Skip to main content

நண்பனாகி

 ரஷ்ய எழுத்தாளர்களை வெவ்வேறு வயதில் படித்திருக்கிறேன். டால்ஸ்டாய், செகாவ், தாஸ்தயவோஸ்கி போன்ற எழுத்தாளர்களைப் படிக்க வாய்த்திருக்கிறது. அதாவது அவர்களது முக்கியமான படைப்புகளை. துர்கனேவ் என்ற ரஷ்ய எழுத்தாளரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். இவருடைய Fathers and Sons முக்கியமான படைப்பு என்று சொல்வார்கள். படித்ததில்லை.


சமீபத்தில் துர்கனேவின் கவிதை ஒன்று படிக்கக் கிடைத்தது. கவிதைகளையும் கவிதை போன்ற தருணங்களையும் மனம் தவற விடுவதில்லை. இந்தக் கவிதையின் ஆங்கில வடிவத்தையும் நான் அதை தமிழாக்கம் செய்ததையும் கீழே தருகிறேன்.

A prisoner, condemned to confinement for life, broke out of his prison and

took to head-long flight.... After him, just on his heels flew his gaolers

in pursuit.


He ran with all his might.... His pursuers began to be left behind.


But behold, before him was a river with precipitous banks, a narrow, but

deep river.... And he could not swim!

A thin rotten plank had been thrown across from one bank to the other.

The fugitive already had his foot upon it.... But it so happened that just

there beside the river stood his best friend and his bitterest enemy.

His enemy said nothing, he merely folded his arms; but the friend shrieked at the top of his voice: 'Heavens! What are you doing? Madman, think what you're about! Don't you see the plank's utterly rotten? It will break under your weight, and you will inevitably perish!'

But there is no other way to cross ... and don't you hear them in pursuit?' groaned the poor wretch in despair, and he stepped on to the plank.

I won't allow it!... No, I won't allow you to rush to destruction!' cried the zealous friend, and he snatched the plank from under the fugitive. The

latter instantly fell into the boiling torrent, and was drowned.

The enemy smiled complacently, and walked away; but the friend sat down on the bank, and fell to weeping bitterly over his poor ... poor friend!

To blame himself for his destruction did not however occur to him ... not for an instant.

'He would not listen to me! He would not listen!' he murmured dejectedly.

Though indeed,' he added at last. 'He would have had, to be sure, to languish his whole life long in an awful prison! At any rate, he is out of suffering now! He is better off now! Such was bound to be his fate, I suppose!

And yet I am sorry, from humane feeling!'

And the kind soul continued to sob inconsolably over the fate of his misguided friend.

Ivan Turganev


ஒரு கைதி,

ஆயுள் முழுதும் சிறை வாசம் செய்ய

விதிக்கப்பட்டவன்,

சிறையிலிருந்து தப்பி

தலை தெறிக்க ஒடினான்

சிறைக் காவலர்கள் 

அவனைப் பின் தொடர்ந்து ஓடினார்கள் 


கைதி வேகமாக ஓடினான்

அவனைத் தொடர்ந்தவர்கள் மிகவும்

பின் தங்கி விட்டார்கள்


அதோ.. அவன் முன்னால் ஒரு நதி

உயர்ந்ததும் செங்குத்தானதும் ஆன

அதன் கரைகள்

குறுகிய ஆனால் ஆழமான நதி

அவனுக்கு நீந்தத் தெரியாது


ஒரு மெலிதான உளுத்துப் போன கட்டை,

இக்கரையையும் அக்கரையையும் இணைத்திருந்தது

கைதி ஒரு காலைக் கட்டை மேல் வைத்து விட்டான் ஏற்கனவே


என்னவென்றால் நதியின் கரையில் இருவர் இருந்தார்கள்

ஒருவன் அருமை நண்பன்

இன்னொருவன் மோசமான பகைவன்


பகைவன் ஒன்றும் சொல்லவில்லை

கைகளைக் கட்டிக் கொண்டு இருந்தான்

நண்பன் உரத்த குரலில் கத்தினான்

கடவுளே நீ என்ன செய்கிறாய்?

என்ன செய்ய இருக்கிறாய்?

கட்டையைப் பார்

எப்படி உளுத்துப் போய் இருக்கிறது!

உன்னுடைய எடை தாங்காமல் முறிந்து விடும்

நீ உறுதியாக இறந்து விடுவாய்


ஆற்றைக் கடக்க வேறு வழி இல்லையே?

உனக்குத் தெரியாதா?

அவர்கள் துரத்திக் கொண்டு வருகிறார்கள்

பரிதாபமான குரலில் பேசியபடி கைதி

கட்டையில் கால் வைத்தான்


வேண்டாம், நான் விட மாட்டேன் 

நீ அழிந்து போக நான் விட மாட்டேன்

உரக்கக் கூவியபடி நண்பன் கட்டையை உருவினான் 

உடனே சுழித்து ஓடும் நீரில் கைதி விழுந்தான், மூழ்கிப் போனான்


பகைவன் நிறைவோடு புன்னகை செய்தான்

அங்கிருந்து அகன்று விட்டான்

ஆனால் நண்பன் கரையருகே விழுந்து கதறி அழுதான் 

பரிதாபத்திற்குரிய தன் நண்பனுக்காக


அவனுடைய இறப்பிற்கு காரணம் தானே என்று சிறிதும் அவன் உணரவில்லை

ஒரு கணம் கூட


நான் சொன்னதைக் கேட்காமல் போனானே?

கேட்காமல் போனானே?

என்று துயரத்தோடு புலம்பினான்


பரவாயில்லை, அந்தக் கொடிய சிறையில் அவன் ஆயுள் முழுதும் வாடி

இருப்பான்

ஏதோ அந்தத் துன்பம் இப்போது இல்லை

இது நல்லது தான்

அவன் விதி அப்படி 

இப்படித்தான் தோன்றுகிறது

ஆனாலும் நான் வருந்துகிறேன்


இப்படி அந்த நல்ல இதயம் அடக்க முடியாமல் விசும்பியபடி இருந்தது

வழி தவறிய தனது நண்பனின் விதியை நினைத்தபடி 


இவான் துர்கனேவ்


ரஷ்ய மூலம்

ஆங்கிலம் வழியே 

தமிழில்


தி சந்தானம்



Comments

  1. மூழ்கிய கைதி எங்கே சென்றான்.
    இது முடிவா இல்லை தொடக்கம்.

    ReplyDelete
    Replies
    1. இதை நான் யோசிக்கவில்லை. மூழ்கியவன் மூழ்கியே போய்விட்டான் என்று நினைத்தேன். btw நீங்கள் யாரென்று சொல்லலாமா

      Delete
  2. மூல்கியவன் மூழ்கியே போனான் என்று தான் வருகிறது

    ReplyDelete
  3. மிக அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...