Skip to main content

அடங்கிய சுடர்

கீதாஞ்சலி பதின்பருவத்துப் பெண். வாழ்வதின் சத்தியத்தையும் துடிப்பையம் ஒரு சங்கீத அலையாய் தனக்குள் உணர்ந்தவள். சகல சாத்தியங்களும் நம்பிக்கைகளும் அவளுக்குள்ளே கிளர்ந்து எழுகின்ற பருவம்.. ஆனால் விதிபொல்லாதது  ஆயிற்றே? அவளுக்கு மூளையில் புற்று நோய் என்று கண்டு அறியப்படுகிறது. நோயின் வலியும் சிகிச்சையின் வேதனையும் அவளைப் பற்றுகிறது. சாவு மெல்ல மெல்ல நெருங்குவதை உணருகிறாள் தனிமையும்தூக்கமின்மையும் அவளை வாட்டுகிறது.  அவள் எழுதுகிறாள. கிடைத்த காகிதங்களில் எல்லாம் எழுதுகிறாள். எல்லாம் கவிதைகளாய் எழுதுகிறாள்.

நோயையும் மரணத்தையும் கவித்துவத்துடன் எதிர் கொண்ட இந்த இளம்

கொடியைப் பற்றி  அருண் சத்தா ஒரு அற்புதமான டாகுமண்டரிப்  படம்

எடுத்திருக்கிறார்.




கீதாஞ்சலியின் கவிதைகளின் தமிழாக்கம் இதோ


                                          1


துயிலே!

நாம் கடைசியாக என்று பார்த்தோம்?

நீ யாரோ ஆகி விட்டது போல் தான் தெரிகிறது


இதோ கொஞ்ச நாள் முன்புதான்

நீ எத்தனை நெருக்கமாய் இருந்தாய்?

என் அருகணைந்து கையழைத்து

தூரத்து மலைகளோரம் சென்றாய்


என் கனவுகளில் குடில் அமைக்கவும்

உதவினாய்


எல்லாம் அந்நியமாகிப் போனது

இப்பொது

நீயும் கூடத்தான்


எத்தனை மென்மையான எண்ணங்களை

நானும் நீயும் பகிர்ந்தோம்

எனக்கு இப்போது எஞ்சியது

ஞாபகங்கள் மட்டும்


சில போது சில வார்த்தைகள் மட்டும்

பழைய நாட்களை ஒலிப்பதாய்

ஒரு தாலாட்டாய்

ஒரு பரிவான முத்தமாய்..




நான் இப்போது

இந்த இருட்டில் விழித்தபடி

தனியளாய்..

துயரம் மிகுந்த கண்களுடன்


ஒரு சில நேரம்

நான் தூங்கவும் செய்கிறேன்


ஆனால்

என் கனவுகள் மட்டும்

எங்கோ எட்டாத தொலைவில்



                                       2


எனது உயிராகிய மெழுகுச் சுடர்

எழுகிறது

அடங்குவதற்கு முன்


என்னுடைய முடிவு எப்போது

நான் அறியேன்


மெய்தான்

நான் எனக்காக வருந்துகிறேன்

ஆனால்-- சாவே!

நான் அறியாத நண்பனே!

நான் குதூகலிக்கவும் செய்கிறேன்

உன்னை நினைத்து


என் கண்களின் ஒளி

உனதாகும் அல்லவா?


இப்படித்தான்

அடங்கும் என் ஆன்மா முனகுகின்றது


என் போன்ற நல்ல நண்பர்கள்

உனக்கு வாய்ப்பராக!

இதுவே என் வேண்டுதல்



பக்குவம் கொண்ட மனம் மரணத்தையும் நண்பனாகவே பார்க்கும்.



தி சந்தானம்


Comments

  1. நல்ல கவிதை. ஆனால் சற்று வருத்தமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். மனம் கனத்திருக்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...