யோசித்தபடியே நின்று விடுவோம்.  இவருடைய கவிதைகளைப் படிக்கும் போது அப்படி ஒரு அனுபவம் நேர்கிறது. சின்னதாக கணக்கு போடுவது போல ஒரு கவிதை. रात दस मिनट की होती तो पाँच मिनट में आधी रात हो जाती रातें ऐसी ही बीतीं। दिन दस मिनट का होता तो पाँच मिनट में आधा दिन बीत जाता दिन ऐसे ही बीते। मैं दो दिन की ज़िंदगी जी सकता हूँ एक दिन मैं तुम्हारे पास रहूँगा दूसरे दिन तुम मेरे पास रहना। இரவு என்பது பத்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடத்தில் நடுநிசி ஆகிவிடும் இரவுகள் இப்படியே கழிந்து விடும் பகல் என்பது பத்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடத்தில் நண்...

பனியின் வாசமும் கூந்தலின் ஈரமும்

 Moonlit Night Tonight my wife must watch alone the full moon over Fu-zhou; I think sadly of my sons and daughters far away, too young to understand this separation or remember our life in Chang'an. In fragrant mist, her flowing hair is damp; In clear moonlight, her jade-white arms are cold. When will we lean at the open casement together while the moonlight dries our shining tears? Du Fu நிலவொளி இரவு இன்று இரவு எனது மனைவி தனியே முழு நிலவைக் காண்பாள்  தூர தூரத்தில் இருக்கும் எனது மக்களை நினைத்துக் கொள்கிறேன் வயதில் சிறிய அவர்களுக்கு இந்தப் பிரிவின் துயரம் புரியாது சாங்கனில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை கூட நினைவில் இருக்காது பனியின் வாசமும் விழுகின்ற அவள் கூந்தலின் ஈரமும்.. தெளிந்த நிலவில் தண்ணென்றிருக்கும் வெண்ணிறக் கைகளும்.. நாங்கள் எப்போது இனி ஒன்றாக திறந்த சன்னலின் மீது சாய்ந்து இருப்போம் நிலவொளி எங்கள் ஒளிரும் கண்ணீர்த் துளிகளை உலரச் செய்யும் போது சீனக் கவிஞர் டூ ஃபூவின் கவிதை சங்க காலக் கவிதை போல இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் படித்த சத்திமுத்தப் புலவரின் பாடல் ஞாபகம் வந்தது...

காலம் வெளி கடந்து

    காலம் என்றால் என்ன                          அது ஒரு பூ                                  அந்தப் பூவுக்குள்                                      ஒரு உலகம் இருக்கிறது                                                 மகிழ் ஆதன் ஊழி என்று ஒரு சொல் உண்டு. அது ஒரு நீண்ட காலப் பகுதியைக் குறிக்கிறது. யுகம் என்று சொல்கிறோம் இல்லையா? ஊழி தோறு ஊழி ஒருவன் என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி சொல்லும்.  காலம் என்பது நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஒரு கரிய நிழல் போல. அது நிலை பெயராத ஒன்றா அல்லது தொடரும் ஒரு இயக்கமா என்பதில் குழப்பம் வருகிறது. அது அசைவது கிடையாது. அது ஒரு மெளன சாட்சி என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறது. கண்ணுக்கு ம...

தூக்கம் உன் கண்களை

 தூங்கும் நேரம் தவறிப் போனால் அதைப் பிடிப்பது கடினம். ஊரெல்லாம் துஞ்சுகிறது. உலகெல்லாம் நள்ளிருள் சூழ்கிறது. தூக்கம் வருவது இல்லை. எண்ணங்கள் வந்து சூழ்கிறது. இரவைக் கடத்துவது கடினமாகி விடுகிறது. Sleep dwell upon thine eyes, peace in thy breast. Would I were sleep and peace so sweet to rest. அது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் வரும் வசனம். காதல் வயப்பட்ட ரோமியோ அவளைப் பிரிந்து செல்லும் போது இப்படிச் சொல்கிறான். காதல் தூக்கத்தையும் நிம்மதியையும் பறித்து விடுகிறது. எனவே தூக்கமும் அமைதியும் அவளுக்கு வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறான். தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்  உன் ஹ்ருதயத்தில் சாந்தி இளைப்பாறட்டும். அந்தத் தூக்கமும் அமைதியும் நானாக இருந்தால்… இது அம்பிகாபதி என்ற 1937ம் வருட திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பேசும் வசனம். இந்த வசனத்தை எழுதியவர் இளங்கோவன். படத்தை இயக்கியவர் எல்லிஸ் ஆர் டங்கன். அம்பிகாபதி கவிஞன். கம்பரின் மகன். ஆனால் இந்தப் படத்தில் எம் கே டி கவிதையைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அமராவதியாக நடிக்கும் எம் ஆர் சந்தானலட்சுமியை அடிக்கடி காதல் பார...

