இந்தப் பாடலை அறியாதவர்கள் குறைவு. இந்தப் பாடலைக் கடந்து வராத மழலைப் பருவம் அரிது. உதடுகள் பிரித்து மென்பல் சின்ன அரிசியாய் தெரிய தலை அசைத்து தலை அசைத்து மழலைகள் இந்தப் பாடலைப் பாடும் போது அவைகளின் கண்கள் மின்னும். நட்சந்திரங்களைப் போல. ஆட்காட்டி விரல் கட்டை விரலோடு இணையும். மற்ற மூன்று விரல்களும் அசைந்து அபிநயம் செய்யும் அழகே அழகு... ஒரு முப்பது நாற்பது குழந்தைகள் ஒரு சேர ‘மிஸ்’ சொல்லச் சொல்ல இணைந்து சொல்லக் கேட்பது சொர்க்கம்.
என்ன பாடல் அது? “ட்விங்க்கிள் ட்விங்ககிள் லிட்டில் ஸ்டார்.” இந்தப் பாடலை எழுதியது ஜேன் டய்லர் (Jane Taylor - 1783.1824) இது மழலைப் பாடலாகத்தான் நாம் அறிந்தது. ஆனால் நாம் சாதாரணமாக அறியும் நாலு வரிகளைத் தாண்டி
ஒரு பெரிய கவிதையாக விரிகிறது. ஆழமாகப் பொருள் கொள்கிறது. ஓசை நயம் கொண்டு விளங்குகிறது. இந்தப் பாடலை தமிழில் செய்தேன். வருமாறு:
மின்னுக மின்னுக விண்மீனே! சின்னச் சின்ன விண்மீனே!
உன்னைக் கண்டு வியக்கின்றேன்! உன்னைக் கண்டு வியக்கின்றேன்!
உலகின் மேலே வானுயரந்து வைரம் போலே இருக்கின்றாய்
எரியும் சூரியன் மறைந்த பின்னே எதிலும் அவனொளி படராது
உனது சிறிய வெளிச்சம் தான் மின்னுது மின்னுது இரவெல்லாம்
இருளில் நடக்கும் ஒரு பயணி வந்தனம் கூறி நகருகின்றான்
மின்னும் உன்னொளி இல்லையென்றால் வழியை அறிவது எவ்வாறு?
இரவின் கரிய வான் வழியே நீ என் திரையை விலக்கி வருகின்றாய்
உன் விழிகள் கணமும் மூடாது சூரியன் மீண்டும் வரும் வரையில்
இரவில் நடக்கும் ஒரு பயணி உன் சிறிய ஒளியை அறிகின்றான்
நீ எங்கே உள்ளாய் நானறியேன் மின்னும் மின்னும் விண்மீனே
சூழும் இருளின் நடுவினிலே ஒளியாய் சிறிதாய் வழி நடத்து
இருளும் இரவும் இங்கிருக்க இல்லம் எங்கோ வெகு தொலைவில்
என் காலடியில் உன் ஒளி வேண்டும் தொலைவில் என்ன நான் காண?
ஒரு எட்டு .. ஓரெட்டு மட்டும் - ஒளி வேண்டும் உன் ஒளி வேண்டும்
வாழ்க்கை வழியில் சேல்லும் போது ஒரு சிறிய வெளிச்சம் தானே நம்மை
வழி நடத்துகிறது?
தி சந்தானம்
Wow..
ReplyDeleteஇந்த rhymesக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்களா!!! தெரிந்து கொண்டேன். நல்ல பதிவு.
ReplyDeleteஇப்பொழுது படிக்கையில் nursery rhymes வேறு விதமாக ஆழமான பொருள் தருகிறது
Delete