Like you I love love, life, the sweet smell of things, the sky-blue landscape of January days. And my blood boils up and I laugh through eyes that have known the buds of tears. I believe the world is beautiful and that poetry, like bread, is for everyone. And that my veins don’t end in me but in the unanimous blood of those who struggle for life, love, little things, landscape and bread, the poetry of everyone. Roque Dalton Salvadorian poet உன்னைப் போலவே நானும் நேசிக்கிறேன் நேசத்தை, வாழ்வை, இனிய வாசங்களை, நீல ஆகாயத்தை, ஜனவரி மாதத்தின் நிலப் பரப்பை எனது ரத்தம் கொதிக்கிறது கண்கள் வழியாகச் சிரிக்க முயல்கிறேன் கண்ணீர்த் துளிகளின் மொக்கு மட்டும் அறிந்த கண்கள் அது நான் இந்த உலகம் அழகானது என்று நம்புகிறேன் மேலும் கவிதை, சோறு போல எல்லாருக்கும் ஆனது என்றும் எனது நாளங்கள் சென்று முடிவது ஏகோபித்த குருதியில் வாழ்விற்காக, அன்புக்காக சின்னச் சின்ன விஷயங்களுக்காக நிலப் பரப்புக்காக சோறுக்காக யாவருக்குமான கவிதைக்காக போராடுபவர்களின் ஏகோபித்த குருதியில் தமிழில் தி சந்தானம்