Skip to main content

ஒரு கடிதம்

 


"Manchester, 

June 21, 1865


 Dear my heart, see, I am writing to you again. Do you know why? Because I am away from you and whenever I am away from you I feel even closer to you. You are in my mind all the time and I keep talking to you without any response from you, these are the distance and dear, they are very beautiful. While constantly staying together, we start to get so much into each other, in each other’s talk, in the habits, that it is not possible to see anything separately from it. Then small things, habits start taking big forms, irritations start filling up. But as soon as they go away, it all goes away in a moment, like any charisma, the distance brings up love, just like the sun and rain makes little plants. Oh my dear, these days the same charisma of love is happening to me. Your shadows surround me, my dreams are adorned with your scent. I know how these distances have cherished my love, it is decorated.


"There are many women in this world, there are many beautiful women, but that woman is only you, in whose face I can see myself. Whose breath, every single wrinkle of skin proves your love, which is the most beautiful memory of my life. Even all my sufferings and all the irreparable losses that occur in life seem to diminish in the shadow of those sweet memories. I miss those loving expressions of yours, kissing your face, forgetting all the hardships of my life, the pain … Goodbye, my dear. Lots of love and kisses to you and the children … "


மான்செஸ்டர்

ஜூன் 21,1865


அன்பான என் இதயமே. பார், நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன். ஏன் தெரியுமா?  நான் உன்னிடமிருந்து தள்ளி இருக்கிறேன். நான் எப்பொழுதெல்லாம் உன்னிடமிருந்து தள்ளி இருக்கிறேனோ, அப்போதெல்லாம் உன்னிடம் இன்னும் நெருக்கமாக இருப்பதாக உணருகிறேன்.

எல்லாப் பொழுதுகளிலும் நீ என்னுடன் இருக்கிறாய். நானும் உன்னோடு பேசியபடியே இருக்கிறேன். ஏதும் மறுமொழி உன்னிடமிருந்து பெறாமல்.

இந்த தூரங்கள்…இவை எத்தனை அழகாக இருக்கின்றன!  தொடர்ந்து அருகருகே இருக்கும் போது நாம் ஒருவரோடு ஒருவர் பிணைந்து விடுகிறோம்.  ஒருவரோடு ஒருவரான பேச்சில். பழக்க வழக்கங்களில்.

அப்போது எதையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. பின்பு சின்ன விஷயங்கள், சின்னப் பழக்கங்கள் பெரிய வடிவம் கொள்கின்றன. எரிச்சல் வந்து நிரம்பத் துவங்குகிறது. ஆனால் அது மறைந்து விடும் போது கணத்தில் மறைந்து விடுகிறது. ஏதோ ஒரு கவர்ச்சியைப் போல

தூரம் காதலைக் கொண்டு வந்து சேர்க்கிறது. எப்படி சூரியனும் மழையும் சிறு செடி கொடிகளை ஆக்குகிறதோ அப்படி. ஒ! எனதன்பே! இந்த நாட்களில் அது போன்ற காதலின் கவர்ச்சியே எனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய நிழல்கள் என்னைச் சூழ்கின்றன. என்னுடைய கனவுகளை உன்னுடைய வாசனை அணி செய்கிறது. நான் அறிவேன். நம்மிடையே ஆன தூரம் எப்படி நம் காதலை உய்ய வைத்திருக்கிறது என்று.


இந்த உலகிலே பல பெண்கள் இருக்கிறார்கள். பல அழகான பெண்கள்.

ஆனால் யாருடைய முகத்தில் என்னைப் பார்க்க முடிகிறதோ அது நீ தான். யாருடைய ஒவ்வொரு மூச்சும் யாருடைய தோலின் ஒவ்வொரு சுருக்கமும் காதலைச் சொல்கிறதோ அது நீ தான். நீ தான் என் வாழ்விலேயே மிகவும் அழகான ஞாபகம்.

வாழ்வில் நேரும் துன்பங்கள், ஈடு கட்டவே முடியாத இழப்புகள் எல்லாமும் அந்த இனிய ஞாபகங்களின்  நிழலில் மறைந்து விடுகின்றன. உன்னுடைய அன்பான பார்வைகளை நான் இங்கே இழந்து நிற்கிறேன். உன் முகத்தில் முத்தமிட்டு வாழ்க்கைத் துயரங்களையும் வலிகளையும் கடக்கும் கணங்களையும்.


விடை பெறுகிறேன் அன்பே!  நிறைய.. நிறைய.. அன்பும் முத்தங்களும்.. உனக்கும் குழந்தைகளுக்கும்."



அது மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதம்.

தன்னை விட வயதில் பெரியவரான ஜென்னியை மார்க்ஸ் மணந்தார். ஜென்னி பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். ஆனாலும் மார்கஸ்-ஜென்னி திருமணம் எளிமையான முறையில் ஒரு தேவாலயத்தில் நடந்தது.  ஆமாம்.. மார்கஸ் ஒரு எளிய மனிதன் தானே! 


மிகப் பெரிய தத்துவத்தை உலகுக்கு அளித்த அந்த அறிஞன் வாழ்வில் சந்தித்த துயரங்கள் அதிகம். சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டார்.  ஏழ்மையும் அவரை விரட்டியபடியே இருந்தது.  பிறந்த குழந்தைகளை நோய் கொண்டு போனது. வறுமை வாட்டி எடுத்தது. ஜென்னி அவர் மீது மாறாத அன்பு கொண்டவராக இருந்தார். 

மாறும் பருவங்களிலும் மழையிலும் குளிரிலும் நோயிலும் வறுமையிலும் துன்பத்திலும்.அவரை என்றும்  தாங்கிப் பிடிப்பவராக இருந்தார். வாழ்க்கைத் துயரங்களோடு தீரமாகப் போராடினார். 


இத்தகைய பெண்மணிக்கு மார்க்ஸ் தர முடிந்தது அள்ளக் குறையாத அன்பு மட்டுமே. இதற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டு மேலே கண்ட கடிதம்.




Comments

  1. நல்ல பதிவு. அருமையான மொழி பெயர்ப்பு. மார்க்ஸ் பற்றி புதிய தகவல். கடிதத்தின் ஓட்டம் ரசிக்கும்படி இருந்தது.

    ReplyDelete
  2. Wonderful translation.

    There is also a famous (and tragic) letter written by Jenny to Marx . This one reminds me of that letter .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...