பெரி கோமோ அமெரிக்கப் பாடகர். எனக்கு இவரைப் பற்றி தெரியாது."நடசத்திரங்களை உன் கண்களுக்குள் வாங்கி விடாதே” என்று ஒரு பாடல்.பெரி கோம் பாடியது. இந்தப் பாடல் எனக்குத் தெரிய வந்தது. எப்படி என்றால் அ முத்துலிங்கம் மூலமாக. அ.முத்துலிங்கம் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர். நுட்பமான எழுத்தாளர். கனடாவில் இருக்கிறார். ஒரு கதையில் இந்தப் பாடலைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இவருடைய கட்டுரைகள் கதை போலவும், கதைகள் கட்டுரை போலவும் சுவாரசியம் குன்றாமல் இருக்கும்.- ஒரு கதையில் இந்தப் பாடலை ஒரு பெண் கிடார் இசைத்தபடி தோட்டத்தில் பாடுவாள்.
இணையத்தில் தேடும் போது இந்தப் பாடல் கேட்க கிடைத்தது.என்ன குரல்..
பாடல் இசையோடு துள்ளாட்டம் போட வைத்தது.1952ம் வருடம் வெளிவந்து
இந்தப் பாடல் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சக்கைப் போடு போட்டிருக்கிறது. வின்ஸ்டன் மூர் என்பவர் எழுதியிருக்கிறார். எளிய வரிகள்.;
மெல்லிய உணர்வுகள். பாடலைத் தமிழில் பார்ப்போம்.
நட்சத்திரங்களை உன் கண்களுக்கு உள்ளே வாங்கி விடாதே
நிலவை உன் இதயத்தை நொறுக்க விடாதே
காதல் இரவில் மலர்கிறது
பகலில் மரிக்கிறது
நட்சத்திரங்களை உன் கண்களுக்கு உள்ளே வாங்கி விடாதே
உன் இதயத்தை என்னிடமிருந்து ஒளிக்காதே
ஒரு நாள் நான் திரும்பி வருவேன்
உனக்குத் தெரியும்
உன்னைத் தவிர வேறொருவரை நான் நினையேன்
பலபல இரவுகள
பலபல நடசத்திரங்கள்
பலபல நிலவுகள் உன் மனதை மாற்றி விடும்
(நிலவை உன் மனதை மாற்ற விடாதே)
நான் பல நாள் விலகிச் சென்றாலும்
மறந்து விடாதே நீ யாருக்குச் சொந்தம் என்று
நட்சத்திரங்கள் வெளிவரும்போது
நினைவுகொள் , நீ எனக்கே என்று
பலபல மைல் தூரம்
பலபல நாட்கள்
பலபல இரவுகள் தனியாக
(பல இரவுகள தன்னந் தனியே)
உன் இதயத்தைக் காத்திரு
நாம் பிரிந்து இருக்கும் போது
நான் இல்லாத போது
நிலவிலே தயங்கி விடாதே
இனி பாடல்
தி சந்தானம்
Very lively song supported with music. Meaning of the song is thinkable. Very nice.
ReplyDeleteThank you Ram
Delete