எனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதைக் கருத வேண்டுகிறேன்.
ஒரு ஹங்கேரியக் கவிதை. அதன் தலைப்பு மஞ்சள் ரிப்பன். ஆங்கிலத்தில் இருந்ததன் தமிழாக்கம் செய்தது இவ்வாறு.
நான் வீடு திரும்புகிறேன்
என் தண்டனைக் காலம் முடிந்தது
இப்போது எது எனது எது எனதல்ல
என்று தெரிந்து கொள்ள வேண்டும்
எனது கடிதம் உனக்குக் கிடைத்திருக்கக் கூடும்
நான் வெகு சீக்கிரம் விடுதலை ஆகி விடுவேன்
என்றால் உனக்குத் தெரியும்
நீ என்ன செய்ய வேண்டும் என்று
இன்னமும் நீ என்னை விரும்பினால்
அந்தப் பழைய நெடிய மரத்தைச் சுற்றி
ஒரு மஞ்சள் ரிப்பனை நீ கட்டி விட வேண்டும்
நெடு நாட்கள் ஆகிவிட்டது
நீ இன்னமும் என்னை விரும்புகிறாயா?
ஒரு வேளை மரத்தைச் சுற்றி கட்டிய
மஞ்சள் ரிப்பனை நான் காணவில்லை என்றால்
நான் பஸ்ஸிலேயே அமர்ந்து இருப்பேன்
மறந்து விடு , பழியை என் மீது போட்டு விடு
இது பஸ் டிரைவருக்கு
ஒரு வேளை மரத்தைச் சுற்றி கட்டிய மஞ்சள் ரிப்பனை நான் காணவில்லை என்றால்...
என் மேல் கவனம் வையுங்கள்
என்னால் அந்தக் காட்சியைக் காண முடியாது
நான் இன்னமும் சிறையிலேயே இருப்பேன்
சிறையின் சாவி எனது அன்பிடம் இருக்கிறது
ஒரு எளிய மஞ்சள் ரிப்பன்
அது தான் தேவை
என்னை விடுதலை செய்ய
என்ன ஆயிற்று இப்போது?
எல்லோரும் கை தட்டுகிறார்கள்
என்னால் நம்ப முடியவில்லை
நூறு நூறு ரிப்பன்கள்
மரத்தைச் சுற்றி கட்டியிருப்பதைப் பார்க்கிறேன்
நான் மகிழ்கிறேன்
நீ இன்னமும் என்னை விரும்புகிறாய்
நான் வீடு திரும்பினேன்
இந்தக் கவிதை பாலு மகேந்திராவிற்கு பெரிய உந்துதலாக இருந்திருக்க வேண்டும். யாத்ரா திரைக்கதை அமைக்கும் போது.
தி சந்தானம்
நல்ல கவிதை. ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ராம்
Deleteஇருக்கலாம். ஆனால் படம் ஒரு அற்புதமான கவிதை
ReplyDeleteஆமாம் ஆர்க்கே. ஒரு உன்னதமான கவிதையைப் படித்த உணர்வு , திரைப்படத்தைப் பார்த்த போது
DeleteMathi : 👌🏻
ReplyDeleteThank you
Deleteவிக்கியாண்டவர் சொல்றார், யாத்ரா யெல்லோ ஹேண்ட்கர்ச்சீஃப் என்ற ஜப்பானிய படத்தை தழுவி எடுக்கப்பட்டதென்றும், அந்த ஜப்பானிய படம், நீ சொல்லும் மஞ்சள் ரிப்பன் போயமால் இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்ட படமென்றும்.
ReplyDeleteஇருக்கட்டுமே. ஒரு தீபம் இன்னொரு தீபத்தை ஏற்றட்டுமே. யாத்ரா படம் ஆர்க்கே சொன்னது போல ஒரு நல்ல கவிதை. மஞ்சள் ரிப்பன் ராம் சிலாகித்தது போல ஒரு நல்ல கவிதை.
Deleteஎனக்கு எஞ்சியது யாத்ரா குறித்து நல்ல நினைவுகள்.
நன்றி ஜயந்தி படித்ததற்கும் தகவலைப் பகிர்ந்ததற்கும்
Delete