டாமஸ் ட்ரான்ஸ்ஃபார்மர்
இவர் ஸ்வீடன் தேசத்துக் கவி. நோபல் பரிசை வேன்றிருக்கிறார்.
1931ம் வருடம் பிறந்தார். 2015ம் வருடம் மறைந்தார். நிலத்தில் தோண்டும் போது பீரிட்டு வரும் நீரைப் போன்றது இவரது கவிதைகள். அழுத்தமான படிமங்கள். ஒரு கவிதையைத் தமிழாக்கிப் பார்க்கலாம்.
பாதி முடிந்த சொர்க்கம்
ஏமாற்றம் தனது பாதையை விட்டு விலகுகிறது
துயரம் தனது பாதையை விட்டு விலகுகிறது
கழுகு பறக்கும் பாதையை விட்டு விலகுகிறது
ஒளி ஆர்வத்துடன் வெளியே பாய்கிறது
நமது ஓவியங்கள் பகலொளியைக் காண்கின்றன
பனி யுகத்தின் சிகப்பான மிருகங்கள்
யாவையும் சுற்றிலும் பார்க்கின்றன
நாம் நூறு நூறாக வெய்யிலில் நடக்கிறோம்
ஒவ்வொரு மனிதனும் பாதி திறந்த கதவு
எல்லோருக்குமான அறைக்கு இட்டுச் செல்லும் கதவு
நமக்கு கீழே முடிவற்ற நிலம்
மரங்களின் ஊடே பளபளக்கும் தண்ணீர்
பூமியின் கண்ணாடி சன்னலாக ஏரி
டாமஸ் ட்ரான்ஸ்ஃபார்மர்
மூலம் ஸ்வீடன்
ஆங்கிலம் வழித் தமிழில்
தி சந்தானம்
Comments
Post a Comment