சில பாடல்கள் துள்ள வைக்கும். சில அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும். சில பாடல்கள் நமது நிம்மதியை ஒரேயடியாகக் குலைத்து விடும். ஒரு ஏக்கம் வந்து மெல்லத் தழுவிக் கொள்ளும். அப்படி ஒரு பாடலை சமீபத்தில் கேட்க வாய்த்தது. இந்த வாய்ப்பு அமையக் காரணம் தம்பி சேகர். ஓரு காலத்தில் கேட்டு காலப் போக்கில் நினைவிலிருந்து நழுவிய அந்தப் பாடலை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தான். நதியைத் தேடி வந்த கடல் என்று ஓரு திரைப்படம். மகரிஷி என்பவர் எழுதிய கதை திரைப்படம் ஆகி இருந்தது. இந்தப் படத்திற்கு இசை இளையராஜா. துவக்க இசையைக் கேளுங்கள். முடிந்தவுடன் எங்கேயோ என்று வந்து சேரும் சுசீலாவின் குரலைக் கேளுங்கள்.
தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும் தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும் விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...
👌🏻 அருமை
ReplyDelete👌🏻அருமை
ReplyDeleteThank you Mathi
ReplyDeleteஇந்த ராகத்தின் பெயர் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். அருமையான பாடல்.
ReplyDeleteநதியைத் தேடி வந்த கடல். மகரிஷியின் இந்த நாவலை மாத இதழில் நான் பார்த்தது பி 13 ல் நீங்கள் இருக்கும் போது என நினைக்கிறேன். அக்காக்களால் தடை செய்யப் பட்ட புக். பல வாரத் தொடர்களுக்கும் தடை உண்டு. ஆனால் அதையெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக படித்து ஏன் தடை செய்தார்கள் எனப் புரியாமல் வியந்ததுண்டு. இந்த நாவல் இப்ப வரை படிக்கல. ஜெய் மம்மியோட லாஸ்ட் படம்ல..
மகரிஷியின் கதைகள் மாறுபட்ட கதைக் கருக்கள் கொண்டிருக்கும். ஆமாம்..ந.தே.வ.க ஜெ வின் கடைசிப் படம்
Deleteநன்றாக இருந்தது
Deleteநன்றி
Deleteபாட்டு நன்றாக இருந்தது. ராகம் அளவுக்குத் தெரியவில்லை. கதை படித்த நினைவில்லை.
ReplyDeleteநன்றி ராம். மகரிஷியின் கதைகள் இரண்டு மூன்று திரைப்படம் ஆயின
Delete