ஷெல்லியின் கவிதைகள் செறிவு மிகுந்தவை. பாரதி ஷெல்லியின் கவிதைகளில் மனம் தோய்ந்தவர். தன்னை "ஷெல்லிதாசன்" என்று அவர் அழைத்துக் கொள்வது உண்டு. வாழ்க்கை அவர்கள் இருவரையும் ஒரு இடத்தில் நிலைத்து இருக்க விடவில்லை. ஷெல்லி ஐரோப்பா முழுதும் திரிந்தார். இத்தாலியில் அவர் தங்கியிருந்த நாட்கள் படைப்பு ஊக்கம் மிகுந்த நாட்களாக இருந்தன. அது போலவே பாரதி புதுவையில் இருந்த நாட்களில் தன்னுடைய சிறந்த படைப்புகளை உருவாக்கினார். ஷெல்லி இருபத்தொன்பது வயதிலேயே மறைந்தார்.
"சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனும் ஆற்றினில் வீழ்ந்தான்
பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்"
என்று பாடிய பாரதி முப்பத்து ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்தார்.
பாரதி தன்னுடைய சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளார்.
அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.
பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொளியே சூறை அமுதே
கண்ணம்மா
வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புதுவயிரம் நான் உனக்கு
காணும் இடம் தோறும் நின்றன் கண்ணின்
ஒளி வீசுதடி
மாணுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா
வானமழை நீ எனக்கு வண்ண மயில் நான்
உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல்லழகே உறுசுவையே கண்ணம்மா
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு
போதமுற்ற போழ்தினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா
மேலே கண்ட பாடலை பாரதி இப்படி மொழி பெயர்த்து உள்ளார்.
Though to me the flowing light
And I to thee discerning sight
Honied blossom thou to me
Bee enchanted I to thee
Oh Heavenly lamp with shining ray
O Krishna Love O Nectar spray
With faltering tongue and words that pant
Thy glories here I strive to chant
Though to me the harp of gold
And I to thee the finger hold
Necklace shining though to me
New set diamond I to thee
O mighty Queen with splendor rife
O Krishna Love, O well of life
Thine eyes do shed their light on all
Wherever I turn, their beams do fall
Rain that singeth thou to me
Peacock dancing, I to thee
Though to me the juice of grape
And I to thee the cup agape
O spotless beauty, Krishna bright
Perennial fount of deep delight
O Love, the face hath grace divine
For there, the deathless truth doth shine
Deep attraction though to me
Living magnet I to thee
Though to me the Veda pure
And I to thee the Knowledge sure
Voice vibrant of the world's desire
O Krishna Love, all quickening fire
In utter stillness, here I see
Thy face that yieldeth ecstacy
எத்தனை செறிவாக இருக்கிறது. ஒவ்வொரு வரி முடிவிலும் எதுகை தவறவே இல்லை.
பாரதி தனது பாடல்களில் சிலவற்றை மட்டுமல்ல. நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் சிலவற்றையும் மொழி பெயர்த்துள்ளார்.
சான்றாக இது..
O dear soul of Mine,
O great Life that made and pierced and ate and spouted and measured
All this immense space,
O Glorious Life that made the oceans, dwelt therein and churned
And stopped and broke them,
Thou who art unto the Gods what the gods are unto men,
O Soul unique of all the worlds, whither shall I go to meet
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் என்பார் திருமங்கை ஆழ்வார்.
ஆசை பற்றி அறையலுற்றேன் என்பார் கம்பர். நமக்கும் ஆசை பற்றியது. பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்று. சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன் என்று பாரதியின் ஒரு கவிதை. அதை வருமாறு மொழி பெயர்த்தேன்
Saw Her in the moonlight
And I strode in surrender
Won over my five senses
Killed my desires all
She told me in a whisper
"Labour for a cause
Bother not the result
Lead a life of devotion"
She freed me of my worries
She plucked out all my grief
The light of stars, She made
The wind that blows around
The space around The sky
And in my heart the fount of Joy
நம்மாழ்வார் திருவாய்மொழியில் வரும் ஒரு பாசுரம்.
தானே யாகி நிறைந்து, எல்லா
உலகும் உயிரும் தானேயாய்,
தானே யான் என்பான் ஆகி
தன்னைத் தானே துதித்து,எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே யாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிர்உண்டே
10.7.2
இந்தப் பாசுரத்தை வருமாறு மொழிபெயர்த்தேன்
He is everywhere, overflowing, He Himself
All the world and all living beings
He Himself is me
He Himself adores Himself and to me
He is honey, milk, candy, the elixir,
The Lord of Thirumalirunjolai,
He devoured my life entire
ஷெல்லிதாசனை இன்று நினைந்து அவர் வழியில் நடந்தது நிறைவாக இருக்கிறது.
நமது மொழிபெயர்ப்பின் குறைகளை கற்றறிந்தவர்கள் பொறுத்து அருள்க

Good tribute to mundasu kavi I am Sathanadasan
ReplyDeleteThank you
Deleteதிருவாய்மொழி ஆங்கிலத்தில் பாரதியாரால் மொழிபெயர்க்கப் பட்டது என்பது புதிய செய்தி. சந்தானத்தின் மொழி பெயர்ப்பும் அருமை. ரசிக்கத்தக்கது
ReplyDeleteநன்றி ராம்
ReplyDeleteஅருமை சந்தானம்.
ReplyDeleteநன்றி ஜெயந்தி
ReplyDelete👌🏻 அருமை
ReplyDeleteநன்றி மதி
ReplyDeleteNice to remember Mahakavi on his Memorial day!
ReplyDeleteThank you
DeleteA wonderful tribute to Barathy.
ReplyDeleteI enjoyed your transaction work as well
Thank you Ram Glad to have your feedback on my translations
DeleteExcellent translation of tiruvoimozhi pasuram Anna
ReplyDeleteThank you
Delete