ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் ஒன்று Stray Birds என்பது. அதில் எல்லாம் சின்னச் சின்ன கவிதைகள்.அதிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகளை மொழி பெயர்த்தேன்.
1
நீரில் மீன் மெளனமாக இருக்கிறது
நிலத்தில் மிருகம் சத்தம் போடுகிறது
காற்றில் பறவை கானம் பாடுகிறது
ஆனால்
கடலின் மெளனம்
நிலத்தின் சத்தம்
காற்றில் கானம்
எல்லாம் மனிதருள் இருக்கிறது
2
அலையும் கோடை காலப் பறவைகள்
என் சன்னல் அருகே வருகின்றன
பாடிப் பறந்து செல்கின்றன
படபடத்து இலையுதிர் கால மஞ்சள் இலைகள் பாடல் இன்றித்
தரையில் விழுகின்றன
பெருமூச்சு விட்டபடி
3
பூமியின் கண்ணீர்த் துளிகள்
அவள் புன்னகையை மலர்த்துகிறது
4
படைப்பின் மர்மங்கள் இரவின் இருள் போன்று
அது பெரிது
ஆனால்
அறிவின் மாயைகள்
காலைப் பனி மூட்டம்
5
நீ யார் என்பதை நீ காண்பதில்லை
நீ காண்பதெல்லாம்
உன் நிழலன்றி வேறில்லை
6
அவர்கள் தங்கள் நிழல்களை எறிகிறார்கள்
விளக்கை முதுகில் சுமப்பவர் முன்னே
7
"நாங்கள் சலசலக்கும் இலைகள்
புயலுக்கு மறுமொழி சொல்ல குரல் உண்டு எமக்கு
நீ ஏன் மெளனம் கொண்டாய்?"
"நான் வெறும் மலர் தானே
?
8
ஓய்வு உழைப்புக்கு ஆனது
இமைகள் கண்களுக்கு
ஆனது
9
காய்ந்த நதிப் படுகை
அதன் கடந்த காலத்திற்கு
யாரும் நன்றி பாராட்டுவதில்லை
10
பறவை மேகமாக விரும்பியது
மேகம் பறவையாக விரும்பியது
11
நீர் அருவி பாடியது
"நான் என் பாடலைக் கண்டு அறிந்தேன்
என் விடுதலையைக் கண்டு அறிந்த போது
சின்னச் சின்ன வெளிச்சப் பொறிகள் வண்ணம் கொண்டு வருகிறது.
இந்தக் கவிதைகளை எல்லாம் மனம் கொண்டாடுகிறது.
தி சந்தானம்

கடலின் இரைச்சல் கூடத்தான் மனிதனிடம் இருக்கிறது. (மனம் கொந்தளிக்கும் போது) . அலையுடன் போட்டி போட வேண்டாமென மீன் அமைதியா இருக்கோ :)
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகடலின் இரைச்சல் கூடத்தான் மனிதனிடம் இருக்கிறது. (மனம் கொந்தளிக்கும் போது) . அலையுடன் போட்டி போட வேண்டாமென மீன் அமைதியா இருக்கோ 😂😂
ReplyDeleteபதிவுக்கு நன்றி ஜெயந்தி
Deleteஆழக் கடலின் கீழே அலைகள் இல்லை. மீன் அமைதி கொண்டு இருக்கிறது.
ReplyDeleteகொந்தளிப்புகளைக் கடந்த மனம் அமைதியிலே நிலை கொள்ளும்
ReplyDelete