தொலை தூரம் சென்று விடாதே 2

சென்ற பதிவின் தொடர்ச்சி......  தீவிலேயே அழகான ஒரு பெண்ணை மரியோ நேசிக்கிறான். நேசம் வளர நெருடாவின் கவிதைகள் உதவுகிறது. காதலியிடம் அந்தக் கவிதைகள் எல்லாம் தான் எழுதியதாகவே காட்டிக் கொள்கிறான். நெருடாவுக்கு எல்லாம் தெரியும். தபால்காரனின் காதலுக்கு தனது கவிதைகள் உதவியதில் அவருக்கு உள்ளூர மகிழ்ச்சியே. இருந்தாலும் மரியோவிடம கேட்கிறார். நான் எனது காதலிக்காக எழுதிய கவிதையை நீ எப்படி உனது காதலிக்கானதாகக் கொள்ளலாம்?. அது எனது எழுத்தைத் திருடுவது ஆகாதா என்று. மரியோ சட்டெனச் சொல்கிறான். கவிதை எழுதியவருக்கு உரியது இல்லை. எவருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்கு உரியது. காதல் மரியோவை சிந்தனை வயப்பட்டவனாக ஆக்குகிறது. மனதில் சொல்ல முடியாத ஒரு சோகத்தை ஏற்றுகிறது. அவனது காதல் ஏற்று கொள்ளப்படுகிறது. என்றாலும் காதலியை வளர்த்தெடுத்த அத்தை திருமணத்திற்குக் குறுக்கே நிற்கிறாள். எப்படியோ சம்மதம் பெற்று நெருதா சாட்சிக் கையெழுத்து இடத் திருமணம் நடைபெறுகிறது.  திருமண நாளன்று அக்கார்டியன் ஆனந்த இசை இசைக்கிறது. மதுக்கோப்பைகள உயருகின்றன. மகிழ்ச்சியான சேதி வருகிறது. நெருடாவுக்கு தந்த தண்டனை நீக்கப்பட்டு மீண்டு...

தொலை தூரம் சென்று விடாதே

 Don't go far off Don't go far off, not even for a day, because - because - I don't know how to say it: a day is long and I will be waiting for you, as in an empty station when the trains are parked off somewhere else, asleep. Don't leave me, even for an hour, because then the little drops of anguish will all run together, the smoke that roams looking for a home will drift into me, choking my lost heart. Oh, may your silhouette never dissolve on the beach; may your eyelids never flutter into the empty distance. Don't leave me for a second, my dearest, because in that moment you'll have gone so far I'll wander mazily over all the earth, asking, Will you come back? Will you leave me here, dying? Pablo Neruda தொலை தூரம் சென்று விடாதே  தொலை தூரம் சென்று விடாதே அது ஒரு நாள் ஆனாலும் கூட ஏனென்று சொன்னால்.. ஏனென்று சொன்னால்.. எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை ஒரு நாள் என்பது நீண்ட பொழுது நான் காத்திருப்பேன் காலியான ஸ்டேஷனில் ரயில் எல்லாம் எங்கோ நிறுத்தப்பட்டு உறங்க...

செளடையாவின் வயலின்

 வயலின் என்ற ஒன்றை நான் அறிந்தது வானொலிப் பெட்டி மூலமாக. ஆகாஷவாணி ஒலிபரப்பு துவங்கு முன் ஒரு இசை வரும். அது தான் வயலின் என்று பிற்பாடு தெரிந்தது. அந்த வயலினோடு சுருதி சேர்த்த வண்ணம் ஒரு தம்பூரா ஒலியும் ரீங்காரமிடும். அம்மா காபி போடுவதற்காக கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைப்பார்கள். நீர் மெல்ல மெல்லக் சூடேறி கொதி நிலைக்கு வரும் போது ஒரு ஓசை எழும். சுருதி சேர்த்த தம்பூரா ஒலியோடு மனம் அதை ஒப்பிட்டுப் பார்க்கும். காபி போடும் போது அம்மா ‘பரிமள ரங்கா எழுந்திரும்’ என்று பாடும் பூபாளம் சுருதி சுத்தமாக இருக்கும். சிறு வயதில் கேட்ட ஒரு கச்சேரியில் வயலின் இசை ஒன்று இணைந்து ஒலித்தது. அந்த ஓசை மாறுபட்டு இருந்தது. அது யார் வாசித்தது என்று கேட்டு அறிய முயன்றேன். அந்த ஓலியை எழுப்பியவர் மைசூர் செளடையா என்று அறிந்தேன். அவர் வாசித்தது அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு என்றும் தெரிந்து கொண்டேன். சாதாரணமாக வயலினில் நான்கு நரம்புகள் அல்லது ஐந்து இருக்கலாம். செளடையாவின் வயலினில் ஏழு நரம்புகள் இருக்கும். எனவே தான் நான் கேட்ட மாறுபட்ட ஒலி. எனவே தான் செளடையாவின் வயலின் பாடகர் குரல் ...

