சில பாடல்கள் பிடித்து விடுகிறது.. இசையோ குரலோ எதுவோ பிடித்து விடுகிறது. நமக்கு சிலரைப் பிடிக்கும். அவருக்கு ஒரு பாடல் பிடித்தால் நமக்கும் பிடித்து விடும். பத்து பனிரெண்டு வயதில் நமது விருப்பங்கள் அப்படித்தானே? என்னுடைய தாய் மாமனுக்கு அந்தப் பாடல் பிடிக்கும்.
அது எந்தப் பாடல்? சொல்கிறேன். “மாமன்மார் மூவர் தம்பி” என்று அம்மா
அடிக்கடி பாடுவார். எனக்கு அன்பான மூன்று மாமன்கள். அவர்களில்
எல்லோருக்கும் இளையவருக்குத்தான் நான் சொல்லப் போகும் பாடல்
பிடிக்கும். மாமா மதுரைக்கு வருவார். வருடத்தில் ஓரிரு முறை. பூனைக்குட்டிகளைப் போல் அவரைச் சுற்றிச் சுற்றி வருவது எங்கள் வழக்கம். தின்பதற்கு வாங்கி வந்ததைத் தருவார். அப்படி ஒருமுறை வந்த சமயம் பாடல் எங்கோ ஒலித்தது. அது “பால் போலவே “என்று தொடங்கியது. மாமா ஒரு கணம் காதில் வாங்கினார். அந்தப் பாடல் வந்த திசையை நோக்கி நடந்தார்-வழக்கம் போல நானும் அவர் பின்னால் நடந்தேன்- பாடல் முழுதும் கேட்டு ரசித்தார். நானும்.
பாடல் காட்டிய உணர்வுகளோ இசை நுணுக்கமோ அப்போது புரியவில்லை.-
இப்போது கொஞ்சம் புரிகிறது. கேட்டால் இனிக்கிறது. மலையில் அந்தப் பெண்
பாடுகிறாள். பனி மூட்டத்தின் நடுவே பாடுகிறாள். தனது தலைவனை எண்ணிப் பாடுகிறாள். தன் தனிமையை உணர்ந்து பாடுகிறாள். தென்றலோடும் நிலவோடும் கிளக்கிறாள். “பால் போலவே” என்று குரல் உயர்ந்து எழுகிறது.
நாளை இந்த வேளை பார்த்து ஒடி வா நிலா. என்று பாடியதும் புல்லாங்குழல்
கனிந்து ஒலிக்கிறது. என்ன சொல்வது? பாரதியின் வரிகள்தான் நினைவில்
வருகிறது.
குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்
கொம்பினின்றும் வருகுவதோ?-வெளி
மன்றினின்று வருகுவதோ?-என்தன்
மதி மருண்டிடச் செய்குதடி
உண்மை. மதி மருண்டுதான் போகிறது. "காதினில் அமுது நெஞ்சினில் நஞ்சு." உணர்ந்து பாடுகிறார் சுசீலா அம்மையார். நயமான தமிழ் வரிகளை. இத்தனைக்கும் இவர் தாய் மொழி தெலுங்கு. நல்ல இசைக் கோவை. மறக்க முடியாத பாடல்.-
என்னுடைய ஐந்து வயதில் வரத மாமா தலை வாரி சிண்டு போட்டு விட்டு, பொட்டு வைத்த முகமோ பாடியதும், பல சமயங்களில்அஞ்சாறு ரூபாய்க்கு மணி மாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி பாடியதும் ஆயிரம் தடவையாவது குழந்தைகள்ட்ட சொல்லிருப்பேன். கடைசி வரை மாமாகிட்ட, அஞ்சாறு ரூபாய்க்கு மணி மாலை கேட்டுருக்கேன். சிரிச்சுண்டே போவா. ரொம்ப எமோஷனல் ஆக்கிட்ட பழய நினைவுகளைத் தோண்டி..
ReplyDeleteஎனக்கும் அப்படியே. பல நினைவுகள் பாசக்காரர்களைப் பற்றி.
Deleteபாட்டு மட்டுமா, நடிகர்களப் பிடிக்கறதுலாமும் பெரியவங்களப் பாத்துதான். நம் வீட்டு தாக்கத்தால், இன்று வரை ஒரு எம் ஜி ஆர் படம் தியேட்டரில் பாத்ததில்லை. டீவியில் மற்றவர் பார்க்கும் போது அங்கு இருந்தால் ஐந்து பத்து நிமிடம் அவ்வளவுதான்.
ReplyDeleteஅப்படியா?
Deleteமுக்ய காரணகர்த்தா அண்ணா. ஆனா அம்மா எம்.ஜி.ஆர் படமும் பார்த்திருக்கா. அம்மாக்கு மசாலாவும் பிடிக்கும்.
Deleteஎனக்கு என் அண்ணா குமார் ஞாபகமாக இந்த பாடல் பிடிக்கும்.
ReplyDeleteமுத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி
பிறந்து வந்தோம்
ஒவ்வொருவருககும் ஒரு ஞாபகம். பாசம் தீர்ந்து விடுமா என்ன?
Deleteநல்ல பாடல், நல்ல எழுத்து ��
ReplyDeleteநன்றி
Deleteஅற்புதமான பாடல் பி சுசீலாவின் உச்ச ஸ்தாயில் மனதை கிரங்க அடிக்கும் இசை சொல்லவும் வேண்டுமோ
ReplyDeleteசிவாஜி மூன்றெழுத்து
MSV மூன்று எழுத்து
AVM மூன்றெழுத்து
நன்றி கண்ணன். மூன்று எழுத்தாக அடுக்கி விட்டீர்களே! ஆமாம் P சுசீலா அனாயசமாக மேலே உலவி வருவார்
Deleteஅருமையான பாடல். அருமையான பழைய நினைவுகள். பாரதியின் பாடல் நல்ல சேர்க்கை. பாடலை மறுபடியும் கேட்டேன். எங்கோ அழைத்துச் சென்று விட்டது.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
நன்றி ராம் படித்ததற்கு.கேட்டதற்கு.
Deleteநினைவுகளும் பாடல்களும் எங்கோ கொண்டு செல்பவைதானே?
அருமையான பதிவு. பதிவின் சுவாரஸ்யம் அதை இன்னும் சற்று நீட்டித்திருக்கலாமோ என்று தோன்றியது .
ReplyDeleteநன்றி நண்பா. உன் யோசனையை ஏற்கிறேன்
Delete