Skip to main content

குரல் கொடு

 “அன்மோல் கடீ “( விலை மதிப்பில்லாத கடிகாரம்) என்று ஒரு ஹிந்தித் திரைப்படம். 1946ம் வருடம் வெளிவந்தது.இதன் இசையமைப்பாளர் நெளஷாத் அலி. மேதை. தனித்தனமை கொண்டவை இவர் இசையமைத்த பாடல்கள். இவரது பாடல்களைக் கேட்டால் நெஞ்சிலே ஏக்கம் எழும். முடிவற்ற சோகத்தில் கண்களில் நீர் கட்டும். தடையற்ற ஆனந்தத்தில் உள்ளம் துள்ளிக் குதிக்கும்.அழகான உணர்வுக் கோலங்கள் இவரது பாடல்கள். நாம் முன்பு குறிப்பிட்ட“ அன்மோல் கடீ” என்ற திரைப்படத்தில் ஒரு பாடல். "ஆவாஜ் தே கஹான் ஹை."பாடியவர்கள் நூர்ஜஹான் மற்றும் சுரேந்திரா. ஒரு பேட்டியில் ஒரு பாடலை எப்படி அமைக்கிறீர்கள என்ற கேள்விக்குப் பதிலளித்த நெளஷாத் இப்படிக்கூறுகிறார்.

"எப்படி ஒரு பாடலை அமைக்கிறீர்கள் என்று கேட்டீர்கள். அன்மோல் கடீ என்று ஒரு படம். மஹபூப் கான் இயக்கியது. அதில் ஒரு பாடல் பெரிதும்  பேசப்பட்டது.

இன்றளவும் நூர்ஜஹான் ஒவ்வொரு மேடைக் கச்சேரிகளிலும் பாடுகிறார். அந்தப் பாடல் “ஆவாஜ் தே கஹான் ஹை துனியா மேரி ஜவான் ஹை” இந்தப்

பாடலுக்கு ஒரு ஆன்மீகத்தன்மை வர வேண்டும் என்று நினைத்தேன். ஆன்மாவிலிருந்தே இப்பாடல் வெளிக்கிளம்பி வருவது போல. ஆனால் என்னால் சரியான மெட்டைக் கண்டடைய முடியவில்லை.இரவு முழுதும் மேலும் கீழும் நடந்தபடி இருந்தேன். பல பாடல்கள் அப்படி பல மைல் தூரம் நடந்த பின்பு மெட்டமைப்பேன். இந்தப் பாடலுக்காக பத்து இரவுகள் இப்படி நடந்திருப்பேன்.

ஒரு இரவு மெட்டை நினைத்தபடியே தூங்கிவிட்டேன். இப்படிப் பல முறை நடக்கும் அல்லவா?  எண்ணம் நினைவு மனத்திலிருந்து நினைவிலி மனத்திற்குக் கடந்து செல்லும். நாம் தூங்குவோம். கனாக் காண்போம்.நினைவிலி மனம் விழித்துக் கொள்ளும். அப்படி மெட்டும் இசைக் குறிப்புகளும் கனவில் என்னை வந்தடைந்தன. நான் விழித்துக் கொண்டேன்.ஹார்மொனியத்தின் முன்னே அமர்ந்தேன். ஆவாஜ் தே கஹான் ஹை என்ற பாடலின் முழுக் குறிப்பையும் எழுதி முடித்தேன்-"


பாடலைக் கேட்கலாம்.நூர்ஜஹானின் குரல் இழைகள் நுட்பமானவை.

உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள். பாடல் வரிகள் தமிழில் கீழே தந்திருக்கிறேன்





பெண்

குரல் கொடு. நீ எங்கே இருக்கிறாய்?

எனது உலகம் இளமையாக இருக்கிறது

நம்பிக்கை எனது மனதில் குடியிருக்கிறது.

எனது உலகம் இளமையாக இருக்கிறது


வா.. இரவு சென்று கொண்டிருக்கிறது

நிலவின் திருமண ஊர்வலம் போல

நடசத்திரங்கள் வானில் அணி அணியாக

அந்தக் கூட்டத்தில் நீ எங்கே இருக்கிறாய்?

எனது உலகம் இளமையாக இருக்கிறது


ஆண்


எனது விதி இரவின் கரிய மசியால் எழுதப்பட்டிருக்கிறது

அமைதி இல்லாத எனது உறக்கத்திற்கு நட்சத்திரங்களே சாட்சி

நான் இங்கே அழிந்து கொண்டிருக்கிறேன்

நீ எங்கே அமைதியுடன் இருக்கிறாய்?

வானம் வலி உணராது இருக்கிறது

குரல் கொடு… நீ எங்கே இருக்கிறாய்


தி சந்தானம்


Comments

  1. Song very nice. To enjoy the meaning translation helped. Going back to yesteryears to dig out the treasure.
    Hats off Santhanam

    ReplyDelete
  2. Mohd Rafi முந்தைய பாடகர் அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...