இன்று 8 செப்டம்பர்.
"8 செப்டம்பர்" என்ற தலைப்பிலேயே பாப்லோ நெருடா ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அந்த நாளுக்கு என்ன முக்கியத்துவம் என்று தெரியவில்லை.
ஆனாலும் இந்தக் கவிதையை மொழி பெயர்த்தேன்.
8 செப்டம்பர்
இன்று,
இந்த நாள்,
நிரம்பி வழியும் கோப்பை
இன்று,
இந்த நாள்,
பெருகி வரும் அலை
இன்று எல்லாமே
ஒரு ஒட்டு மொத்த பூமிப் பரப்பு
இன்று
புயற் கடல்
ஒரு முத்தத்தால்
நம்மை உயர்த்தியது
எத்தனை உயரம்!
நாம் நடுங்கி விட்டோம்
மின் வெட்டும் பொழுது..
கட்டப் பட்டவர்களாய்
நாம் கீழே கீழே சென்றோம்
கட்டு அவிழாமல் மூழ்குவதற்கு
இன்று
நமது உடல்கள் அகண்டு
பெரிதாகின
உலகின் மூலை வரை வளர்ந்தன
உருண்டன, உருகின..
ஒரு மெழுகின் சிறு சொட்டாக
விழுகின்ற ஒரு எரி நட்சத்திரமாக
நம் இருவருக்கும் இடையில்
ஒரு கதவு திறந்தது
யாரோ முகமற்றவர்
நமக்காக அங்கே காத்திருந்தார்
பாப்லோ நெருடா
தமிழில்
தி சந்தானம்
👌🏻
ReplyDeleteThank you
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி ராம்
Delete