Skip to main content

உருகிடும் வேளையிலும்

 தாகம் என்று ஒரு திரைப்படம் 1974 ம் வருடம் வந்தது. மதுரையில சிந்தாமணி தியேட்டரில் ரிலீஸ் ஆனதாக ஞாபகம். முத்துராமன் மற்றும் நந்திதா போஸ் நடித்திருந்தனர். தமிழில் அது ஒரு சோதனை முயற்சி. மதுரை திரைப்பட ரசிகர்கள் அதை தங்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனையாகக் கருதினர்.  விளைவு. படத்தை மூன்று நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டார்கள். முத்துராமன் பார்வையற்றவராக நடித்திருந்ததாக அறிந்தேன்.

எங்கள் கல்லூரி நூலகத்தில கணையாழி, தீபம் போன்ற பத்திரிக்கைகள் படிக்கக் கிடைக்கும். இந்தப் படத்தைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். நந்திதா போஸ் டவுன் பஸ்ஸில் செல்லும் காட்சியில் அவர் மேல் படர்ந்து விலகும் பார்வைகளை எப்படி காமிரா மூலம் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள் என்று சொல்லி இருந்தார்கள். ஒரு பஸ் காட்சியில் காமிரா இப்படி புகுந்து புறப்படுவது அப்போதெல்லாம் பெரிய விந்தை.  இந்தப் படத்தை ஓரு இளைஞர் பார்த்தார். ஒரு காட்சியில் பஸ் சன்னலோரம் அமர்ந்திருக்கும் நந்திதா போஸின் ஒற்றை முடி காற்றில் பறக்கும். இந்த் காட்சியால் உந்தப் பட்டு திரைப்பட இயக்குநர் ஆக விரும்பினேன் என்று சொன்னார். அவர் பெயர் ஜெயபாரதி. பிற்பாடு குடிசை, தேனீர் என்று இரண்டு படங்கள் இயக்கினார். எனக்கு தாகம் படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை. ஆனால் பாடல்களை வானொலிப் பெட்டியில் கேட்க முடிந்தது. படத்திற்கு இசை எம்.பி.ஸ்ரீனிவாசன். தனிப்பட இவர் இசையமைத்த சேர்ந்திசைப் பாடல்களும்  மிகவும் நன்றாக இருக்கும். குரல்களைத் திறம்படப் பயன்படுத்தக் கூடியவர்.  இவரது இசையில் ஜெய பேரிகை கொட்டடா என்ற  பாரதி பாடல் நினைவில் இருந்து நீங்கவே இல்லை. குறிப்பாகப் பயம் என்னும் பேய் தன்னை அடித்தோம் என்ற வரிகளைப் பின் தொடரும் குரல்கள். தென்னம் கீற்று ஊஞ்சலில் என்ற ஜெயகாந்தன் எழுதிய பாடலுக்கு இசையமைத்தது எம்.பி.ஸ்ரீனிவாசன் தான்.


தாகம் படத்தில் இரண்டு பாடல்கள். 


கேட்கலாம்.






Comments

  1. நந்திதா போஸ் யார்னு எனக்கு தெரியாது. சமீபத்தில்தான் கேள்விபட்டேன். பரதனோட சாவித்திரி என்ற படம் போன வாரம் பார்த்தேன். அதில் நடித்திருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? என்ன ரோல்?

      Delete
    2. வி எஸ் ராகவனோட தங்கை. அவ பையன் தான் கிராமத்துக்கு வருவான்

      Delete
  2. விக்கிலயும் கதை விபரம் இல்லை. யூ ட்யூப்லயும் படமில்லை. ஒரே சோதனைதான். 😂😂

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...