நிலவும் நிழலும்

 இளையராஜா, மன்னிக்கவும் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அரசே நடத்திய விழா. சிகரம் தொட்ட தமிழன் என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். சிம்பனி என்ற மேற்கத்திய இசை வடிவத்தை உருவாக்கியதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா. இந்த விழாவில் பேசியவர்கள் பெரிதாக சிம்பனி பற்றிப் பேசவில்லை. உணர்ச்சிப் பெருக்கில் இளையராஜாவால் சரியாகப் பேச முடியவில்லை. இதை அவரே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். மூகாம்பிகை மேல் கொண்ட பக்தி குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனது பற்றி எல்லாம் பேசியவர் ரஜினிகாந்தோடு சேர்ந்து குடித்ததைப் பற்றிக் கூற முயன்றார். சரிவர அதைச் செய்ய முடியாமல் போனது. அவருக்கு உதவி செய்ய ரஜினிகாந்த் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மைக்கைப் பிடித்தார். பெருத்த ஆரவாரம். ரஜினிகாந்த் மகேந்திரன் மற்றும் இளையராஜாவோடு சேர்ந்து குடித்ததை பெருங்கூட்டத்தோடு பகிர்ந்து கொண்டார். எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.  இசைதான் வாழ்வு என்று ஆனபின் இளையராஜா மிகுந்த ஈடுபாடு மற்றும் முனைப்புடன் தனது வேலையைச் செய்தார். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தார். தனிப்ப...

நெஞ்சுக்கு நிம்மதி

 நான் ஹிந்தி மொழியைக் கற்றது பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழியாகத்தான். எங்கே உருது கலந்திருக்கும் என்று நான் அறிந்ததில்லை. ஆறு வருடங்கள் வட இந்தியாவில் இருந்திருக்கிறேன். நான் ஹிந்தி பேசுவது திரைப்படத்தில் பேசுவது போல இருக்கிறது என்று அங்கு உள்ளவர்கள் சொல்வார்கள். எங்கு சென்றாலும் நான் நட்பு பாராட்டுவது கடைநிலை ஊழியர்களோடு. அவர்களுடனான நட்பு எனக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்திருக்கிறது. ஒருமுறை கடவுளைக் குறிப்பதற்கு குதா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். ஜெனரேட்டரை இயக்கும் பையன் என்னைக் கடிந்து கொண்டான். குதா என்று சொல்லாதீர்கள். பகவான் என்று சொல்லுங்கள் என்று சொன்னான். எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. குதா என்பது உருதுச் சொல். கடுமைக்குக் காரணம் அது தான். எழுபது காலக் கட்டங்களில் பெரிதும் விரும்பிக் கேட்டது ஹிந்தித் திரைப்படப் பாடல்கள் தான். அதிலும் ஆர் டி பர்மன் இசையில் கிஷோர் குமார் பாடலைக் கேட்டால் மனம் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடும். இசையும் குரலும் மனதில் உணர்ச்சிகளை மீட்டி விடும். இளமை தரும் மனவெழுச்சி எல்லாம் வார்த்தைகள் காட்ட...

நோக்கி நோக்கி

 குறுந்தொகையில் ஒரு பாடல். வெள்ளிவீதியார் இயற்றியது. செவிலித் தாய் பாடுவதாக அமைந்திருக்கிறது. காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே . பொருளைப் பார்க்கலாம். தலைவி தலைவனுடன் சென்று விட்டாள்.  அவளைத் தேடி ஓடி ஓடி கால்கள் சலித்துப் போயின.  அவள் சென்ற திசையைப் பார்த்துப் பார்த்து கண்களில் ஒளி குன்றியது. இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். அகன்ற வானில் உள்ள நட்சத்திரங்களை விட அளவில் அதிகமானவர்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? செவிலித் தாய்  இப்படித் தனியே நின்று புலம்புகிறாள் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்று. நோக்கி நோக்கி உன்னைக் காண்பன்  நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய  ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும்  நீக்கம் அன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே நோக்கி நோக்கி உன்னைக் காண்பன் என்ற சொல்லில் எத்தனை வேட்கை. மீண்டும் மீண்டும் காண வேண்டுமென்ற மீளாத வேட்கை. உயிரின் உள்ளேயும் உடம்பின் உள்ளேயும் வெளியில் எங்கும் நீக்கம் இன்றி நிற்கும் ப...