
யூட்யூப் ஒரு மாயம். கணத்தில் கால வெளியைக் கடந்து பின்னோக்கி இட்டுச் செல்லும் மாயம். இளமையில் நம்மோடு உறவாடிய பாடல்களை மீட்டு எடுத்து வரும் மாயம். நினைவிலிருந்து நழுவிச் சென்ற ஒரு பாடலைக் கண்டடைந்தேன். இந்தப் பாடலுக்கு இசை குமார். குமாருடைய இசையில் ஒரு மென்மை இழையோடும். மரங்கள் அடர்ந்த காட்டின் வழியே செல்லும் ஒற்றைப் பாதை. வண்டுகளின் ரீங்காரம். தொலைவில் சலசலக்கும் நீரோடையின் மெல்லிய ஓசை. இப்படித்தான் குமாரின் இசையை உணர முடிகிறது.
இந்தப் பாடலைக் கேளுங்கள்
அருமையான இசை. ரசிக்கத்தக்கது
ReplyDeleteநன்றி ராம் கேட்டதற்கு
ReplyDeleteஅருமையான பாடல். சிலோன் ரேடியோ வில் அடிக்கடி கேட்போம்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி
Delete