வினோத் குமார் சுக்லா செவ்வாய்க் கிழமை 23.12.2025 அன்று மறைந்தார். 88 வயது. ஹிந்திக் கவிஞர். கதைகளும் எழுதி இருக்கிறார். नौकर की कमीञ நெளகர் கீ கமீஸ் (வேலைக்காரனின் சட்டை) அவர் எழுதிய நாவல். இதை மணி கெளல் திரைப்படம் ஆக்கினார். இந்த இரண்டு நாட்களில் இவருடைய நிறைய கவிதைகளைப் படித்தேன். எளிமையான சொற்கள் . கனிந்த கருத்துக்கள். பிரமித்துப் போனேன். Simple is the seal of virtue. குழந்தைகள் சில சமயம் நம்மிடம் கேள்வி கேட்கும். பதில் சொல்ல முடியாது. யோசித்தபடியே நின்று விடுவோம். இவருடைய கவிதைகளைப் படிக்கும் போது அப்படி ஒரு அனுபவம் நேர்கிறது. சின்னதாக கணக்கு போடுவது போல ஒரு கவிதை. रात दस मिनट की होती तो पाँच मिनट में आधी रात हो जाती रातें ऐसी ही बीतीं। दिन दस मिनट का होता तो पाँच मिनट में आधा दिन बीत जाता दिन ऐसे ही बीते। मैं दो दिन की ज़िंदगी जी सकता हूँ एक दिन मैं तुम्हारे पास रहूँगा दूसरे दिन तुम मेरे पास रहना। இரவு என்பது பத்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடத்தில் நடுநிசி ஆகிவிடும் இரவுகள் இப்படியே கழிந்து விடும் பகல் என்பது பத்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடத்தில் நண்...