Skip to main content

என்னை எடுத்து--

 பள்ளியில் தமிழ் படித்தேன். பின்பு ஏனோ கல்லூரியில் முதல் மொழியாகத் தமிழைத் தேர்வு செய்யவில்லை. "யாயும் யாயும் யாயாகியரோ" என்று சங்கத் தமிழை என் நண்பர்கள் படித்தார்கள். நான் படித்ததோ ஹிந்திக் கவிதைகள்.

சங்கத் தமிழை படிக்காதது ஒரு குறை. அந்தக் குறை தனிப்படத் தேடித் தேடிப்

படிப்பதில் தீருகிறது.


ஐங்குறுநூறில் ஒரு பாடல் அம்மூவனார் என்ற புலவர் இயற்றியது. அது நெய்தல் நிலப் பாடல்-. தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்திரூக்கிறது. அந்தப் பாடல் வருமாறு


கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழங்கப்

பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும

துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன

வீங்கின மாதோ தோழி, என் வளையே.: 


இதன் பொருளைப் பார்க்கலாம்


தலைவி கூறுகின்றாள்-

தோழி! சங்குகள் கடற்கரையில் சுழல்கின்றன. கடல் அலைகள் ஆரவாரம் செய்கின்றன. ஒலி மிகுந்த துறையிலிருந்து, மரக்கலங்கள் விரைந்து செல்கின்றன- அந்தக்  குளிர்ந்த துறையின் துறைவன் என்னைப் பிரியும் பொழுது என் வளையல்கள் நெகிழ்கின்றன.  அவன் வரும் பொழுது என் கைகள் பருத்து விடுகின்றன. வளைகள் நெகிழாது நிற்கின்றன.


இந்த சங்க காலப் பாடல் கொண்டு வந்த சூழல் ஒரு பழைய திரைப் பாடலை

நினைவு படுத்தியது. மனதைப் பறித்துச் சென்ற நாயகன் பிரிந்து சென்றதற்கு

நாயகி வருந்திப் பாடுவதாக அந்தப் பாடல்   அழகான பாடல் வரிகள். நல்ல இசை- நெஞ்சை எடுத்து நெருப்பினில்வைத்துச் சென்றவனை நினைத்துப் பாடும் பாடல். பி.சுசீலாவின் குரலில். தான் எத்தனை பாவம். அறுபதுகளில் பலருக்கு இந்தப் பாடல் பிடிக்கும்.  இப்போது கேட்டாலும் பிடிக்கும்


கேட்கலாம்-



Comments

  1. மதி :
    அருமை.
    படகோட்டி படத்தில் அனைத்து பாடல்களும் வாலி.
    இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி.
    இதை ஐங்குறுநூறில் நீ இணைத்தது அதனினும் அருமை.

    ReplyDelete
  2. மதி : 2).
    Mrs. ஜெயந்தி குறுந்தொகை பாடல் வைத்து எழுதிய
    கதை வந்ததா, படித்தாயா.

    ReplyDelete
    Replies
    1. படித்தேன். உனக்கு அனுப்புகிறேன்

      Delete
  3. Sorry for the sodhappal. Edit panna option illama delete panna vendiyadhachu.

    நெகிழ்ந்து விழும் வளையல சேட்டுகிட்ட வச்சுறப் போறான்.. உஷாரா இரும்மா தலைவி!! எமோஷனக் கொற..
    எமோஷனக் கொற ..

    ReplyDelete
  4. நானும் காலேஜ்ல தமிழ் இல்ல, Sanskrit. நீ ஹிந்தி ப்ரசார் சபா எக்ஸாம் பாஸ் பண்ணி ஹிந்தி கத்துண்ட நெனச்சேன். அக்கா அப்டித்தானே? அக்காக்கும் உனக்கும் ஒரு அழகான bond உண்டுல்ல?

    ReplyDelete
    Replies
    1. பிரசார் சபா பரிட்சையும் பாஸ் செய்தேன். மத்யமா வரை. அக்காவோட.. சொல்ல வரல.. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. Great soul.

      Delete
  5. Aarubathilum aasai varum nalla Tamil padika yes.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள். படிக்கும் ஆர்வம் இருந்தால் போதும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...